நிறைய பேசுவோம்

Saturday, February 19, 2011

மொபைல் போன் விர்.. விர் இரவு 2 மணிக்கு

இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது பல நன்மைகள் ஒத்து கொள்வோம் . ஆனால் மொபைல் போன்களால் ஏற்படும் சில தீமைகளில் ஒன்றாக நடந்த சம்பவம் ஒன்றை இங்கே  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .நண்பரின் பையன் கல்லூரியில் இறுதி வருடம் படித்து வந்தான் .இரவு படுத்து உறங்கும் வேளையில் மொபைல் போன் விர்.. விர்.. என்று இரவு 2 மணிக்கு சத்தம் எழுப்பி இருக்கிறது .அப்போது அவன் அருகில் படித்திருந்த அவன் அம்மா எடுத்து பேசியுள்ளார் எதிர்முனையில் பேசியது இளம் பெண் அவர்களின் மகன் பெயரை சொல்லி கொஞ்சல் பேச்சு சினுங்கல் பேச்சுக்கள் அதிர்ந்து போனார்   அம்மா  காரணம்  தன்  ஒரே  மகன்  காதலிக்கிறான்  
என்ன  செய்வது பதட்டத்துடன்  மகனை எழுப்பி பேசியுள்ளார் . ஆனால் அம்மாவுக்கு தெரிந்து விட்டது என்ற ஆதங்கத்தில் அம்மாவை கண்டபடி திட்டியிருக்கிறான் . மேலும் அம்மாவிடம் சரிவர அன்றிலிருந்து பேசுவதுமில்லை அந்த அம்மா நிலைகுலைந்து போய்விட்டார் .இப்போது அந்த பெண்ணை பற்றி நினைத்து பாருங்கள் அந்த பெண் கவலை படமாட்டார்  ஆனால் அவரின் பெற்றோர்கள் ..? 

இதற்கு யார் காரணம் இன்றும் இரவில் போர்வைக்குள் மொபைல் போனை வைத்துக்கொண்டு காதல் வளர்க்கிறேன் என்ற பெயரில் குட்டி சுவராகி போகிறார்களே இவர்களை நாம் எப்படி திருத்துவது நீங்களும் சிந்தியுங்கள் .

என் கருத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி 

கத்தியின்றி .. ரத்தமின்றி ..

கத்தியின்றி ..
ரத்தமின்றி ..
ஒரு கொலை ..
ஆம் ..
அவள் என் ...
காதலைத்தான்

இப்படியும் காதல்

நேற்று.. 
நாங்கள் இருவரும் 
காதலர்களாக சுற்றினோம் .
இதோ ....
இன்று கையசைத்து  
பிரிகிறோம் நண்பர்களாக ..
நாளை ...
மீண்டும் சந்திப்போம் 
கணவன் மனைவியாக 


தங்கம் ஜொலிக்குது மனசு வலிக்குது


நான் அன்று மதுரையில் பிரபலமாக உள்ள நகைக்கடைக்கு தங்க நகை வாங்க சென்றேன் .சிறியதாக ஒரு தோடு மட்டுமே எடுத்தேன் விலையை கேட்டவுடன் ஆடிப்போய்விட்டேன் காரணம் அன்றைய சந்தை விலையை விட கே.டி.எம் காக பத்து சதம் அதிகம் சரி இது வாடிக்கை என்று சமாதானம் செய்து கொண்டேன் அடுத்து அந்த விற்பனை பிரதிநிதி கூறியதுதான்
சங்கடத்தில் ஆழ்த்தியது சேதாரம் மற்றும் நகை வடிவைமப்புக்காக   பதினெட்டு சதம் விலை உயர்வாம் .

     அப்போது நான் கேட்டேன் அவரிடம் இதை விற்கும்போது மொத்தமாக  28 % நட்டம் அப்படிதானே என்றேன் 

"ஏன்....?" என்று ஆச்சர்யமாக பார்த்தார் 

நான் சொன்னேன் எப்படியும் மாற்றத்தானே செய்வோம் அப்போது நீங்கள் வடிவமைப்பு சேதாரம் எல்லாம் எங்களுக்கு தரமாட்டிர்கள்தானே என்றேன் .
சிரித்தார் 

பாருங்கள் கே.டி.எம் யை விட 18 % விலை அதிகம் மேலும் சென்னையில் விற்பதை விட மதுரையில் அன்றைய சென்னை சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு விற்கின்றனர் .

இதை எல்லாம்  கேட்பவர் யாருமில்லையா  சிந்தியுங்கள் என் மனதில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து  கொண்ட திருப்தியுடன் விடை பெறுகிறேன் 

கவிதை கதைகளோடு இந்த மாதிரியான எண்ணங்களையும்  உங்களோடு பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்என் இதயத்திலும்தான்

அவள் ...
வாசலில் மட்டும் 
புள்ளிகளை ..
வைக்கவில்லை ..
என் இதயத்திலும்தான்

இதயத்தை திருடிய அவளுக்கு

இ.பி.கோ  பிரிவுகளை ..
ஒரு முறை ..
புரட்டி பாருங்களேன் 
என் இதயத்தை ..
திருடிய அவளுக்கு 
என்ன தண்டனை 
தரலாம் .. என்று

நட்சதிரங்கள்

அன்பே ..
வானம் பார்த்து .
ஏன் ...
சிரித்தாய்
பார் ...
வரிசையாய் நட்சதிரங்கள் 


அடிக்கடி சிரிக்காதே

இந்த கவிதை நான் கல்லூரியில் படிக்கும்போது வாரமலரில் எழதியது .இது அனைவராலும் ரசிக்கப்பட்ட கவிதை இதோ அந்த கவிதை 

அன்பே ...
அடிக்கடி சிரிக்காதே ..
என்னால் ..
குனிந்து 
சிதறும் சில்லரைகளை  
பொறுக்க முடியவில்லை ..


Friday, February 18, 2011

தேசியகீதம் ..

தேசியகீதம் ...
முடிந்தவுடன் 
அரசியல்வாதி 
கூறினார் ..
பாட்டு நல்லாருந்துச்சு  
ஆனால் ...
அர்த்தம்தான் ..
புரியவில்லை 
தூக்கி எறிந்தாய்

நீ ...
தூக்கி எறிந்தாய் 
என் இதயத்தை 
ஆனால் ..
உடையவில்லை 
காரணம் ..
உள்ளே 
உன் நினைவுகள் 

பந்தையும் வீசுகிறது விழிகள் ..

இது கிரிக்கெட் உலக கோப்பை இந்த வேளையில் இங்கே நான் காதல் கவிதை எழுதியிருக்கிறேன் படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் 

அன்பே.. 
நீ என்ன ...
ஆல் ரவுண்டரோ ..
உன் விழிகள் ..
என்னை நோக்கி 
பந்தையும் வீசுகிறது 
அதே வேளையில்
உன் இதயமட்டை ..
என் பார்வை ..
பந்தையும் ..
தடுத்து விடுகிறது 

  Thursday, February 17, 2011

எறும்புகள் ...

அடியே ...
என் கன்னத்தில் 
எப்படி வந்தது ..
இத்தனை  எறும்புகள் ...
ஒ...  
நீ  முத்தமிட்டதலாஉன் கோலத்தை

ஐந்து மணிக்கு 
எழுந்து பால் ..
வாங்க புறப்பட்டது 
அன்பே ..
உன் கோலத்தை 
பார்ப்பதற்குத்தான்  ...
என்று ..
அம்மாவிற்கு தெரியாதே ..
உயிரையும் தருகிறேன்

இது ஒரு விவாதம் நண்பர்களே கவிதை எழுதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சிலர் கவிதை எழுதுபவர்கள் என்னமோ வாழ்கையில் முன்னேரா தவர்கள் என்பது போலவும் அதுவும் முக்கியமாக கல்லுரி காலங்களில் கவிதை எழுதுபவர்கள்  எதோ ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டு வாழ்கையை பற்றி திட்டமிடாமல் இருப்பது போலவும் சிலர் பேசுகின்றனர் கவிதை வாழ்க்கைக்கு உதவாது என்பது போலவும் கருத்தை சிலர் முன் வைக்கின்றனர் இது என் நண்பர்களோடு  பேசியபோது வந்த விவாதம் .வாழ்க்கையை திட்டமிட் டவனுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை என்பது என் கருத்து கவிதை எழுதுங்கள் எழுத்தை ரசியுங்கள் படிப்பதை ஆர்வமாக்கி கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள் ..என்ன நான் சொல்வது சரியா உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள் . இவ்ளோ பேசிட்டு கவிதை எழுதாமல் போனால் ... இதோ கவிதை 

உன்...
விழிகளில் உறங்க 
இடம் தாயேன்..
என்..
உயிரையும் தருகிறேன் 
விலையாக ..

நட்பு பிரிவதற்குதான்

இந்த வரிகள் நான் கல்லூரியில் அனைவர்க்கும் ஆட் டோகிராப் போட்டபோது எழுதிய வரிகள் இதை இப்போது என் நண்பர்கள் பார்த்தால் என்னை நினைவு கொள்வார்கள் இதோ அந்த வரிகள்

இரவு விடிவதற்குதான் ..
கனவு கலைவதற்குதான் ..
நட்பு பிரிவதற்குதான் 
காதல் இணைவதற்குதான் ..
கல்யாணம் கைகலுப்புக்குதான் 


காதல் விக்கெட் ..

உன் விழிகளை ..
நீ உயர்த்தியவுடன் 
காதல் விக்கெட் ..
வீழ்ந்தது என்று 
சந்தோசப்பட்டேன் ..
ஆனால் ..
மூன்றாவது நடுவராக 
வந்த ..
உன் தந்தை ..
நாட் அவுட் ..
என்று சொல்லிவிட்டாரே ..அவசரம்

எதிரே கிழிந்த ...
உடையில் பிச்சைக்காரி 
அவசரமாக பாக்கடினில் 
தேடினேன் ...
மூக்கு கண்ணாடியை 

(இந்த கவிதை நான் எழுதி உங்கள் ஜூனியர் புத்தகத்தில் வெளிவந்தது) 

Wednesday, February 16, 2011

காதல் ..

நான் கல்லூரியில் படிக்கும்போது வாரமலர் பத்திரிகையில் எழுதியது தோழியின் சிரிப்பில் விழுந்த நண்பனின் நிலை பற்றிய கவிதை இது அன்று இது எங்கள் கல்லூரியில் மிகவும் பிரபலமாக்கியது என்னை கவிதை இதோ

அவள் ... சிரித்தால் 
மலர்ந்தது காதல் ..
மட்டுமா ..
இல்லை இரண்டு 
அரியர்சும்தான் ..

இதை நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்கிறேன்..

.
அன்பெனும் மலர

நான் கல்லூரியில் படிக்கும்போது எழுதிய வரிகள் இது இந்த வரிகளை நான் கல்லூரியில் சேர்ந்த அன்று வகுப்பு கரும்பலகையில் எழுதியிருந்தேன் வரிகள் இதுதான்

அன்பெனும் மலரை 
வளரவிடதே ...
வளரவிட்டபின்...
வாடாவிடதே  ..

இந்த வரிகளுக்கு பதிலாக "அன்பு அப்படியே வளர்ந்துவிட்டாலும் அதை வெந்து விடாமல்   பிறர்பார்க்க காக்கவேண்டும்"  என்று என் தோழி சுபாசினி எழுதி இருந்தார் இன்றும் அதை நினைத்து பார்க்கிறேன் அந்த தோழி எல்லா நலமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன் .. உங்களோடு இதை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி


ஏக்கம்

குழந்தை ...
ஏங்கியது ...
அம்மாவுக்கு பிடித்த
சீரியலாகவும்  ..
அப்பாவுக்கு பிடித்த
கிரிக்கெட்  மேட்சாகவும்
நாம் இருந்திருக்க
கூடாதா என்று..
 (குமுதம் 2.2.11 இதழில் நான் எழுதி பிரசுரமாகிய கவிதை இது )முத்தம்

அன்பே ....
அடிக்கடி முத்தமிடாதே
என்றேனே ...
கேட்டாய பார்..
இப்போது எனக்கு
சர்க்கரை வியாதியாம்..
Tuesday, February 15, 2011

ஓரவஞ்சனை ..

அன்பே...
என் மீது ..
கண்ணாடிக்கு கூடவா ..
ஓரவஞ்சனை ..
என் முகம் பார்த்தால்
அதிலும் உன் முகம்  சேமிப்பு

அன்பே ...
நானும் நிறைய
சேமிக்கிறேன்..
உன் நினைவுகளை..
என் இதய வங்கியில்..
இப்படியும் சில மனிதர்கள்

நேற்று எம்.பி.எ பரீட்சை எழுத சென்றிரூந்தேன் நான் ஸ்கெட்ச் பேனா கொண்டு செல்லவில்லை சரி என்று அருகில் இருந்தவரிடம் கேட்டேன் அவர் உடனே ஆங்கிலத்தில் பை அண்ட்  பிரிங் என்றார் . எனக்கு ஆச்சரியம் அப்போதே முடிவு செய்தேன் இனி எக்ஸாம் ஹாலில் ஓசி கேட்க கூடாது  என்று நான் செய்தது சரிதானே சொல்லுங்கள்


வேசம்


இந்த கவிதை சிலர் மனதின்  வெளிப்பாடு நான் கல்லுரியில்  படிக்கும்போது எழுதியது
நீங்களும் படித்து விமர்சியுங்கள்

"குருட்டு பிச்சைக்காரி
குனிந்து பொறுக்கும் ..
வேளையில்தான் எனக்கு
புரிந்து போனது ...
பார்வை கோளறு என்று.."Monday, February 14, 2011

கவலை

பால் விலை ...
உயர்ந்து விட்டது
பாமாயில்  விலை ...
உயர்ந்து விட்டது..
வெங்காயம்  விலை ...
உயர்ந்து விட்டது..
ஆனால்..
பாமரனின் கவலை
வோட்டின் விலை ...
உயருமா என்பதுதான்


இந்த வலைபக்கத்தில் என்னோட கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் உங்கள்
 கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். இன்றைய காதலர் தினத்தில் சிறிய கவிதை ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்


அன்பே ...
என்னை காணவில்லையாம்..
தேடுகிறார்கள் 
சொல்லிவிடேன்
உன்னிடம்தான்..
இருக்கிறேன் என்று