நிறைய பேசுவோம்

Saturday, May 21, 2011

மகிழ்ச்சி தரும் ரஜினியின் புகைப்படம்இந்த புகைப்படம் முதலில் பிரசுரம் செய்த இணையதளத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வோம் www tamiltodaynow .in  ரஜினி உடல் நலம் பெறவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வரும் வேளையில் இந்த புகைப்படம் அனைவர்க்கும் மகிழ்ச்சியை தரும் அந்த மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்து கொள்வோம் .
              

நகைச்சுவையாக இந்த கவிதை தோன்றியது -பிரபாஷ்கரன்


இந்த படத்தை பார்த்தவுடன் நகைச்சுவையாக இந்த கவிதை தோன்றியது .இப்படி போவது தவறுதான் ஏறும் விலைவாசி இப்படியும் போகவைக்குமா தெரியவில்லை 

பஸ்சில் டிக்கெட்..
விலையும்..
ஏறிப் போச்சு 
பெட்ரோல் விலையும் 
ஏறிப்போச்சு..
நான் ..
என்ன செய்வது 
இப்படிதான் 
போக முடியும்
ட்ராபிக் போலீஸ் 
மட்டும் கண்டுக்காதிங்க 
ப்ளீஸ் ..


Friday, May 20, 2011

கவிதை : கவிஞர்கள் .. பிறக்கிறார்களா உருவாக்க படுகிறார்களா - பிரபாஷ்கரன்
கவிஞர்கள் ..
பிறக்கிறார்களா 
உருவாக்க படுகிறார்களா 
என்ற ..
சந்தேகம் 
அன்பே ..
உன்னை பார்த்தவுடன் 
தீர்ந்து விட்டது ..

Thursday, May 19, 2011

கவிதை : புன்னகை - பிரபாஷ்கரன்கோடை காலத்திலும் 
இளவேனிற் காலம் 
உன் ..
புன்னகைதான் 

Wednesday, May 18, 2011

பைரவி படத்தில் பாம்பை ஒற்றை கையில் பிடித்தபோது

சூப்பர் ஸ்டார் 
நீ அன்று 
பைரவி படத்தில் 
பாம்பை ஒற்றை 
கையில் பிடித்தபோது
நான் ரசிகனானேன்
நீ ..
பேசிய வசனங்கள் 
வாழ்க்கை தத்துவம்
நீ .. 
ஆஸ்பத்ரியில் 
இருக்கிறாய் .. என்றவுடன் 
பதறிய நெஞ்சங்கள் 
பல கோடி 
என்றும் .
சூப்பர் ஸ்டார் 
நீ ஒருவனே 
இது ..
கடவுளுக்கும் 
தெரியும் ..
மருத்துவத்தை விட 
உன் மீது ..
அன்பு கொண்டுள்ள 
கோடானு கோடி 
அன்பு உள்ளங்களின் 
பிரார்த்தனையில் 
நீ ..
உடல் நலம் 
பெறுவாய் ..

எங்களுக்கு ..
மருத்துவம் தெரியாது 
ஆனால்..
பிரார்த்திக்க தெரியும் 
பிரார்த்திக்கிறோம் கவிதை : இதயம் துடிப்பதை ஈ .சி .ஜி .. எடுக்க வேண்டுமாம்- பிரபாஷ்கரன்சர்கரையின் அளவு 
எகிறி விட்டதாம் 
ரத்த அழுத்தம் 
உயர்ந்து விட்டதாம்
இதயம் துடிப்பதை 
ஈ .சி .ஜி ..
எடுக்க வேண்டுமாம்
எப்படி ..
சொல்வேன் ..
இவர்களிடம் 
நீ ..
தந்த முத்தம்தான் 
காரணம் என்று 

Tuesday, May 17, 2011

கவிதை :பட்டம் விட மாஞ்ச கயிறு தேடினேன் -பிரபாஷ்கரன்

பட்டம்  விட 
மாஞ்சா   கயிறு 
தேடினேன் 
நேற்று ..
அப்பா அடுப்பில் 
போட்ட பம்பரத்தை 
தேடி பார்த்தேன்
மறைத்து வைத்த 
கில்லியயும் 
கோலி குண்டையும் 
தேடும் வேளையில்
கலைந்து..
போனது தூக்கம் 
எதிரே ..
பையனும் பொண்ணும
கம்ப்யூட்டர் முன் 
கேம்ஸ் விளையாடி 
கொண்டிருந்தனர் 
தூக்கம் ஏனோ 
மீண்டும் வரவில்லை   Monday, May 16, 2011

கவிதை : கனவுகள் .. கலைந்தாலும் --பிரபாஷ்கரன்

நேற்று 
உன்னில் நான்
என்னில் நீ 
இன்று 
உன்னில் நான் 
ஆனால்..
நான் மட்டுமா 
என்னில் நீ 
நீ மட்டுமா 
காலம் 
புரட்டி போட்டது 
கனவுகள்
கலைந்தாலும் 
நினைவுகள் 
நிச்சயம் 
கனவுகளாய்