நிறைய பேசுவோம்
Thursday, September 12, 2024
Wednesday, September 11, 2024
உசாராயிருங்கள்
மதுரையில் உள்ள பிரபல துணிக்கடையில் ஆடித தள்ளுபடியில் துணி வாங்கிய போது கூப்பன் வழங்கி.னர் .அதாவது அடுத்த மாதம் வாங்கும் போது செல்லும் 1500 க்கு 250 என்று பல கூப்பன்கள் ஆனால் வேடிக்கை என்னவென்றால் இப்போது வாங்க சென்றால் எல்லா துணி ராகங்களுக்கும்செல்லாது குறிப்பிட்ட ரகங்களுக்கு மட்டும். என்ன ஏமாற்று வேலை உசாராயிருங்கள்
Tuesday, September 10, 2024
மகா அபத்தம்
மகாவிஷ்னு பேசியதில் பெரிய அபத்தம் போன ஜென்மம் அடுத்த ஜென்மம் என்று பேசியது போன ஜென்மத்தின் பாவம் இந்த ஜென்மத்தில் குறையோட பிறந்துள்ளார்கள் என்று சொன்னால் அந்த பிள்ளைகளை பெற்ற பெற்றொர்கள் எவ்வளவு வருத்தப்படுவர் மற்றவரின் பார்வை அவர்கள் மேல் எப்படி இருக்கும். அசால்டா ஒரு தவறான கருத்தை பரப்பியிருக்கிறார். இப்ப செய்யும் பாவத்திற்கு அடுத்த ஜென்மத்தில் தண்டனைன்னா கேட்பானா எவனாச்சும் அதற்கெல்லாம் சான்று இருக்கா அவர் பேசிய உரையின் தலைப்பு என்ன தெரியல தன்னம்பிக்கை பேச்சா ஆன்மீக பேச்சா.. எதுவாயினும் தவறான கருத்து நீ பாவம் செய்தால் நீ இப்போது வாழும் போதே தண்டனை கிடைக்கும் என்றால் பயப்படுவான் அதோடு நிறுத்தியிருந்தால் வேறு மாதிரி விமர்சனங்கள் வந்திருக்கும்.ஒரு பேச்சாளரை பேச அழைக்கும் போது அவர் எதைப்பற்றி பேசுவார் அல்லது எதைப் பேச வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு தெரியாதா.கடைசியில் இதுவும் அவருக்கு விளம்பரமாகித்தான் போயிருக்கு என்று நினைக்கிறேன். நிகழ்ச்சி நடக்கும்ப்போதோ அல்லது சில மணி நேரங்களில் வைரல் ஆனது எப்படி வைரல் ஆனதா ஆக்கப்பட்டதா.. என்னமோ போடா மாதவா ஒன்னுமே புரிய மாட்டேங்குது.