நிறைய பேசுவோம்

Saturday, February 26, 2011

இணையதளத்தில் பணம் சம்பாதிக்க


இணையதளத்தில் பணம் சம்பாதிக்க நம்மில்  பெரும்பாலோருக்கு ஆசை இருக்கும் அல்லவா இதோ அதற்கான வழி திரையில் தோன்றும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் நாம் பணம் சம்பாதிக்கலாம் சிறிய தொகையாக தோன்றினாலும் நாளடைவில் அது பெரிய தொகை ஆகிவிடும் நண்பர் ஒருவரின் பிலாக்யை பார்த்து தெரிந்து கொண்டேன் உங்களுக்கும் விருப்பம் இருந்தால்  .முதலில் Paypal அக்கௌன்ட்  ஒன்று துவக்கி கொள்ளுங்கள் பின் கீழ்காணும் லிங்க்யை கிளிக் செய்யுங்கள் அதில் கேட்கப்படும் விபரங்களை கொடுத்து ஒரு கணக்கை துவக்குங்கள்  தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் கட்டாயம் இல்லை .நான் பார்த்த விசயத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் . .
சரி கவிதையும் எழுதி விடுவோமா  இதோ

அன்பே ...
என் முகவரியை ...
உன்னிடம் ...
தொலைத்து விட்டு ..
தேடுகிறேன் ...
சொல்லிவிடேன் ..
உன் மின்னஞ்சல்  ..
முகவரியையாவது   சச்சின் இரட்டை சதம்


அன்பே ...
சச்சின்  மட்டுமா ..
இரட்டை சதம் ..
அடித்தான் ..
நானும்தான் ..
உனக்கு தொடர்ந்து ..
காதல் கடிதங்கள் 
எழுதியதால் ..

இரண்டு செல்போன்கள்அன்பே .. 
அடிக்கடி  எனக்கு ..
நானே ..
என் செல்போனுக்கு .. 
போன செய்து ..
கொள்கிறேன் ..
காரணம் ...
ரிங் டோனாக ..
உன் சிரிப்பைதான் ..
பதிவு செய்துள்ளேன் 

பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்துரையில் மிகவும் பிரபலமான மெட்ரிகுலேசன் பள்ளியில் K .G படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவைகளை முதல் நாளே அவர்கள் நாட்குறிப்பில் இதுதான் கொண்டு வரவேண்டும் என்று எழுதி விட்டு விடுகின்றனர் .(உ.ம் ) கீரை சாதம் என்றால் அதைதான் அன்று கொண்டு வரவேண்டும் அது குழந்தைகளுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை . ஆனால் கவலை படவேண்டிய பெற்றோரும்  பள்ளியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அதையே கொடுத்து விடுகின்றனர் ஆனால் குழந்தைகள் தான் பாவம் சரியாக சாப்பிடாமல்  பிடித்ததை சாப்பிடாமல் எப்படி படிக்க முடியும் . மேலும் தினமும் சரியாக சாப்பிடாமல் குழந்தைகள்  வீட்டுக்கு வருகின்றனர் உடல் நலம் பாதிப்பும் ஏற்படுகிறது .பள்ளியில் சென்று ஒரு சில பெற்றோர்கள் கேட்டபோது இது பள்ளியின் விதி முறைகள் என்று சொல்லியுள்ளனர் . இது விதி முறையா அல்லது குழந்தைகளின் விதியா தெரியவில்லை . அங்கு படித்தால் குழந்தைகள் நன்றாக படிக்கும் ஆங்கிலம் பேசும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை என்ன செய்வது .

இதழ்கள்

இது இதழ்களை பற்றி சொல்லப்பட்ட கவிதை 


அன்பே ..
உன் ...
இதழ்களை மூடிக்கொள்
பார் ..
மலர்களை .. தேடி 
வந்த வண்டுகள் 
உன்  இதழ்களை
நோக்கி ..


Friday, February 25, 2011

நினைவுகள்


இந்த கவிதை சிறிது வித்தியாசமானது அனைவராலும் பாராட்டு பெற்றது 

போர்த்திய...
கொசுவளைக்குள்ளும் ..
கொசுக்கடியாய்...
அவளின் நினைவுகள் 


ஆங்கில மோகம் .. தமிழுக்கு வீழ்ச்சி

பாருங்கள் இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது .இப்படியும் நம் நாட்டில் நடக்கிறதே ... pre KG யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முதல நாள் இரவே  விண்ணப்பம் வாங்க  பிரபல பள்ளிகளில் வரிசையில் காத்திருக்கும்  மக்கள் அதிகம் . காரணம் ஆங்கில மோகம்,  பள்ளிகளில் ஆங்கில கல்வி முறையில்   சேர்க்க   தனியார்   பள்ளிகூடங்களுக்கு   நன்கொடையாக கொட்டிகொடுக்கும் பலரும் கல்லூரியில் சேர்க்கும் போது  அரசு கல்லூரியில் சேர்க்கவே  விரும்புகின்றனர் .இதற்கு காரணம்  அரசு  பள்ளிகளின் தரம் குறைந்து  காணப்படுவதுதான்  அதே சமயம் அரசு   கல்லூரிகளின்   தரம் உயர்ந்துள்ளது .எனவே அரசு பள்ளிகளின் தரம் முதலில் உயரவேண்டும் . மேலே கண்ட விளம்பரத்தின் வளர்ச்சி தமிழுக்கு வீழ்ச்சியாக முடிந்து விடும் அபாயம் உள்ளது எனவே அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துங்கள் .. உயர்த்துங்கள்.. உயர்த்துங்கள்

Thursday, February 24, 2011

கண்களுக்கு

இந்த கவிதை நான் கல்லூரியில் படிக்கும் போது 'பாக்யா' புத்தகத்தில் நான் எழுதி வெளி வந்ததது  இந்த கவிதை பெரும் வரவேற்பையும் பெற்றது .

அன்பே ...
என் கண்களுக்கு ..
என்ன லஞ்சம் ..
கொடுத்தாய் ..
உன்னையே .. 
சுற்றி வருகிறது ...
விசிறி...


அவள் ...
விசிறியது இமைகளைத்தான்  ..
ஆனால் ...
வியர்த்தது ...
என் விழிகளுக்கல்லவா..! 


காதல் பிச்சைக்காரன்


அவள் ...
சிரிக்கும் போதெல்லாம் ..
சில்லரைகளை  ..
பொறுக்கி.. பொறுக்கி..
இதோ ..
நானும் ... 
காதல் பிச்சைக்காரனாக 
 Wednesday, February 23, 2011

மனதை காயப்படுத்தாதீர்கள்


இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது.

நான் சந்தித்த ஒரு சிலர் தான் மட்டுமே புத்திசாலி என்று நினைத்து கொள்கிறார்கள் நினைக்கட்டும் தப்பில்லை ஆனால் மற்றவர்கள் அனைவரும் புத்திசாலிகள் இல்லை என்று நினைகின்றனர் (மற்றவர்கள் முட்டாள் ) .அதோடு இல்லாமல் அடுத்தவர்களை மட்டம் தட்டுவது மற்றவர்கள் எந்த செயல் செய்தாலும் அதை மட்டம் தட்டி பேசுவது .இந்த மனப்பான்மை இருப்பவர்களோடு நாம் பழகுவதுதான் தவறு என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  சொல்லுங்கள் மகிழ்ச்சி அடைவேன் .

இன்னும் சொல்லபோனால் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட போட்டிகளில் நம்  கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேருக்கு பரிசு கிடைக்கிறது . ஆனால்   நம் அருகில் இருக்கும் நண்பருக்கோ பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுக்கோ  சிறிய பரிசு கிடைத்தால் கூட அதை பாரட்டும் மனப்பான்மை நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை இந்த நிலைமை மாறவேண்டும் என்பதே என் ஆசை 

முக்கியமாக ஆணவமும்,  தான் என்ற அகம்பாவமும்   என்றுமே நமக்கு நன்மை செய்யாது இதை புரிந்து கொள்ளவேண்டியது  காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை 

இது நான் சமீபத்தில் சந்தித்த சில நபர்களினால் ஏற்பட்டது இதை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் எனக்கு ஒரு மனதிருப்தி ..இதற்கு ஒரு தீர்வு சொன்னீர்களானால் மகிழ்வேன் . நன்றி 


தீபாவளி


எங்கள் வீதியில் ..
மட்டும் ..
தினந்தோறும் தீபாவளி 
ஆம் ...
என்னவளின் ..
மத்தாப்பு புன்னகையால் ..


Tuesday, February 22, 2011

விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்

கணவர் "செக்ஸ் டார்ச்சர்': குடும்பமே தற்கொலை  என்ற இந்த செய்தியை பார்த்தவுடன் மனது பதை பதைத்தது இது நம் தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது இது இன்றைய பத்திரிக்கை செய்தி . கணவன் குடித்து விட்டு வந்து இவ் வாறு கொடுமை படித்தியதால் அந்த பெண் தாய்,தந்தை ஆகியோர் விஷம் அருந்தி தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர் இது எவ்வளவு கொடுமையான விஷயம் கணவனே செக்ஸ் டார்ச்சர் கொடுத்தால் அந்த பெண் என்ன செய்வாள் உலகம் அறிவியல் வளர்ச்சி எவ்வளவு அடைந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துதான் வருகின்றன ,இங்கும் காவல் நிலையத்தில் கவுன்சிலிங் நடந்திருக்கிறது அதன் பிறகே இந்த நிகழ்வு ஒரு வேளை மனோதத்துவ நிபுணர் மூலம் கவுன்சிலிங் நடந்திருத்தால் முடிவு மாறியிருக்கலாம் தெரியவில்லை நடந்த பிறகு அப்படி இருக்கலாம் என்று காரணம் சொல்வது சரியில்லை இருந்தாலும் இது மாதிரியான நிகழ்வுகள் நடக்காமலிருக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி செய்ய   வேண்டும் என்பதே என் விருப்பம் காலை பேப்பரில் இந்த செய்தியை பார்த்தவுடன் மனது வலித்தது . 

உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இதை வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

செய்தியில்  நான் படித்த சம்பந்த பட்ட நபர்களின் பெயர்களை நான் இங்கு வெளியிடவில்லை என்பதை விட வெளியிட  விரும்பவில்லை என்பதே உண்மை

தாஜ்மஹால்

 
நான் ..
கட்ட போகும் ..
தாஜ்மஹாலுக்கு 
கற்கள் தேவையில்லை ..
என்னவளின் ...
இதயம் ..
மட்டுமே போதும் 

நினைவுகள்பூக்கள் மட்டும் ...
மலர்வதில்லை ...
நினைவுகளும்தான்...
என்னவொன்று பூக்கள்
வாடி விடுகின்றன
ஆனால்...
நினைவுகள் என்றுமே
வாடுவதில்லை

சங்கீதம்


அன்பே ..
மெல்ல மெல்ல 
நடந்து வாயேன் ..
உன் கால்கள் ..
இசைக்கும் சங்கீதத்தை ..
என் காதுகளும் ...
கேட்கட்டும் ..


Monday, February 21, 2011

அவளின் நினைவுகள் ..


இதோ ...
முன்னுக்கு ..
வந்து விட்டேன் ..
நான்..
ஆனால்..
தூரத்தே கொஞ்சம் 
பசுமையாய் ...
அவளின் நினைவுகள் ..சச்சின்


போதும் ...
நிறுத்திக் கொள்...
நீ வீசும் ..
பார்வை பந்துகளை 
தடுத்தாடுவதற்கு  ..
நான் ஒன்றும் ..
சச்சின் அல்ல ...


சுதந்திரம்

இந்த கவிதை நான் எழுதி வாரமலர் இதழில் வெளியானது உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி .

கம்பி .. கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..Sunday, February 20, 2011

முகம் சுளிக்க வைத்த காதலர்கள்

இன்று விடுமுறை ஆதலால் குடும்பத்துடன் வெளியில் செல்ல திட்டமிட்டு மதுரையில் புகழ் பெற்ற நாயக்கர் மஹால் சென்றோம் . அங்கு நாங்கள் கண்ட காட்சிகள்  முகம் சுளிக்க வைத்தன காரணம் ஜோடி ஜோடியாக காதலர்கள் 
முத்தமிட்டுகொண்டும் சில்மிஷம் செய்துகொண்டும் இருந்தனர் அவர்கள் யாரை பற்றியும் பொருட்டாக கருதவில்லை நீங்கள் கேட்கலாம் அவர்களை ஏன் நீங்கள் பார்க்கவேண்டும் என்று .. நியாயமான கேள்விதான் ஆனால் அவர்கள்  எந்த    மறைவிடத்திலும்   இந்த     செயலை   செய்யவில்லை .. 
எல்லோரும் பார்க்கும் இடத்தில்தான் இந்த செயல்கள் .. சரி என்று பூங்காவிற்கு சென்றோம் அங்கும் இதே காட்சிகள்தான் .

இங்கு நான் காதலர்களை குறை சொல்லவில்லை காரணம் அவர்களுக்கு சந்திக்கும் இடம் இல்லை ..

அப்போதுதான் எனக்கு ஒன்று தோன்றியது எல்லா ஊர்களிலும் காதலர் பூங்கா என்று ஒன்று அமைத்து கொடுத்துவிட்டால் அங்கு அவர்கள் மட்டும் சந்தித்து கொள்வார்கள்  காதலர்களை தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதி கொடுக்க கூடாது . ஏனெனில் மற்ற இடங்களுக்கு பொதுமக்கள் குடுமபத்துடன் குழந்தைகளை நிம் மதியாக கூட்டி சென்று வரலாம் இல்லையா ..

இது சரியா என்பதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .. நன்றி