நிறைய பேசுவோம்

Monday, April 25, 2011

பாபா வை நம்பியவர்கள் முட்டாளும் இல்லை ..நம்பாதவர்கள் புத்திசாலியும் இல்லை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பாபா இறந்தவுடன் பல்வேறு வகையான செய்திகள் வெளியிடபடுகின்றன . பாபா  வின் பக்தர்களை வேதனை அடைய செய்யும் அளவிற்கு அவர் கடவுளா என்று கேள்வி  வேறு கடவுளை யார் பார்த்திருக்கிறார்கள் யாரும் சொல்ல முடியுமா ஆனால் கடவுளை நம்புகிறோம் அல்லவா அது போல் பாபா வின் மீது அவர் பக்தர்களுக்கு நம்பிக்கை இதை ஏன் மற்றவர்கள் கிண்டல் செய்ய வேண்டும் தெரியவில்லை .

ஒன்று மட்டும் சொல்கிறேன் பாபா வை நம்பியவர்கள் முட்டாளும் இல்லை நம்பாதவர்கள் புத்திசாலியும் இல்லை அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு தயவு செய்து அடுத்தவர்கள் மனதை காயப்படுத்தாதிர்கள் என்பதே என் வேண்டு கோள் . நேற்று பாபா இறந்த அன்றே பலவித விமர்சனங்களை பார்த்தபோது எனக்கு இதை எழுத வேண்டும் என்று தோன்றியது . 
kadavul

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நம்பிக்கையில் தான் உள்ளது எல்லாம்...

பிரபாஷ்கரன் said...

/ # கவிதை வீதி # சௌந்தர் said...
நம்பிக்கையில் தான் உள்ளது எல்லாம்.../


கண்டிப்பாக நண்பரே

Unknown said...

நண்பரே பாபா செய்வது மோசடி, திட்டமிட்ட ஏமாற்று வித்தை. மனச்சுமையினால் அல்லலுறும் மக்களை அவர்களின் உளவியலினை அறிந்து மஜிக் செய்து திட்டமிட்டு ஏமாற்றுகிறார்.
புத்திசாலி , முட்டாள் என கூறுவது அபத்தமானது .

சுதர்ஷன் said...

//அடுத்தவர்கள் மனதை காயப்படுத்தாதிர்கள்//

அப்படியென்றால் இனி ஹிட்லரையும் திட்டாதீர்கள் ..ஜெர்மானியர்கள் மனது புண்படும் ..ஜெர்மானியர்களின் நம்பிக்கை ஹிட்லர் :-)

Ambika Krishnan said...

Manidhanai Manidhanaga parungal. Manidhanai kadavulaga vanaguvadhil enaku udanpaadu illai.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

கருத்துடன் உடன்படுகிறேன். அவரவர் கொள்கயும் நம்பிக்கையும் அவரவர்க்கு. ஆத்திகமும் நாத்திகமும் இணைந்தே வரும். இருப்பினும் ஒருவர் இறந்த பின - அவரைப் பற்றிய விமர்சனங்கள் - எதிர் மறைக் கருத்துகள் - இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகக் கூறப்படுவது நாகரீகமாகாது. அவர் யாராயினும் எப்படிப்பட்டவராயினும் அவரு உயிருடன் இருக்கும் போதோ - இறந்து சில காலம் கழித்தோ - விமர்சிக்கலாமே தவிர இறந்த உடனே - பல கோடி மக்களின் மனதினைப் புண் படுத்தும் வண்ணம் பேசுவது சரியல்ல - நாகரீகமல்ல - தேவை யற்ற ஒண்று. நட்புடன் சீனா