நிறைய பேசுவோம்

Monday, February 13, 2012

அந்த விஷத்தை விட்டு விடுங்கள்

காதலர் தினம் .. இன்று ஒரு சோகத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .feb 10 எனது பிறந்த நாள் அன்று எனக்கு ஒரு சோகமான செய்தி கேட்டது என் நண்பரின் மரணம்தான் அது . என் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மறந்து விட்டு அவரின் இறுதி நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன் . அவரின் மரணம் காதலால்தான்  நடந்தது . காரணம் ஒரு பெண்ணை விரும்பியுள்ளார் அவள் சுற்றி வளைத்து பார்க்கும் போது தங்கை முறை வந்துள்ளது அதனால் யாரும் சம்மதம் தரவில்லை இது நடந்தது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் .அன்று முதல் குடிக்க ஆரம்பித்து தன் வாழ்கையை தொலைத்து இறுதியில் மரணத்தை தேடிகொண்டார் இதுதான் சுருக்கமாக நடந்தது .இது என் மனதை பாதித்தது காதல் ஏன் வருகிறது எப்படி வருகிறது தெரியவில்லை இருவரும் காதலிக்கிறார் ஆனால் இதில் ஒருவர் சுயநலமாக மாற ஒருவர் வாழ்க்கை பாதிக்கிறது இல்லை சமுதாயத்தால் இருவரும் பாதிக்க படுகின்றனர் . சோதனையை சாதனை ஆக மாற்ற முடிந்தவர்கள் காதலியுங்கள் இல்லை அந்த விஷத்தை விட்டு விடுங்கள் 

ஜெயிக்க தெரிந்தால் காதலியுங்கள் ..


காதலிக்கும் 
முன் ..
அவன் நண்பன் 
காதலிக்கும் போது 
காதலன் ..
அவன்தான் ..
கணவன் ..
காதல் முறிந்த போது 
அவன் ..
மீண்டும் ..
நண்பன் 
நட்பை 
கொச்சை படுத்தும் 
காதலிகள் 
இருக்கும் வரை  
காதலர் தினம் 
காதலிப்பவர்களுக்கு 
காதலர் தினம் 
கொண்டாட்டம்தான் 
காதலிக்க 
தேவை இல்லை 
பெற்றோர் சம்மதம் 
கல்யாணம் செய்ய 
தேவை ..
போராட 
துணிவில்லாதவர்கள் 
மனதில் சுயநலம் 
பண நலம் 
கொண்டவர்கள் 
சொல்லும் ..
வார்த்தை 
நட்பாய்..
பிரிவோம் ..
நண்பனோ நண்பியோ ..
காதலன் காதலி ..
ஆகலாம் ..
காதலனோ ..
காதலியோ ..
மீண்டும் ..
நட்பாக முடியாது 
ஜெயிக்க தெரிந்தால் 
காதலியுங்கள் ..
இல்லையென்றால் ..
காதலை ..
ஏமாற்றாதிர்கள்..
உண்மை ..
காதலர்களுக்கு 
காதலர் தின 
வாழ்த்துக்கள்