நிறைய பேசுவோம்

Monday, October 13, 2014

மழை துளிகளில் ..



மழை துளிகளில் ..
உன் முகம்
விழுந்தவுடன்
சிதறித்தான்
போகிறது
உன் நினைவுகள்
போல் ...

Tuesday, September 30, 2014

அணைவதில்லை என்றும் ...


மனதிற்குள்..
எரிக்கப்படும்.
நினைவுகள்
அணைவதில்லை
என்றும் ...

Tuesday, September 2, 2014

வாடாமல்..

நம்..
நினைவு செடியில்
தினம் ஒரு
பூ ..மலர்ந்து..
கொண்டுதான்
இருக்கிறது ..
வாடாமல்..

Monday, September 1, 2014

நல்ல லாபம் தரும்

Tech Mahindra பங்கை கவனித்து வாருங்கள் Share பிரிக்கப்படலாம் .நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் தரும் .முடிவெடுங்கள் .லாபம் பாருங்கள்

Friday, August 29, 2014

அதிகம் ஆசைபடுபவர்கள் தான் அதிக நஷ்டம் அடைவர்



 பங்கு சந்தையில்அதிகம் ஆசைபடுபவர்கள் தான் அதிக நஷ்டம் அடைவர் .பொதுவாக பங்கை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் கோடிகள் கிடைக்கும் லட்சம் கிடைக்கும் என்று சொன்னால் நம்பாதிர்கள். அப்படி கிடைத்தால் எல்லோரும் லாப்டாப் கையுமாக சேர் மார்க்கெட்டில் தான் இருப்பர் எதற்கு வேலைக்கு போக வேண்டும் . இன்ட்ரா டே டிரேடிங்கில் லாபம் அடைந்தவர்கள் குறைவே ..
நீங்களே பங்கை தேர்ந்து எடுங்கள் .காத்திருங்கள் உதாரணமாக காலை எழுந்தவுடன் பல் துலக்குவிர்கள் என்ன பேஸ்ட உபயோகிபிர்கள் கோல்கேட் என்று வைத்து கொள்ளுங்கள் அதிகம் அது மார்க்கெட்டில் விற்கிறதா பாருங்கள் அந்த பங்கை கவனியுங்கள் .நன்கு லாபம் உள்ளது என்றால் வாங்கி விடுங்கள்.
அடுத்து டி அல்லது காபி குடிப்பிர்களா டாடா காபி பாருங்கள் இது உதாரணம்தான் நன்கு விற்கிறது என்றால் அதை வாங்குங்கள் அடுத்து .. என்ன ட்ரஸ் ஜான் ப்ளேயர் என்றால் ITC ஷேர் பாருங்கள் .
அடுத்து பைக் பாருங்கள் hero Honda அல்லது TVS பாருங்கள் அந்த பங்குகளை கவனியுங்கள் .இப்படி நம் அன்றாட நிகழ்வில் நாம் பயன் படுத்தும் பொருட்கள் மூலமே நல்ல பங்கை தேர்ந்து எடுக்கலாம் இது உதாரணம்தான்..
எந்த பங்கை தேர்ந்து எடுத்தாலும் பேப்பர் வொர்க் செய்யுங்கள் அதன் தினசரி விலை நிலைவரங்களை எழுதி வாருங்கள் பின்னர் உங்களுக்கே ஒரு ஐடியா வரும் அதை கொண்டு வாங்குங்கள் .
பின்னர் பேப்பர் ,நெட் , டி.வி மூலம் பங்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நீங்களே எக்ஸ்பர்ட் ஆகிவிடுவிர்கள் .
எக்கரானத்தை கொண்டும் news based பங்கு வாங்குவதை தவிருங்கள்

Friday, August 22, 2014

எல்லா கட்சியும்

எல்லா கட்சியும்
என் கட்சிதான்
குவார்ட்டரும்
பிரியாணியும்
ரூபாயும் தரும்வரை ..

Sunday, June 15, 2014

லாபம் முக்கியம் லாபம் மட்டுமே முக்கியம்



காட்சி 1:
என் நண்பர் மிக பெரிய நகை கடையில் எட்டு கிராம் அளவிற்கு தங்க காசு வாங்கியிருந்தார் .அதை ஒரு அவசர பணத்தேவைக்காக விற்பதற்காக வாங்கிய அதே கடைக்கு சென்றார் . ஆனால் கடையிலோ செக்காகதான் தருவோம் வேண்டுமானால் நகையாக வாங்கி கொள்ளுங்கள் என்றனர் .நண்பரோ பணம்தான் வேண்டும் என்றவுடன் நீண்ட விவாதம் செய்து பணமாக தர ஒத்து கொண்டனர் .ஆனால் 1% சதம் கழித்து தான் தருவோம் என்றனர் கேட்டதற்கு purchase tax என்றனர் . வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டார் நண்பர் .மற்ற நகை கடையில் வேறு கடையில் வாங்கிய தங்க காசை வாங்குவதில்லை பணமாக தருவதற்கு . நாம் வாங்கிய கடையிலோ இப்படி.. அதே காசை 2% சதம் லாபத்துடன் அடுத்த நபருக்கு விற்கின்றனர் .. என்ன செய்வது கொள்ளை ..

காட்சி 2:
நான் ஒரு பிரபல நகை கடையில் தோடு வாங்கினேன் சீட்டு போட்டதன் மூலம் தோடுடன் இருக்கும் tagல் எடை 3.40 என்று இருந்தது . ஆனால் காரட் மீட்டரில் எடை பார்த்த போது எடை 3.32 இருந்தது .கேட்டதுக்கு 10 மி.லி
வரை + அல்லது வரலாம் என்றனர் .. இதுவே எடை 3.48 என காட்டினால் நம்மிடம்தான் காசை வாங்கி இருப்பார்கள் . சீட்டு போட்டதினால் வேறு வழியில்லாமல் வாங்கினேன்..

இதிலிருந்து தெரிவது நகையுடன் இருக்கும் tag ல் உள்ள எடையை நம்பி விடாதிர்கள் எடை போட்டு வாங்குங்கள்.. செய்கூலி சேதாரம் என்று இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவில்லை ஒவ்வொரு முறையும் பேரம் பேச வேண்டியுள்ளது .அதுவும் சிறிய பொருள்கள் எடுக்கும் போது இவர்கள் சொல்லும் சேதாரம் அப்பாட கொடுமை . முதலிடுக்கு தங்கம் வாங்குபவர்கள் E GOLD முறையில் செய்யுங்கள் .
நகை கடை வியாபாரிகளே லாபம் முக்கியம் லாபம் மட்டுமே முக்கியம் என்று நினைக்காதிர்கள்


Friday, June 13, 2014

கண்கள் -பிரபாஷ்கரன்

                                                              

                                                                        கண்கள்
                                                                          -பிரபாஷ்கரன்


“ரம்யாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாமல் தலையை குனிந்து கொண்டான் சேகர் “

“என்ன சேகர் இப்ப என்னை எதற்கு பார்க்க வந்தாய் .அதுவும் இத்தனை வருடம் கழித்து ..” கேட்டாள் ரம்யா

“என் அம்மா பேச்சை கேட்டு உனக்கு துரோகம் செய்துட்டேன் எனக்கு நிம்மதி இல்லை என்னை ஏற்றுக் கொள்வியா “ விம்மலுடன் கேட்டான் சேகர்

ரம்யாவின் முகத்தில் கோபம் தெரிந்தது
“சேகர் உன் மனைவி குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்” அவள் கேட்டவுடன் தலையை குனிந்து கொண்டான் சேகர்

“நீ என்னை ஏமாற்றியதற்கு உன் குடும்பம் என்ன செய்தது .. அவர்கள் ஆசை கனவுகளை நிறைவேற்று உன் குடும்பதத மகிழ்ச்சியா வைத்திரு.. ஒரு கோழையை காதலித்தது ஏன் தவறு இனி இது மாதிரி நினைப்போடு என்னை பார்க்க வராதே “

சொல்லியவள் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.. ஏனோ அவள் விழிகளில் வழிந்த கண்ணீர் ...காதலை சொல்லியது அது அவளுக்கு மட்டுமே தெரியும் ..”
-பிரபாஷ்கரன்

Wednesday, June 11, 2014

சிறுகதை: வீரம்

சிறுகதை:
வீரம்

-பிரபாஷ்கரன்

“என்ன சுதிர் பேசிட்டியா அந்த பவுலரிடம் ..” கேட்டான் இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் ராகுல்..

“பேசிட்டேன் ஒரு பந்துக்கு 10 லட்சம் கேட்கிறான் “..
“பரவாயில்லை முடிச்சிடு இன்னும் இரண்டு பேர் அவுடடானதும் நான் விளையாடனும் அப்ப நடக்கணும் ..”
“கண்டிப்பாக நடக்கும் சொன்னான் சுதிர் “

“சொன்னது போலவே ராகுல் அந்த ஒரு ஓவரில் ஆறு சிக்சர் அடித்தான்”

புகழ் மழையில் திளைத்தான் ராகுல்
“டே ராகுல் 60 லட்சம் ரொம்ப அதிகம்டா”- சொன்னான் சுதிர்

சிரித்த ராகுல் மாலை பேப்பர் நியுஸ் பாரு என்றான்

மாலை செய்தியில் ராகுல் ஐ.பி.ல ஏலத்தில் 14 கோடிக்கு ஏலம் போயிருந்தான் ராகுல்
Unlike

Monday, June 9, 2014

புன்னகை...அரியர்ஸ் .


உன்..
புன்னகை ஒன்றே
போதும் ..
நான்..
அரியர்ஸ் .
வாங்குவதற்கு.

Monday, June 2, 2014

நினைவு சாரலில்



உன்..
நினைவு சாரலில்
நனையும் போது
மின்னி மின்னி
மறையும்..
உன் புன்னகை
நானும் ..
நனைந்து கொண்டே
இருக்கிறேன்.
இதமாக.

Monday, May 12, 2014

ஆயாக்கள் தினம்

அன்னையர் தினம்
சரி..
என்று..
ஆயாக்கள் தினம்
கேட்கும்
பல குழந்தைகள்..

Sunday, May 11, 2014

தொலைந்து போன காதல்கள்

தொலைந்து போன
காதல்கள்
இன்றும்
தேடப்பட்டு கொண்டுதான்
இருக்கின்றன
பேஸ்புக் டிவிட்டர்
ஆர்குட்டில்..

Saturday, May 10, 2014

ரத்தத்தில் சர்க்கரை

உயர்ந்து கொண்டே..
போகிறது
ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு. நீ
தரும் .
முத்தங்களால்

Thursday, May 8, 2014

ஈரமில்லா ..



ஈரமில்லா ..
உன் இதயத்தில்
ஈரம்
காய்ந்து போனது
ஆனால்
அன்று
நீ தந்த..
முத்தத்தின் ஈரம்
இன்றும்..

Wednesday, May 7, 2014

அடிக்கும் குளிர்

அடிக்கும் குளிர்
இதமாய் ..
உன் அணைப்பை
தேடி..
அணைப்பாயா.
எரியும்..நெருப்பை
இதமான குளிரில்
வா..
வெப்பமாய் ....

Sunday, May 4, 2014

ஜெயிப்பது நீ..

நானும்
தோற்றுதான்
போகிறேன்
ஜெயிப்பது நீ..
என்பதால் ..

Saturday, May 3, 2014

மனதில் தூறலாய்..

மழை..
வரும் போதெல்லாம்
தவறாமல்..
நீ ..
வந்து விடுகிறாய்
மனதில்
தூறலாய்..
மனசும்
நனைந்து விடுகிறது

Tuesday, April 29, 2014

வலி


நினைவுகள் ..

வலிப்பதில்லை
நிஜம்தான்..
வகிக்கிறது..

Saturday, April 26, 2014

பற்றிய. தீ..

உன் ..
விரல்களால்
பற்றிய. தீ..
என்..
உடலெங்கும்
பற்றி ..
எரியும் முன்..
கட்டி அணையேன்..

Thursday, April 24, 2014

உன்னில் நான்

உன்னில் நான்
என்னில் நீ..
என்று..
நாம்..
நாமவோம் ..

Saturday, April 12, 2014

அழகு முகமா

பஸ்ஸில் ..
வியர்வை. நெரிசலில்
வியற்புடன்..
திரும்பி பார்த்தேன்
அவளை ..
வியற்பிற்கு காரணம்
அவளது ..
அழகு முகமா
உண்மையை. சொன்னால்
மேலுதட்டில் சின்ன
பூனை மீசையாம்

Monday, April 7, 2014

நாய்க்குட்டி..

கொஞ்சி ..
விளையாடுவதற்கு
எனக்கு..
நாய்க்குட்டி..
தேவை இல்லை
நீ...
இருக்கிறாயே ...

Saturday, March 29, 2014

கோவில் வாசலில்

கோவில் வாசலில்
செருப்புக்கு..
டோக்கன் வாங்கியவுடன்தான்
நிம்மதி பிறந்தது
மனதில் ..
சாமி யை நிம்மதியாக
தரிசிக்கலாம் என்று..

Sunday, March 23, 2014

குவியும்.. உன் உதடுகளில்

குவியும்..
உன் உதடுகளில்
தடுக்கி
விழும் ..
என் மனது
எழவது..
எப்போது...

Saturday, March 22, 2014

புன்னகை தேடி.

உன்..
புன்னகை தேடி..
நானும்
கோடை வெயிலில் ..

Wednesday, March 19, 2014

அரியர்ஸ் ...

நீ..
சிரித்த. போதெல்லாம்
தவறாமல்
கிடைத்த து
அரியர்ஸ் ...

Friday, March 14, 2014

பொய் ...



பொய் ...
நான் உன்னிடம்
சொல்லும் போதும்
நீ என்னிடம்
சொல்லும் போதும்
அது..
உண்மையாதான்
தெரிந்தது..
இதுவும் கூட..
உண்மைதான்...

Wednesday, March 12, 2014

உறங்காத நினைவுகளுடனே..


 
உறங்காத உன்
நினைவுகளுடனே..
நான்..
உறங்கி போகிறேன் ..

Tuesday, March 11, 2014

நான்... பொய் .. சொன்னதில்லை..

நீ...
அழகாய்
இருக்கிறாய்
என்று என்றுமே..
நான்...
பொய் ..
சொன்னதில்லை..

-#பிரபாஷ்கரன்

Sunday, March 9, 2014

முத்தங்கள் ... உதிரவில்லை

அன்று ..
நீ தந்த
முத்தங்கள்
இன்று ம் உதிரவில்லை..
நீ மட்டும் ...

...............

Friday, March 7, 2014

பிரபாஷ்கரன் கவிதை சுடர் நூல்-ஆய்வுரை



கவிதை சுடர் நூல் வெளியிட்டு விழாவில் பிரபாஷ்கரன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார் அந்த விழாவின் பு




கைப்படங்கள் இங்கே

Monday, March 3, 2014

மனதுக்குள்.. எரியும் காதல்.. தீயில்..

மனதுக்குள்..
எரியும் காதல்..
தீயில்..ஏனோ..
பொசுங்குவதே இல்லை
உன் நினைவுகள் ..

Sunday, March 2, 2014

கவிதை சுடர் - நூல் வெளியிட் டு விழா

கவிதை சுடர் - நூல் வெளியிட் டு  விழா

பூசாரி யின் தட்டில்

பூசாரி யின் தட்டில்
சில்லறை. போட்டவுடன்
கிடைத்தது ..
சாமியின். புஸ்பம் ...

Thursday, February 27, 2014

நிலாவும் ..நீயும்


நிலாவும் ..நீயும்
அழகுதான் .
ஆனால் ..
இருவருமே .
எட்டாத உயரத்தில்..

Wednesday, February 19, 2014

நீ.. இல்லாத போதும்

உன்...
சுவாசம் இன்றும்
என்னருகே..
வீசிக் கொண்டுதான்
இருக்கிறது
நீ..
இல்லாத போதும்