நிறைய பேசுவோம்

Wednesday, September 26, 2012

உயிருள்ள தெய்வங்கள்


உயிருள்ள தெய்வங்கள் 
முதியோர் 
இல்லத்தில் 
ஆனால் ..
உயிரற்ற சிலைகள் 
கோவிலின் உள்ளே 
தெய்வங்களாய்

உறக்கம் .. வராத கண்களுக்குள்

Sundarapandian Movie Photos, Stills, Images, Posters
உறக்கம் ..
வராத கண்களுக்குள் 
ஒளிந்திருக்கிறாய் 
நீ ..

இவருக்கும் தாடி இருக்கு அதானோ .

Sundarapandian Movie Photos, Stills, Images, Posters
சுந்தர பாண்டியன் படம் பார்த்தேன் . பாரதி ராஜா படம் போல் வெட்டு குத்து . எல்லோரும் டி.ஆர் யை கிண்டல் செய்வர் இங்கு சசி குமார் வெட்டு பட்டு குத்து பட்டும் எழுந்து சண்டை போட்டு ஜெயிக்கிறார் இம் இவருக்கும் தாடி இருக்கு அதானோ .. படத்தில் வசனங்கள் நன்று ஆனால் படத்தை ஒரு சமூகம் சார்ந்து எடுத்ததுதான் ஏன் என்று புரிய வில்லை ..?

Tuesday, September 18, 2012

நீ தான் தெருமுனையில்விநாயகர் சதுர்த்தி ..
--------------------------
பிள்ளையார் ..
நீ ..
நட்பு கடவுள் ..
போகிற போக்கில் 
ஒரு கும்பிடுவை
போட்டுவிட்டு
வேண்டுதலையும்
போட்டு விடுவோம்
எளிமை கடவுள்
என்றால் ...
நீ தான்
தெருமுனையில்
கூட்டம் இல்லாமல்
ஆரவாரம் இல்லாமல்
காட்சி தரும்
உன்னை ..
வாழ்த்தி வணங்குகிறேன்

Sunday, September 9, 2012

காதல் . மரித்து விடும் ...


பணம் ..
இனித்த போது 
உனக்கு ..
காதல் கசந்தது ..
நாளை ..
பணம் புளிக்கும் 
போது .
காதல் .
மரித்து விடும் ...

அடிக்கடி மின்னலாய்


வெளியே மழை ..
மனமெங்கும் 
நினைவு மழை 
நினைவு சாரலில் 
விட்டு விட்டு 
விழும் தூறலாய் 
உன்..
முகம் ..
அடிக்கடி மின்னலாய் 
மறைவது ஏனோ ..

கடலில் .. முழ்கினால் கூட


கடலில் ..
முழ்கினால் கூட 
கரை சேர்ந்து 
விடலாம் ..
அவள் ..
நினைவுகளில் 
முழ்கினால்..
................

திருமணம் ஆகும் முன் ..


நீ ..
இல்லாத வாழ்க்கை 
எனக்கு இல்லை 
சொன்னது அவள் 
அவளுக்கு ..
திருமணம் 
ஆகும் முன் ..

Thursday, September 6, 2012

கந்தக பூமியை கண்ணீர் பூமி


கந்தக பூமியை 
கண்ணீர் பூமி 
ஆக்கியது..
யார்.. 
அதிகாரிகளா 
முதலாளிகளா 
யாராயிருந்தாலும் 
தண்டிக்க ..
படவேண்டியவர்கள .
நாம் ..
மாறுவோமே
வேண்டாம் இந்த
பட்டாசும் மத்தாப்பும்
இப்போது ..
அதில் தெரிவது
ரத்தமும் சதயும்தான் ..

Sunday, September 2, 2012

உன் ஸ்பரிசம் ..


நினைவுகளில் ..
உன் .. வாசம் 
எப்போதும் ..
வாசத்தில் ..
இதமாக 
உன் ஸ்பரிசம் ..
தொட்டு விட 
வரும் போது 
விட்டு விலகும் 
உன் கைகள் ..
இன்றும் ..
அணைத்து ..
கொள்கின்றன.
நீ ..
தொலைவில்
இருந்த போதும்

Sunday, August 19, 2012

கற்கள் எதற்கு


நான் ..
கட்டபோகும் ..
மாளிகைக்கு 
கற்கள் எதற்கு 
என்னவளின் 
இதயம் மட்டும் 
போதும்

Friday, August 17, 2012

மின்னி மறையும்


மின்னி மறையும் 
மின்னல்களாய் 
அவள் ..
பார்வை ..
என்று ..
இதயம் 
வெடிக்க போகிறதோ ..
இடியாய் ..

Tuesday, August 14, 2012

சுதந்திர தினத்தன்று

இது நான் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிகையில் வெளிவந்தது 

'எல்லோருக்கும் 
விடுதலை 
கூறியவர் 
பறக்க விட்டார்
புறாக்களை 
கிடைத்தது 
விடுதலை 
கூண்டிலிருந்து 
புறாக்களுக்கு ..'
----------

'கம்பி கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..'

உன் .. இடை வெளியில் நான் .. முகம் பார்க்கலாமா ..


உன் விழிகளில் 
உறங்க ..
இடம் தாயேன் 
என்..
உயிரையும் தருகிறேன் 
விலையாக..
உன் ..
இடை வெளியில் 
நான் ..
முகம் பார்க்கலாமா ..
முகம் பார்த்து
தலை ..
வாரி கொள்கிறேன் ..
தலை வாரிக்கொள்ள
உன் ..
விரல்களை
தாயேன் ..
கலைந்த ..
தலை முடியை
சீவி விட..
முத்தங்கள்
தந்து .விடாதே ..
சத்தமில்லாமல்
கடித்து ..
விட்டு போகின்றன
என் கன்னத்தை
எறும்புகள் 

Sunday, August 5, 2012

மௌனங்கள் ..


மௌனங்கள் ..
பல நேரங்களில் 
விடை தெரியாத 
கேள்வி குறியானாலும்..
விழிகள் பேசும் ..
மௌன மொழி 
பல நேரங்களில் 
பல வினாக்களுக்கு 
விடை தருகிறது 
காதலில் மட்டும் ..
www.writerprabashkaran.blogspot.com

Friday, August 3, 2012

பின்னால் துரத்தும்

முன்னுக்கு ..
வந்து விட்டேன் 
நான்..
ஆனாலும் 
பின்னால் 
துரத்தும் 
அவளின் 
நினைவுகள் 

Sunday, July 22, 2012

தூக்கத்தை .. வேண்டி .. காத்திருக்கிறேன்

Amala 5
தூக்கத்தை ..
வேண்டி ..
காத்திருக்கிறேன் 
என் ..
கனவுகளை 
அலங்கரிக்க போவது 
நீ .. என்பதால் 

Friday, July 20, 2012

நினைவுகளில் ..கனவுகள் .

Billa 2 Heroine Photos
நினைவுகளில் ..
அவள் ..
ஏனோ ..
நினைவுகள் 
கனவாகவும் 
கனவுகள் .
அவள் ..
நினைவாகவும் 
www.writerprabashkaran

Monday, July 16, 2012

அஜித்க்கு காஸ்ட்யும் சரியில்லை சரி கதையாவது


Photo: பில்லா II படம் பார்த்தேன் பாவம் அஜித் இப்படி படம் நடித்தால் அம்பேல்

அஜித்தின் பில்லா படத்தில் அஜித்க்கு காஸ்ட்யும் சரியில்லை சரி கதையாவது உருபடியானா அதுவும் இல்லை .. அஜித்க்கு இப்பொது நல்ல மாஸ் இருக்கிறது ஏனோ அதை சரிவர பயன்படுத்தவில்லை .ரசிகர்கள்தான் பாவம் இருந்தும் கூட்டம் அலை மோதுகிறது ..எனக்கு பெரிய டவுட் இதற்கு எதற்கு பில்லா -II அப்படினு டைட்டில் பில்லா -I க்கும் பில்லா -II க்கும் என்ன சம்பந்தம் உள்ளது .. தெரிந்தால் சொல்லுங்கள்

Sunday, July 15, 2012

ஈ சிறந்த நடிகர்நம்ம ஹீரோகளுக்கே சவால் விடும் ஈ சிறந்த நடிகர் விருது இந்த ஈ குதான் கொடுக்கணும் கிராபிக்ஸ் கலக்கல் படம் செம பாஸ்ட் டைரக்டர் கலக்கிட்டார் எல்லோரும் மறக்காம ஈ பாருங்க பில்லா பார்துடாதிங்க சகுனி பில்லா க்கு ஈ எவலோவோ பெட்டர்

Saturday, June 23, 2012

சங்கீதம் ..


நானும் ..
சங்கீதம் ..
தெரிந்து கொண்டேன் ..
உன்..
பெயரை
உச்ச்சரித்துதான்

உன் முத்தத்திற்கு


சாப்பிடும் ..முன் 
சாப்பாட்டிற்கு பின் 
சர்க்கரை அளவு 
நான் ..
பார்ப்பதில்லை 
அன்பே ..
உன் முத்தத்திற்கு 
முன் ..
உன் முத்தத்திற்கு 
பின்தான் பார்க்கிறேன் 

Thursday, June 21, 2012

மனதளவில் காதலோனோடு ..


Saguni Heroine Pranitha Pictures 05
காதலிக்க அவன்
கல்யாணம் ..
செய்து கொள்ள
 இவன் ...
நானும் ..
பத்தினிதான் ..
ஆம் ..
வாழ்வது கணவனோடு
ஆனால்
வாழ்ந்தது ..
மனதளவில்
காதலோனோடு ..

Sunday, June 17, 2012

என்னுடைய ஹீரோ

தந்தையர் தினம் 
----------------------
அன்றும் ..இன்றும் 
என்றும் 
என்னுடைய ஹீரோ 
என் தந்தையே 

Sunday, June 10, 2012

மனம் கொத்தி பறவை ஏனோ மனதை கொத்தவில்லை


மனம்  கொத்தி பறவை பார்த்தேன் ஏனோ மனதை கொத்தவில்லை .சிவா கொஞ்சம் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் .முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்ட தெரியவில்லை .1980 களில் வந்திருக்க வேண்டிய படம் .காமெடி என்ற பெயரில் பல இடங்களில் கொத்தி எடுக்கிறார்கள் .பாவம் சிவா ஏனோ நல்ல படங்கள் அவருக்கு அமைய மாட்டேங்குது .அவரும் கொஞ்சம் நடிப்பில் முனேற்றம் காட்ட வேண்டும் .இல்லை என்றால் அவருக்கு டிவி தான் லாயக்கு என முத்திரை குத்தி விடுவார்கள் 

Sunday, June 3, 2012

அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன்

இன்று நான் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன் அதில் விசேசம் என்னவெனில் அண்ணன் தன் தங்கைக்கு செய்து வைத்த திருமணம் சுமார் பதினைந்து லட்சம் செலவு செய்து ,தங்கை கல்லூரி பேராசிரியை மாப்ளை அரசு பள்ளி ஆசிரியர் . தங்கையை இவளவு தூரம் படிக்கவும் வைத்துள்ளார் ஆனால் அண்ணன் படித்தோ ஐந்தாம் வகுப்பு ஆட்டோ ஒட்டி அதில் வந்த வருமானத்தில் இவ்வளவு செய்துள்ளார் .எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் ஒரு ஆட்டோ வாடகைக்கு வேறு விட்டுள்ளார் .அண்ணன் தங்கைக்கு செய்வதெல்லாம் நான் சினிமாவில்தான் பார்த்து கேட்டுள்ளேன் .உண்மையில் இவர்தான் பாட்சா .. அவரை மனமார வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறேன்

Thursday, May 31, 2012

பிரிங் யுவர் வாட்ச் இன் லெப்ட் ஹான்ட்


 

நான் +2 படிக்கும்போது கெமிஸ்ட்ரி ஆசிரியர் ஒரு equation யை போர்டில் எழுத சொன்னார் .நானும் எழுதினேன் .திடிரென்று கத்தினார். பிரிங் யுவர் வாட்ச் இன் லெப்ட் ஹான்ட். எல்லாவற்றிலும் உயர்துவிடோம் என்ற நினைப்பு என்று சொல்லியபடியே, .. நானும் அமைதியாக வாட்ச் யை கழற்றி ரைட் ஹான்ட் இல் இருந்து லெப்ட் க்கு மாற்றினேன் . ஆனால் உள்ளுக்குள் அந்த ஆசிரியரை போடா புண்ணாக்கு என்று திட்டினேன் மனதில் ஆனால் அதன்பிறகு இன்று வரை வாட்ச் ரைட் ஹான்ட் இல்தான் கட்டி வருகிறேன் .ரைட் ஹான்டில் கட்டினால் என்ன தவறு அதன் பிறகு யாரும் என்னை எதுவும் சொன்னதில்லை சில சமயம் என் கையை சிலர் ஒரு மாதிரி பார்ப்பது உண்டு எனக்கு அந்த 
கெமிஸ்ட்ரி ஆசிரியர் மீது இன்றும் கூட கோபம் உண்டு இவர் யார் சொல்வது நான் ரைட் ஹான்டில் தான் கட்டுவேன் என்று காட்டினேன் ..இதில் ஏதும் தவறு உள்ளதா..

Monday, May 28, 2012

பவர் ஸ்டார்..............பவர் ஸ்டார்பவர் ஸ்டார் கலந்து கொண்ட நீயா நானவை யூ டுயுபு இல் பார்த்தேன் .கோபிநாத்தின் கேள்வியை லாவகமாக கையாண்டு பதில் சொல்லியிருகிறார். அவரை நடிகன் என்பதால்தான் நிகழ்ச்சிக்கு கூபிட்டு இருக்கிறார் பின் உங்கள் இனொரு முகத்தை கொண்டு வர முயற்சி செய்கிறேன் நீங்கள் டாக்டர் என்று விடாபிடியாக கோபிநாத் கேட்பதில் நியாயம் இல்லை .உங்களுக்கு சதித்திட்டம் தீட்டுவது யார் என்று கேட்க முதலாவது ஆள் நீங்கள்தான் என்று கோபிநாத்தை சொன்னது நெத்தியடி .சிறப்பு விருந்தினர் என்று ஒருவரை கூப்பிட்டு இப்படி கேள்வி கேட்டு அவரை அவமானபடுத்துவது அழகல்ல .இந்த மாதிரி கோபிநாத் நிகழ்சிகளை நடத்தினால் விஜய் டி.விதான் பாவம் ..வர வர அவர் கேட்கும் கேள்விகளில் தான் என்ற ஆணவம் தெரிகிறது ..

Saturday, May 26, 2012

திருச்சியில் மலைகோட்டை அருகில் மைக்கேல் ஐஸ் க்ரீம்திருச்சியில் மலைகோட்டை அருகில் மைக்கேல் ஐஸ் க்ரீம் பார்லர் இருக்கும் அங்கு அப்போது ஐஸ் க்ரீம் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் மட்டுமே .அதை நண்பர்களுடன் வாங்கி சாப்பிடுவதில் பேரானந்தம் தீர தீர வாங்கி கொண்டே இருப்போம் ரோடை பார்த்து உட்கார இடம் பிடிக்க பெரிய அடிதடியே நடக்கும் எங்களுக்குள் அப்பதான் சைட் அடிக்க முடியும் ரோட்டை பார்த்து என்று .. இம் அது ஒரு கனா காலம் இப்போ அங்கு எவ்வளவு ஐஸ் க்ரீம் இந்த அனுபவம் எதனை பேருக்கு உண்டு ..

Thursday, May 24, 2012

சேவற்கொடி.....சண்டைகோழிசேவற்கொடி படம் பார்த்தேன் .பரவாயில்லை ரகம் தான் .ஹீரோ விளங்கவில்லை .சண்டைகோழி போன்று பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டிய படம் டைரக்டர் கோட்டை விட்டுவிட்டார் .அருமையாக கொண்டு சென்று இருக்க வேண்டிய படம் என்ன சொல்வது இயக்குனர் என்பவர் படத்திற்கு ரொம்ப முக்கியமானவர் என்பது இந்த படத்தை பார்த்தால் தெரியும் .. நன்கு எடுத்திருக்க  படவேண்டிய படம் .. 

தூசியிலும் குப்பையிலும்மூலையில்..
தூசியிலும் குப்பையிலும்
இருந்த ..
சைக்கிள் சிநேகமாய் 
சிரித்தது..வாரி 
அணைத்து 
கொண்டேன்

Saturday, May 19, 2012

காதல் கோட்டை

பாசத்தில்.. 
நான் ..
கட்டிய 
காதல் கோட்டையை 
அவள..
இடித்து விட்டால் ..
பணத்தால் ..
www.writerprabashkaran.blogspot.com

செல்போன் வாங்கி தருவதை ...

வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன் அருமை பாலாஜி சக்திவேல் படம் சாமுராய் படமே மிக அருமையாக இருக்கும் ஏனோ அது ஓடவில்லை .. இந்த படத்தை பார்க்கும் பெற்றோர்கள் இனி செல்போன் வாங்கி தருவதை தவிர்க்கலாம் .இன்று ஆறாவது படிக்கும் மாணவர்களிடம் செல்போன் கையில் உள்ளது அதில் நெட் போட்டு பார்கிறார்கள் .இனி இந்த படத்தை பார்த்தாவது பெறோர்கள் செல்போன் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும் .இது போன்ற ஒரு மாணவன் காரை ஒரு பெண் மீது ஏற்றிய செய்தி பத்திரிகையில் படித்த நினைவு அந்த செய்தியை நன்கு படமாக வடிவமைத்துள்ளார் . நிறைய படங்கள் கொடுக்கட்டும் அவர் ..உண்மையில் பெரிய பிளஸ் ஹீரோ வாக நடிப்பவர் சின்ன வயது ரகுவரனை நினைவு படுத்துகிறார் .. நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்

ஹீரோ செம கத்தி குத்து வாங்குறார்ஊ ல லா படம் பார்த்தேன் யாரையாச்சும் பிடிக்கலேன்ன கட்டி போட்டு படம் பார்க்க வைங்க கிளைமாக்ஸ் ல ராஜேந்தர் யையும் மிஞ்சி ஹீரோ செம கத்தி குத்து வாங்குறார்

மசாலா கபே

கலகலப்பு (மசாலா கபே ) படம் நல்ல காமெடி .முதலில் போரடிப்பது போல் துவங்கி பின் நல்ல காமெடி படம் சுந்தர் .சி கே வெற்றி .. நடிப்பில் சிவா ஒரே பாணியில் நடிக்கிறார் .. விமல் காமெடி பரவாயில்லை .. சந்தானம் வழக்கம் போல் காமெடியில் களை கட்டுகிறார் . நகைச்சுவையான வசனங்கள் அருமை .படம் பார்க்கலாம் பாருங்கள் ஆனால் லாஜிக் பார்க்க கூடாது

Friday, May 18, 2012

முட்டைகோசு கீரை வடை

திருச்சி பிளாசா தியேட்டரில் முட்டைகோசு கீரை வடை பிரமாதமாக இருக்கும் நான் சிறு வயதில் அங்கு சென்றால் அதைதான் விரும்பி சாப்பிடுவேன் ஆங்கில படம் தான் திரையிடுவார்கள் அதற்கு தமிழ் பெயர் அவர்கள் போல் வைக்க முடியாது மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள் என்று ஒரு சூப்பர் மேன் படத்தை தமிழ் பெயர் வைத்து பயங்கர ஹிட் ஆக்கினார்கள். அந்த முட்டைகோசு கீரை வடை சாப்பிட்ட அனுபவம் யாருக்கும் இருக்கா ..

லீலை படம்

லீலை படம் பார்த்தேன் .பார்க்கலாம் பரவாயில்லை.. எப்படி முடிப்பது என்ற தடுமாற்றம் டைரக்டரிடம் தெரிகிறது .ஹீரோயின் சுமாராக இருந்தாலும் நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறார் செலவே இல்லமால் படம் எடுத்ததை பாராட்டலாம் சந்தானம் காமெடி சுமார்தான் .ஆனால் படம் பார்க்கலாம் பாருங்கள் 

Sunday, May 13, 2012

ஊட்டி.. கொடைக்கானல்


ஊட்டி.. கொடைக்கானல்
சிம்லா குலுமனாலி
எல்லாம் ..
சென்று ..
வந்து விட்டேன்
நீ ..
கொடுத்த ..
முத்தத்தால்
www.writerprabashkaran.blogspot.com

Wednesday, May 9, 2012

அவள் ..
புன்னகையில் 
தொலைந்தது 
என்..
பொன்னான நேரம் 
இன்னும் ..
தொலைந்து கொண்டுதான் 
இருக்கிறது ..
நிழலாயாய் 
தெரியும் ..
அவள் ..
புன்னகையில் 

Sunday, May 6, 2012

மறக்கவில்லை

மறந்து விட்டேன் 
அவளை ..
ஆனால் ..
மறக்கவில்லை 
அவளின் நினைவுகள் 

Saturday, May 5, 2012

கோடையிலும் ..

கோடையிலும் ..
ஏ.சி ..
நீ தந்த 
முத்தம் 

Friday, May 4, 2012

தேன். குடித்தால் 
உடம்பு இளைக்குமாம் 
அன்பே ..
உன்
இதழ்களை தா.. 

Monday, April 2, 2012

உன் பார்வை வீசும் .. தென்றல்


மின் கட்டண
உயர்வு ..
எனக்கு .. இல்லை
உன் பார்வை
வீசும் ..
தென்றல்
இருக்கும் வரை ..

Tuesday, March 6, 2012

கோடை என்றும் குளிர்காலமே


உன்..
பார்வையில்
மின்சாரம் ..
ஆனால்..
என் இதயத்தில்
குளிர்ச்சி ..
உன்னை ..
பார்க்கும்போது
ஐஸ் க்ரீம்
போன்று
உருகுகிறது
என் மனது
தினம் தினம்
வந்து விடு
கோடை என்றும்
குளிர்காலமே
எனக்கு

Monday, March 5, 2012

மின்சாரம் . போனால் என்ன வந்தால் என்ன


உனக்காக
காத்திருந்தேன் ..
வருவாய்
என்ற நம்பிக்கையில்
கால்கள் ..
வலிக்கவில்லை
வலித்தது
மனதுதான்
நினைவுகளில்
நீ..
இருக்கும் வரை
மின்சாரம் .
போனால் என்ன
வந்தால் என்ன
உன் ..
பார்வையே ..
எனக்கு ..
மின்சாரம் ..


Monday, February 13, 2012

அந்த விஷத்தை விட்டு விடுங்கள்

காதலர் தினம் .. இன்று ஒரு சோகத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .feb 10 எனது பிறந்த நாள் அன்று எனக்கு ஒரு சோகமான செய்தி கேட்டது என் நண்பரின் மரணம்தான் அது . என் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மறந்து விட்டு அவரின் இறுதி நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன் . அவரின் மரணம் காதலால்தான்  நடந்தது . காரணம் ஒரு பெண்ணை விரும்பியுள்ளார் அவள் சுற்றி வளைத்து பார்க்கும் போது தங்கை முறை வந்துள்ளது அதனால் யாரும் சம்மதம் தரவில்லை இது நடந்தது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் .அன்று முதல் குடிக்க ஆரம்பித்து தன் வாழ்கையை தொலைத்து இறுதியில் மரணத்தை தேடிகொண்டார் இதுதான் சுருக்கமாக நடந்தது .இது என் மனதை பாதித்தது காதல் ஏன் வருகிறது எப்படி வருகிறது தெரியவில்லை இருவரும் காதலிக்கிறார் ஆனால் இதில் ஒருவர் சுயநலமாக மாற ஒருவர் வாழ்க்கை பாதிக்கிறது இல்லை சமுதாயத்தால் இருவரும் பாதிக்க படுகின்றனர் . சோதனையை சாதனை ஆக மாற்ற முடிந்தவர்கள் காதலியுங்கள் இல்லை அந்த விஷத்தை விட்டு விடுங்கள் 

ஜெயிக்க தெரிந்தால் காதலியுங்கள் ..


காதலிக்கும் 
முன் ..
அவன் நண்பன் 
காதலிக்கும் போது 
காதலன் ..
அவன்தான் ..
கணவன் ..
காதல் முறிந்த போது 
அவன் ..
மீண்டும் ..
நண்பன் 
நட்பை 
கொச்சை படுத்தும் 
காதலிகள் 
இருக்கும் வரை  
காதலர் தினம் 
காதலிப்பவர்களுக்கு 
காதலர் தினம் 
கொண்டாட்டம்தான் 
காதலிக்க 
தேவை இல்லை 
பெற்றோர் சம்மதம் 
கல்யாணம் செய்ய 
தேவை ..
போராட 
துணிவில்லாதவர்கள் 
மனதில் சுயநலம் 
பண நலம் 
கொண்டவர்கள் 
சொல்லும் ..
வார்த்தை 
நட்பாய்..
பிரிவோம் ..
நண்பனோ நண்பியோ ..
காதலன் காதலி ..
ஆகலாம் ..
காதலனோ ..
காதலியோ ..
மீண்டும் ..
நட்பாக முடியாது 
ஜெயிக்க தெரிந்தால் 
காதலியுங்கள் ..
இல்லையென்றால் ..
காதலை ..
ஏமாற்றாதிர்கள்..
உண்மை ..
காதலர்களுக்கு 
காதலர் தின 
வாழ்த்துக்கள்