நிறைய பேசுவோம்

Saturday, April 9, 2011

கவிதை : இதயத்திலும் தொட்டில் கட்டலாமே ..பிரபாஷ்கரன்குழந்தை ..
வரம் வேண்டி  
கோயிலில் ..
ஆலமரத்தில் 
தொட்டில் கட்டும்
பெண்களே ..
தொட்டில் 
இல்லாமல் 
குப்பைதொட்டியில் 
பிரசவிக்கும் 
குழந்தைகளுக்கு 
உங்கள் ..
இதயத்திலும் 
தொட்டில் 
கட்டலாமே ..

கவிதை..:பார்க்கவும் முடியும் - பிரபாஷ்கரன்கவிதை.. எழுதத்தான் 
முடியும் என்றனர் 
இல்லை ..
அன்பே ..
பார்க்கவும் முடியும் 
என்பதை 
உன்னை பார்த்த 
பின்தான் 
தெரிந்து 
கொண்டேன்


Friday, April 8, 2011

கவிதை :இரும்பு இதயம் ----பிரபாஷ்கரன்அன்பே ..
வேண்டாம் ..
என்னை
சீக்கிரம்
காதலித்து விடு
உன்
இரும்பு இதயம்
துரு ..
பிடித்து
கொள்வதற்குள்


Thursday, April 7, 2011

கவிதை : இமைகள் .. பிரபாஷ்கரன்


இந்த கவிதை நான் பத்திரிக்கையில் எழுதி வெளி வந்தது .பத்திரிகையின் பெயர் நினைவில் இல்லை 

இமைகள் 

அடிக்கடி 
முத்தமிட்டு 
கொள்ளும் ..
அவசர 
காதலர்கள் Wednesday, April 6, 2011

கவிதை : ஜெயித்தது காதல் .. என்பதாலா..-பிரபாஷ்கரன்


நீ.. 
இமைகளை ...
விசிறியபோது..
படபடத்தது 
என்
இதயம் 
உன் 
புன்னகை 
வீசிய 
தென்றலில் 
பறந்து போனது 
என் இதயம்
உன் 
பாதம் பட்ட
இடங்களில் 
தொலைந்தது 
போனது 
என்
பார்வைகள் 
நீ ..
போகும் 
இடமெல்லாம் 
ஓடி .
வந்தது 
என் மனது 
நிஜமாகும் 
என்று ..
நான் நினைத்த 
நினைவுகள் 
எல்லாம் ..
உன் ..
நினைவாகவே 
இருப்பதன் ..
காரணம் ..
ஜெயித்தது 
காதல் ..
என்பதாலா..Tuesday, April 5, 2011

இந்தியா வெற்றி பெற்றால் பூனம் பண்டே நிர்வாணமாக ஓடுகிறேன்


இந்தியா வெற்றி பெற்றால் பூனம் பண்டே நிர்வாணமாக ஓடுகிறேன் என்று அறிவுப்பு செய்து அவர் விளம்பரம் தேடி கொண்டார் . இந்தியா வெற்றி பெற்றால் மொட்டை அடிப்பேன் காவடி எடுப்பேன்   இப்படி பல வேண்டுதல்களை நாம் கேட்டு இருக்கலாம் . ஆனால் நிர்வாணமாக ஓடுவேன் என்கின்ற அறிவுப்பு எல்லாம் நம்மை எரிச்சல் அடைய செய்கிறது அவர் ஓடுவாரா மாட்டாரா என பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கும் விவாதங்கள் வேறு ஏன் இவர் இப்படி பிரபலம் அடைய வேண்டும் வெளி நாட்டில் கால் பந்து விளையாட்டில் பல மாடல்கள் இப்படி சொன்னதை கேள்விப்பட்டுள்ளோம் . இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது  இப்படி சில நிகழ்வுகள் நடந்துள்ளன ஆனால் இந்தியாவில் ஒரு பெண் இப்படி பேசியிருப்பதை வன்மையாக அனைவரும் கண்டிக்க வேண்டும் இன்னும் IPL   போட்டிகளில் எத்தனை பேர் ஓடுவேன் என்று சொல்வார்கள் என்று பயமாய் இருக்கிறது .இந்த பெண்ணை என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள் .

Monday, April 4, 2011

கவிதை : சங்கீதம் - பிரபாஷ்கரன்அன்பே ..
நானும்
சங்கீதம்
கற்று கொண்டேன்
உன் ..
பெயரை
உச்சரித்து.. உச்சரித்து ..