நிறைய பேசுவோம்

Saturday, October 8, 2011

பார்த்து ரசியுங்கள் ரஜினியின் புதிய புகைப்படங்களை

ரஜினியின் புதிய புகைப்படங்கள் 




Tuesday, October 4, 2011

தங்கம் வாங்கும் முன் யோசித்து வாங்குங்கள்


நேற்று மனைவிக்கு மூக்குத்தி வாங்கலாம் என்று நகை கடைக்கு சென்றேன் .மூக்குத்தியின் விலை 450 ரூபாய் செய்கூலி இதில் அடக்கம் 100 ரூபாய் பழைய மூக்குத்தி ஒன்றல்ல இரண்டு போட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன விலை 125  ரூபாய் .என்ன நியாயமோ தெரியவில்லை எப்போது         நகை கடைக்கு சென்றாலும் எனக்கு பிரச்சினைதான் அவர்கள் சொல்லும் செய்கூலி சேதாரம் எல்லாமே 15  சதம் கூடுதல் விலை தான் வருகிறது .பொதுவாக நாம் எந்த பொருள் வாங்கினாலும் ஒரு விலை இருக்கும் .ஆனால் இந்த நகையில் மட்டும் KDM க்கு அன்றைய விலையை விட 10 சதம் கூட இருக்கும் ஆனால் விற்கும் போது   அன்றைய நகை விலைக்கு எடுப்பார் அன்றைய விலையை விட 10 சதம் கூட எடுத்து கொள்ள மாட்டார் .

செய்கூலி சேதாரம் எல்லாம் வாங்கும் போது தான் விற்கும் போது கூட்டி களைத்து பார்த்தால் சுமார் 15 முதல் 20 சதம் நமக்கு நஷ்டம் தான் . 

ஆகவே e -gold    முறையில் தங்கத்தை வாங்கி சேமியுங்கள் சேதாரம் இல்லை செய்கூலி இல்லை வேண்டும் போது விற்று கொள்ளலாம் . இது நான் பட்ட பிறகு எனக்கு ஏற்பட்ட எண்ணம் .இதை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ..

Sunday, October 2, 2011

சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம்


அரசு கேபிள் இப்போது நன்கு தெரிகிறது .சன் டி.வி மட்டும் தெரிய வில்லை மக்கள் அனைவரும் விஜய் டி.வி விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர் .இது சன் டி.விக்குதானே நஷ்டம் .மேலும் அதிக மக்கள் பார்க்காமல் அந்த சேனலுக்கு எப்படி விளம்பரங்கள் கிடைக்கும் .இதையெலாம் அவர்கள் யோசிக்க மாட்டார்களா .அரசியல் பார்க்காமல் சன் டி.வி யை அரசு கேபிளில் இணைப் பதுதான் அவர்களுக்கு லாபம் .ஒரு வேலை டிஷ் விற்பனை ஆகும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் .இணைத்தால் நம் மக்களும் சந்தோஷ படுவார்கள் .. பாப்போம் நாம் சொல்வதை சொல்வோம் . அப்புறம் அவர்கள் பாடு .


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது .வெற்றி பெற்றவரை அறிவிக்கும் போது  பெற்ற வாக்குகள் அறிவிக்க படவில்லை 


கண்டிப்பாக இதில் எதோ நடந்திருக்கு சாய் சரணுக்கு மதுரையில் பல இடங்களில் பேனர் வாக்களிக்கும்படி இவர்கள் என்ன அரசியல் வாதிகளா இப்படி ஒட்டு கேட்பதற்கு இது மாதிரி எத்தனை இடங்களில் வைத்தார்களோ .. இது மாதிரி விளம்பரம் செய்து நடத்தும் போட்டிகளை தயவு செய்து நிறுத்துங்கள்



அடுத்த உச்ச கட்டம் முடிவு அறிவித்த பிறகும் நிகழ்ச்சி தொடர்கிறது அதில் ஒவோருவர் பெற்ற வாக்குகள் சொல்லினர் . இசை அமைப்பாளர்கள் சத்ய பிரகாஷ் தான் சரியாக பாடினார் அவருக்குதான் நாங்கள் அதிக மதிப்பெண் கொடுத்தோம் . மக்கள் தான் சாய் சரணுக்கு வாக்களித்தனர் என்று சாய் சரனை வைத்து கொண்டு சொல்கின்றனர் இது வெற்றி பெற்றவரை அவமானபடுத்தியது போல் உள்ளது . இவர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக எதையாவது செய்வது என்று வழக்கத்தை கொண்டுள்ளனர் தயவு செய்து இதை மாற்றுங்கள் வெளிபடையாக  நிகழ்ச்சியை நடத்துங்கள்