நிறைய பேசுவோம்

Saturday, April 30, 2011

கவிதை : உங்கள் குடும்பம் உங்களை கொண்டாடும் - பிரபாஷ்கரன்


மே தினம் 
இது ..
தொழிலாளர் தினம்
தினம் ..
சிந்தும் 
வியர்வைகள் 
ஏராளம் 
உழைத்து 
கிடைக்கும் 
பணத்தை
சுரண்ட 
காத்திருக்கும் 
டாஸ்மாக் ..
குடும்பம் 
கண்ணீர் விடுவதே 
இந்த டாஸ்மாக் 
ஒன்றால்தானே 
உழைக்கும் ..
தொழிலாளர்களே 
இந்த ..
உழைப்பாளர் 
தினத்தில் 
குடியை 
விட்டு விடுவேன் 
என்று 
சபதம் 
எடுத்து கொள்ளுங்கள் 
இந்த நாள்தான் 
நமக்கு 
புத்தாண்டு 
பொங்கல் 
எல்லாம் 
சபதம் எடுங்கள் 
உங்கள் குடும்பம் 
உங்களை கொண்டாடும் 
வாழ்க்கை ..
உங்கள் கையில் 
எல்லோரும் 
வெற்றி பெற்றிட 
இன் நன்னாளில் 
வாழ்த்துவோம் 
உழைப்போம் உயர்வோம்  
Friday, April 29, 2011

ரஜினிகாந்த் ஆஸ்பத்ரியில் இருந்து நலமாக வீடு திரும்பினர்ரஜினிகாந்த் ஆஸ்பத்ரியில் இருந்து நலமாக வீடு திரும்பினர் என்ற செய்தி எல் லோருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும் .ரஜினி நலமாக உள்ளார் என்ற தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன . நாமும் பிரார்த்திப்போம் அவருக்காக 

நடிகர் ரஜினிகாந்த் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கபட்டுள்ளார்நடிகர் ரஜினி ஆஸ்பத்ரியில் அனுமதிக்கபட்டுள்ளார் . ஆனால் நலமாக இருப்  பதாகவும் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று அவர் மனைவி தெரிவித்துள்ளார் .உணவு ஒவ்வாமை காரணமாகத்தான் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது  இருந்த போதும் சூப்பர் ஸ்டார் குணமாக பிரார்த்திப்போம் .Thursday, April 28, 2011

கவிதை : காதல் விக்கெட் - பிரபாஷ்கரன்

அன்பே 
நீ 
வீசும் 
பார்வை 
பந்துகளுக்கு 
வீழ்ந்து 
கொண்டே யிருக்கின்றன 
இதய 
விக்கெட்டுகள் 
ஆனால் ..
நான் 
தொடந்து 
வீசி கொண்டே 
இருக்கிறேன் 
உன் 
இதய விக்கெட் 
என்னிடம் 
வீழ்ந்து 
விடும் என்ற 
நம்பிக்கையோடு Wednesday, April 27, 2011

கவிதை : காதல் கோபம் - பிரபாஷ்கரன்

நீ 
ரசித்தாய் 
உன்னை தொட்ட
காற்று 
என்னை ..
தொட்டது 
ஏன் .
முறைத்தாய் 
என்னை 
தொட்ட
காற்று 
இங்கு யாரை 
தொட்டது 


Tuesday, April 26, 2011

கவிதை : காதல் லட்சங்கள் - பிரபாஷ்கரன்நான் ..
காதலிக்கும்
போது ..
அவளின் 
லட்சணங்களை 
பார்த்தேன்
அவளோ ..
என்னிடம் 
லட்சங்களை
பார்க்கிறாள் 


Monday, April 25, 2011

பாபா வை நம்பியவர்கள் முட்டாளும் இல்லை ..நம்பாதவர்கள் புத்திசாலியும் இல்லை


பாபா இறந்தவுடன் பல்வேறு வகையான செய்திகள் வெளியிடபடுகின்றன . பாபா  வின் பக்தர்களை வேதனை அடைய செய்யும் அளவிற்கு அவர் கடவுளா என்று கேள்வி  வேறு கடவுளை யார் பார்த்திருக்கிறார்கள் யாரும் சொல்ல முடியுமா ஆனால் கடவுளை நம்புகிறோம் அல்லவா அது போல் பாபா வின் மீது அவர் பக்தர்களுக்கு நம்பிக்கை இதை ஏன் மற்றவர்கள் கிண்டல் செய்ய வேண்டும் தெரியவில்லை .

ஒன்று மட்டும் சொல்கிறேன் பாபா வை நம்பியவர்கள் முட்டாளும் இல்லை நம்பாதவர்கள் புத்திசாலியும் இல்லை அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு தயவு செய்து அடுத்தவர்கள் மனதை காயப்படுத்தாதிர்கள் என்பதே என் வேண்டு கோள் . நேற்று பாபா இறந்த அன்றே பலவித விமர்சனங்களை பார்த்தபோது எனக்கு இதை எழுத வேண்டும் என்று தோன்றியது . 
kadavul

Sunday, April 24, 2011

கவிதை :நீ முத்தமிட்ட.. போதும் நான் நானாக இல்லை - பிரபாஷ்கரன்

உன்னை ..
பார்த்த போது
நான் ..
நானாக இல்லை 

உன்னிடம் 
பேசிய போது            
நான் ..
நானாக இல்லை 

நீ 
வருவாய் 
என்று காத்திருந்த 
போது 
நான் 
நானாக இல்லை 

நீ ..
கை பிடித்து 
நடந்த போது 
நான் 
நானாக இல்லை 

நீ 
என்னை 
கட்டி அணைத்த 
போது 
நான் 
நானாக இல்லை 

நீ 
என்னை 
முத்தமிட்ட..
போதும் 
நான் 
நானாக இல்லை 

ஆனால்..
நீ ..
அந்த ஒற்றை 
வார்த்தை 
சொன்ன போதுதான் 

நாமாக இருந்த 
நான் 
நான் மட்டும் 
ஆகி போனேன்

பிரிந்து விடுவோம் 
என்றாயே
அந்த ஒரு 
கணத்தில்தான் 

.