நிறைய பேசுவோம்

Saturday, September 9, 2017

சிறுகதை :: பணம்

சிறுகதை ::      பணம்                           பிரபாஷ்கரன்

சுகுமார் அந்த ஹோட்டலில் நுழைந்தவுடன் ஆகா.. ரவா தோசை இங்கு நல்லாருக்கும் சாப்பிடலாம் என்று நினைத்தவன் சர்வரை அழைத்து ஆர்டர் செய்தான் ..
“சார் வேறு என்ன வேண்டும் கேட்ட சர்வரிடம் ஸ்டிராங்காக  ஒரு காபி ..”-என்றான்
சர்வர் சென்றவுடன் பர்சில் துழாவி ஐந்து ரூபாய் நாணயத்தை தனியாக எடுத்து வைத்து கொண்டான் டிப்ஸ் கொடுப்பதற்காக, சர்வர் கல்லாவில் மாற்றி மிச்ச காசை கொண்டு வரும்போது பத்து ரூபாயை கொண்டு வந்து விட்டால் சுகுமார் எப்போதுமே டிப்ஸ் வைப்பதுக்கு என்றே ஐந்து ரூபாய் நாணயத்தை தனியே வைத்திருப்பான் ..
சர்வர் பில்லை கொடுத்தவுடன் வழக்கம் போல் மிச்ச சில்லரை எடுத்து கொண்டு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தான் அதை எடுத்த சர்வர் நேரே கல்லா அருகில் இருந்த உண்டியலில் போடுவதை கவனித்த சுகுமார் மேனேஜரை அழைத்து அதை பற்றி கேட்டான்
அவர் சிரித்தவாறே இங்கு சர்வர் எல்லோருக்கும் நல்ல சம்பளம் தருகிறோம் டிப்ஸ் வாங்குவது வழக்கம் இல்லை இருந்தாலும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் தரும் டிப்ஸ்சை இந்த உண்டியலில் போட்டு விடுவார்கள் .இந்த பணத்தை ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுவோம் என்றார் ..

அதை கேட்டு ஒரு கணம் திகைத்த சுகுமார் சார் நான் இந்த உண்டியலில் பணம் போடலாம் என்று கேட்டு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்து போட்டான் ..”

Wednesday, July 19, 2017

குழந்தை



“இரண்டு குழநதைக்கு அம்மாவாக நடித்து கொண்டிருந்தாள் தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்துடன் நடிகை ..”

Wednesday, June 14, 2017

பத்து நொடி கதை

பத்து நொடி கதை

“மாமியாருடன் சண்டை போட்ட அவள் எதிர்ப்பை காட்டினாள் .குடும்பம் வாட்ஸ் அப் குருப்பிலிருந்து வெளி வந்ததன் மூலம் ..”

Thursday, April 27, 2017

இப்படியும் சில மனிதர்கள்

இப்படியும் சில மனிதர்கள்
எனக்கு கார் பார்க்கிங் கிடையாது. பக்கத்து பிளாக்கில் ஒரு மரம் இருக்கும் அதன் அடியில் நிறுத்தினால் அந்த வீட்டம்மா கல்லை பரப்பி வைக்கும் கேட்டால் எனக்கு கிச்சனில் இருந்து ரோட்டை பார்க்க முடியலை மறைக்குது கார் என்றது சர் என்று வைக்கவில்லை. ரொம்ப நாளாக அந்த அம்மா இல்லை மகள் குடும்பம் மட்டுமே இருந்தது சரி நிறுத்தலாம் என்று இரண்டு நாள் நிறுத்தினேன். வெயில் போனவுடன் காரை எடுத்து விடுவேன். இன்று நிறுத்தும் போது அந்த்ம்மாவின் மருமகன் இங்கு நிறுத்த கூடாது என்றார். வெயிலுக்குதான் நிறுத்துறேன் என்ற போதும் கறாராக கூடாது என்றார்.
உங்களுக்கு நல்ல மனசு இருக்கு நல்லா வருவிங்க என்று சொல்லி விட்டு காரை எடுத்து வந்து விட்டேன்..
#நம்மை டென்சன் படுத்த பலரும் காத்திருக்கின்றனர்..

Saturday, April 8, 2017

நீயா நானாவில்

நீயா நானாவில் பேசும் இந்த மக்கள் மேல் தட்டு மக்களாக தெரிகிறது..கல்யாணம் நடப்பதன் கஸ்டம் தனிப்பட்ட அவர்களுக்குதான் தெரியும் ஒரு மணி நேரம் நிகழ்ச்சியை எடிட் செய்து சாதகமாக காட்டி இதுதான் தமிழ்நாட்டில் என்று சொல்வதை ஏற்க முடியாது. மீடியாவிற்கு அது வியாபாரம். சினிமா பார்ப்பது போல் பார்த்து விட்டு அதை மறந்து விட வேண்டும். அதுதான் நமக்கு நல்லது

Thursday, March 23, 2017

பத்து செகண்ட்

இந்த வார விகடனில் வெளிவந்த பத்து செகண்ட் கதை

Sunday, March 19, 2017

கணவன்+மனைவி



தான் நினைப்பதை தன்னிடம் கேட்காமலேயே தனக்கு கணவன் செய்யவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள்.
மனைவி எதிர்பார்த்ததை அவளிடம் கேட்காமலேயே அனைத்தையும் தான் செய்து விட்டோம் என்று கணவன் நினைக்கிறான்.
#ஆனால் நடப்பதென்னவோ தலைகீழ்தான்

Monday, March 13, 2017

பேய் மழை


பேய் மழை
பெய்தாலும்
எனக்கு ..
தேவை குடையல்ல
தேவை..
உன்..
முந்தானை குடைதான்.


Friday, March 10, 2017

நினைவு சாரல்






மழைச்சாரல்..
வரும் போதெல்லாம்
உன்..
நினைவு சாரல்
ஏனோ ..
மழை நின்ற போதும்
நிற்காமல்..
தொடரும்
உன்..
நினைவு சாரல்

Sunday, March 5, 2017

முப்பரிமானம் படம்

முப்பரிமாணம் படம் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசம் இல்லை. கோடிட்ட இடங்களில் சரிந்த சாந்தனுவின் இமேஜ் இதில் காப்பாற்றப் பட்டுள்ளது. சாந்தனு இயல்பாக நடித்திருக்கிறார் பாராட்டுக்கள்.ஆனால் ஹிரோயின் சாய்ஸ் சரியான தேர்வல்ல நடிக்கவே வரவில்லை .ட்ப்பிங் அதைவிட கொடுமை சில இடங்களில் கோவை சரளாவை நினைவு படுத்துகிறார். பெரிய மைனஸ் ஹிரோயிந்தான். இருப்பினும் க்ளைமாக்ஸ் சொதப்பல். இருந்தாலும் சாந்தனுவிற்காக படத்தை பார்க்கலாம் ஒரு ஹிட் கொடுக்க ரொம்ப நாளா பாடுபடுகிறார்.


முப்பரிமானம் படம் பார்க்கும்போது தியேட்டரில் ஒரு சின்ன பையன் படம் ஆரம்பிக்கும் முன்னே எப்பம்மா முடியும் என்று கேட்க இன்னொரு பையன் காலையில்தான் முடியும் என்றான். சின்ன குழந்தை களை அவர்கள் ரசிக்கும் படத்திற்கு அழைத்து செல்லுங்கள்.
#க்ளைமாக்சில் சாந்தனு நீண்ட வசனம் பேச எனக்கு போரடித்து தியேட்டரை சுற்றி பார்வையை வீசினேன். அப்போது பெரும்பாலான பெண்கள் சீட் நுனியில் அமர்ந்து படத்தின் க்ளைமாக்ஸ் கவனித்தனர். சோ பல பெண்களிடம் நிறைய ப்ளாஸ் பேக் இருக்கும் போலிருக்கு.

Saturday, March 4, 2017

நடனம் கபாலி

கலக்கல் நடனம் கபாலி படத்துக்கு பார்த்து உற்சாகப்படுத்துங்கள் .பிடித்திருக்கும் எனில் லைக் செய்து பாராட்டுங்கள் .

நடனம் ஆடியவர் :பி.சஷ்டிக்  வேலன் .




Wednesday, March 1, 2017

+2 தேர்வு



நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்வில் வெற்றி பெறுவதோடு வாழ்க்கைதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். பெற்றோர்கள் முக்கியமாக டென்சன் ஆகாமல் இருக்கவும். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல..என்பதை மனதில் கொள்ளுங்கள்.
#தேர்வு எழுதும் வரைதான் நம் கையில் என்பதை மனதில் நிறுத்தி எழுதுங்கள் வெற்றி நிச்சயம்

Tuesday, February 28, 2017

எமன் படம்



எமன் படம் மெதுவாக நகர்வது போல் தோன்றினாலும் படம் அருமை.இந்த படம் பார்த்தால் அரசியல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.விஜய் ஆண்டனிக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி வருவது உண்மை அவர்களை ஏமாற்றவில்லை. அவர் படத்தில் பிரபலமில்லாத ஹீரோயின்களை போட்டு அவருக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம்.
படத்தில் வில்லன் தியாகராஜன் பேசும் வசனங்கள் சார்ப். சில இடங்களில் கமல் நடித்த சத்யா படம் நினைவில் வந்து போவது என்னமோ உண்மை. படத்தில் பாடல்கள் தேவையில்லாமல் சில இடங்களுல் வந்து போவது மட்டும் சற்று எரிச்சல்..மற்றபடி ஒகே..


Sunday, February 26, 2017

அன்பு.

வெறுக்கப்படும் அன்பு. மீண்டும் கிடைப்பதில்லை எப்போதும் ..


மெட்டி ஒலி,நாதஸ்வரம் சீரியல்

மெட்டி ஒலி,நாதஸ்வரம் சீரியல் மற்றும் எம்டன் மகன் திரைப்பட இயக்குநர் திருமுருகன் அவர்களுடன் ஒரு சின்ன சந்திப்பு

Thursday, February 23, 2017

இசை ..



இசை ..
கேட்டு கொண்டுதான்.
இருக்கிறேன்.
நீ.
புன்னகைக்கும் போதெல்லாம்

தீ



தீப்பிடிக்க..
தீக்குச்சி தேவையில்லை..
உன்.அருகாமை 
போதும்.

நள்ளிரவில்

“சூட்டிங் முடிந்து
நள்ளிரவில் தனியே காரில் செல்ல பயந்து கொண்டிருந்தாள் பேயாய் நடித்த நடிகை மேக்கப்புடன் ..”

புதுமுக நடிகை தேவை


புதுமுக நடிகை தேவை என்ற விளம்பரம் பார்த்து புல் மேக்கப்புடன் சென்றாள் அவள்.. எல்லா மேக்கப்பையும் கலைத்து அவளை தேர்வு செய்தனர் பேயாக நடிப்பதற்கு ..”

Wednesday, February 22, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள் (23.2.17) குமார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் (23.2.17) குமார்.
சில நினைவுகள்
பள்ளியிலிருந்து கல்லூரி வரை பி.எஸ்.ஸி வரை ஒன்றாக படித்தோம்.திருச்சி தேசியக்கல்லூரிக்கு சைக்கிளில்தான் செல்வோம். லேட்டாக செல்லும் போது ஏன் லேட்ட கேட்ட புரொபசரிடம் பஞ்சர் சார் சொன்னவுடன் ,என்னைப்பார்த்து உனக்கு பஞ்சர் சார் கோபமாக ரிடிகுலஸ் என்பார் .இது போன்று பல சமயம் திட்டு வாங்கியுள்ளோம்.
கிளாஸ் கட் செய்து எல்லோரும் சினிமா போனால் நாம் மரத்தடி இல்லேன்னா வெறித்தனமா கிரிக்கெட் மேட்ச் இந்தியா ஆஸ்திரேலியா பார்ப்போம். பல சமயங்களில் சினிமா பார்ப்பதற்கு சுரண்டல் லாட்டரி தான் கை கொடுக்கும் .இரண்டு ருபாய்க்கு சுரண்டல் லாட்டரியில் இருபது ரூபாய் கிடைத்தால் சினிமாக்கு சைக்கிளில் கிளம்பி விடுவோம்.எல்லோரும் மீண்டும் மீண்டும் சுரண்டி காசை விட்டு விடுவார்.கடைக்காரன் திருப்பி டிக்கெட் வாங்க சொன்னாலும் இல்லேன்ன போதும் என்று கிளம்பி விடுவோம்.இப்ப நினைத்தால் சிரிப்பாக வருதுகிறது. திருச்சி முழுவதும் சைக்கிளில் தான் பயணம்.ஒரு முறை வீட்டில் சொல்காமல் நைட் ஸோ படத்துக்கு போயிட்டு வந்து நான் எங்கள் வீட்டு காம்பவுண்ட் ஏறி போய் மாடி ரூமில் படுத்து காலை எழுந்து வந்த போது எங்க அப்பாவிடம் நான் வாங்கிய திட்டு செம திருடனா பூட்டிய காம்பவுண்ட் ஏறி மாடிக்கு போனாய்னு செம டோஸ் .இப்போது இது நமக்கு மலரும் நினைவுகள்.நிறைய சொல்லலாம் .உதயம் ப்டம் பார்த்தது மறக்க முடியாது.கையில் இருந்த சொற்ப காசை வைத்து கடைசி டிக்கெட் வாங்கி.ஸ்கிர்ரின் அருகில் முதல் தரம் பார்த்தது.
நிறைய நினைவுகள் இருக்கிறது.
என் அப்பா மறைந்த போது செய்தறியாது திகைத்த
போது இரவு முழுதும் என் அருகில் இருந்து எல்லா காரியங்களிலும் உடன் இருந்ததை மறக்க முடியுமா..உன் அண்ணன் பிரபு,தம்பி பிர்காஷ்ம் உடன் வந்து இரவில் எனக்கு ஆறுதலாக இருந்தததை மறக்க முடியுமா. ஒரே வருத்தம் பிரகாஷ் இப்போது நம்மிடம் இல்லை.. பிறந்த நாள் நினைவுகளில் சோக நிகழ்சிகள் பகிர்ந்தது விட்டேன் சாரி.
13 நாட்கள் இடைவெளிகளில் இருவர் பிறந்த நாள் .கண்டிப்பாக அப்போது சினிமா பார்ப்போம். இப்போது செல்லில் பேசி வாழ்த்துக்கள் பரிமாறு கொள்கிறோம் .காலம் விரைவாக செல்கிறது.
எப்போதும் திருச்சி வந்தாலும் என் நண்பன் குமாருக்குதான் போன் மீட்டிங் எல்லாமே.
நட்பு முடிவில்லாதது எத்தனையோ நண்பர்கள் வாழ்க்கையில் வந்தாலும் இது ஸ்பெசல் நட்பு..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமார் குடும்பத்தோடு வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

Monday, February 20, 2017

எதிர்பார்ப்பு

                              எதிர்பார்ப்பு

                                                

“வீட்டிற்கு வந்த உறவினர்கள் தின்பண்டம் வாங்கி வரமால் கையில் காசு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான் ரீசார்ஜ் கார்ட் வாங்க வேண்டுமே என்று ராமு ..”

Saturday, February 18, 2017

விழிகளில் ..

விழிகளில் ..
நீ..
உறங்காமல்
நான்..

Sunday, January 15, 2017

ஓடிப்போச்சா ..

                         ஓடிப்போச்சா ..
                                     


“ஜோடியாக போயிடுச்சா எவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செய்தேன் இப்படியா முதலில் நல்ல கூண்டு செய்யணும் லவ் பேர்ட்ஸ் வளர்க்க..”

அந்த படம்

                     அந்த படம்
                                

“ஸ்நாக்ஸ் எல்லாம் ரெடி செய்து விட்டு நண்பர்களோடு சேர்ந்து அந்த படம்   போட்டவுடன் பேரன் நானும் பார்ப்பேன் என்றபோது ..திரையில் கார்ட்டூன் ஓடியது ..”