நிறைய பேசுவோம்

Saturday, March 26, 2011

பயமாயிருக்கு இலவசங்கள் ..எங்கே ..கொண்டு செல்கின்றன


வீட்டிற்கு ஒருவருக்கு
வேலை கொடுப்போம்
வீடு இல்லாதவர்களுக்கு
வீடு கொடுப்போம்
ரோடில் போகும்
எல்லா பஸ்சிலும்
இலவசம் ..
லேப்டாப் இலவசம்
இன்டர்நெட் சேவையும்
இலவசம் ..
இலவசமா என்ன
கொடுக்கலாம்னு
ஐடியா கொடுத்தா
சிறந்த ஐடியாக்கு
சிறப்பு இலவசம்
டாஸ்மாக் சரக்கு
தினம் தினம்
இலவசம்னு
மட்டும் யாரும்
சொல்லிடாதிங்க
பயமாயிருக்கு
இலவசங்கள் ..
நம்மை ..
எங்கே ..
கொண்டு செல்கின்றன


Friday, March 25, 2011

கவிதை : வேதனை இலவசம் - பிரபாஷ்கரன்


கிரைண்டர் ..
தருவோம் 
மிக்சி ..
தருவோம் ..
வீடு  கட்டி
தருவோம் ..
அரிசி ..
தருவோம் .. 
எல்லாம் .. 
இலவசம் ..
கூடவே ..
மாசா.. மாசம் 
செலவுக்கு 
பத்தாயிரம் ..
எல்லா .. 
வீட்டிற்கும் ..
கொடுத்திங்கன்னா ..
நாமும் ..
வல்லரசு ..
ஆயிடுவோமில்ல 
என்னது ..
கின்னஸ் ..
புத்தகத்தில் ..
இலவச சாதனை .
பற்றி ..
இலவசமாக 
போடுகிறார்களா ..




Thursday, March 24, 2011

கவிதை : கன்னத்தில் விழுந்த குழிகளில்.- பிரபாஷ்கரன்


அன்பே ..
உன் கன்னத்தில் 
விழுந்த குழிகளில்.
விழுந்து ..
சிதறிப்போனது 
என்னவோ ..
என் ..
எண்ணங்கள் தான் 

Wednesday, March 23, 2011

கவிதை : காதலில் .. ஜெயிக்க .. - பிரபாஷ்கரன்


காதலிக்க ..
அன்பும் பாசமும் 
தேவை ..
ஆனால்..
காதலில் ..
ஜெயிக்க ..
காசும் பணமும் .
தேவை ..
அன்பே ..
வேண்டாம் 
நான் ..
உன்னை காதலித்து 
தோற்று ..
கொண்டே இருக்கிறேன் 
என்னிடம் ..
அன்பும் பாசமும் 
கொட்டி கிடக்கிறது 

Tuesday, March 22, 2011

பணம்தான் இவர்களுக்கு முக்கியம்


மதுரையில் சில பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விட்டன . இன்னும் சில பள்ளிகளில் தேர்வுகள் மார்ச் மாதத்திற்குள் முடியபோகிறது . ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் கொளுத்தும் வெயிலில் மாணவ மாணவிகளுக்கு இன்னும் தேர்வு தேதிகள் கூட அறிவிக்க படவில்லை ஏப்ரல் மாதம் 10 தேதி வரையிலாவது பள்ளிகளை நடத்துவதே இவர்கள் திட்டம் காரணம் சிலபஸ் முடிக்கவில்லையே என்ற அக்கறையா  கண்டிப்பாக இல்லை காரணம் ஏப்ரல் மாத பீஸ் வாங்க வேண்டும் மேலும் 10 நாள் நடந்தாலும் van மற்றும் பஸ் பீஸ் வாங்கலாமே அதற்குதான் . அரசாங்கமாவது மார்ச் 31 க்குள் அணைத்து பள்ளிகளையும் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் சில பள்ளிகளில் தேர்வு முடித்து ஜாலியாக விளையாடும் பிள்ளைகளை பார்த்து மற்ற பிள்ளைகள் எப்படி படிக்கும் மேலும் கொளுத்தும் வெயிலில் தேர்வுகளை முன்னரே முடிக்க வேண்டாமா பணம்தான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அந்த பீஸ் சேர்த்து முன்பே வாங்கி கொள்ளவேண்டியதுதானே .. இதை படிப்பவர்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

கவிதை : அட்மிஷன் .. பிரபாஷ்கரன்



அம்மாவிற்கும் ..
அட்மிஷன் ..
தேடினான் ..
முதியோர் 
இல்லங்களில்


Monday, March 21, 2011

கவிதை : லஞ்சம் ... பிரபாஷ்கரன்



பூசாரி ...
தட்டில் ...
சில்லறை 
போட்டவுடன் தான் 
கிடைத்தது ..
சாமியின் புஷ்பம்