நிறைய பேசுவோம்

Saturday, July 23, 2011

செக்ஸில் ஈடுபடுத்தி சிறுவன் கொலை


இந்த செய்தி தினபூமி நாளிதழில் வெளி வந்தது முதலில் தினபூமிக்கு நன்றி .இந்த செய்தியை படித்தபோது மனது கொதித்தது . இந்த இளம் வயதில் இப்படி ஒரு காரியத்தை செய்தவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் . எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை படித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் 


திருமங்கலம், ஜூலை.22 - திருமங்கலம் அருகே ஓரினச்சேர்க்கையின் போது 8 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு பெட்டியில் வைத்து அடைக்கப்பட்ட சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து 4 மாணவர்கள் ஒரு வாலிபர் என 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமங்கலம் தாலுகா கிழவனேரியைச் சேர்ந்த பழனிச்சாமியின் இரண்டாவது மகன் ஜெயசூரியா(8). இவன் ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16ம் தேதி விளையாடச்சென்ற ஜெயசூரியா நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பழனிச்சாமி போலீதில் புகார் செய்தார். மறுநாள் 17ம் தேதி கிழவனேரி பள்ளியில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் பள்ளிக்குள் நுழைந்து சோதனையிட்ட போது அங்குள்ள பெட்டியில் ஜெயசூரியா பிணமாக கிடந்தான். பின்னர் அவனது உடலைக் கைப்பற்றிய போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனையின் போது சிறுவனின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்ததும், ஆசனவாய் ஓரினச்சேர்க்கையால் கிழிந்து இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. சந்தேக மரணம் என்றிருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய திருமங்கலம் தாலுகா போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திருமங்கலம் தனியார் பள்ளியில் பயிலும் கிழவனேரியைச் சேர்ந்த வடிவேல் கண்ணன்(17), சுந்தர்ராஜ பெருமாள்(எ) செல்லப்பாண்டி(16), அருள்முருகன்(17), அரவிந்த்(16) மற்றும் கூலிவேலை பார்க்கும் இதே ஊரைச் சேர்ந்த திருப்பதி(18) என்பவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
மேற்கண்ட 5 பேரும் சேர்ந்து சிறுவன் ஜெயசூரியாவை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகவும் அப்போது சிறுவன் திமிறிக் கதறியதால் அவனை கழுத்தை நெரித்து கொலை செய்து பள்ளியில் உள்ள மரப்பெட்டியில் அடைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து சிறுவன் ஜெயசூரியாவை கொன்றதாக வடிவேல் கண்ணன், அருள்முருகன், செல்லப்பாண்டி, திருப்பதி, அரவிந்த் ஆகிய 5 பேரையும் திருமங்கலம் தாலுகா போலீசார் 147, 120பி, 377, 302, 201 ஆகிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து திருமங்கலம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் கூறுகையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த 16ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஜெயசூரியாவை தின்பண்டம் கொடுத்து பள்ளிக்கு பின்புறம் உள்ள கழிவறையில் வைத்து கொடூரமான முறையில் ஒருவர் பின் ஒருவராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வழிகாரணமாக சிறுவன் அலறியபோது வடிவேல் கண்ணன் கழுத்தை நெறிக்க மற்றவர்கள் அவனுக்கு உதவியுள்ளனர். பின்னர் ஜெயசூரியா இறந்தவுடன் அங்கிருந்த பெட்டிக்குள் போட்டு பூட்டிவிட்டு ஒன்றும் அறியாதவர்கள் போல சென்றுவிட்டனர். இருப்பினும் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளம் கண்ட போலீசார் ஜெயசூரியாவுடன் விளையாடிய சிறுவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அரவிந்த் என்பவன் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்த நிகழ்வு வெளியாகவே மேற்கண்ட 5 பேர் உள்ளிட்ட சிலரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட புலன் விசாரணயில் சிறுவன் ஜெயசூரியாவை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி கொன்றதாக 5 பேரும் ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

மிகவும் சிக்கலான இந்த கொலைவழக்கை திறமையாக கையாண்டு குற்றவாளிகளை கைதுசெய்த திருமஙகலம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் நல்லு, எஸ்.ஐ. அழகர்சாமி மற்றும் தனிப்படை போலீசாருக்கு மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க் பாரட்டு தெரிவித்தார்.

Thursday, July 21, 2011

சிங்கம் எப்பவுமே சிங்கம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிங்கப்பூர் புகைப்படங்கள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

பிரபு தேவா நயன்தாரா திருமணத்திற்கு பின் தனி குடித்தனம் எங்கே ..?
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

பிரபு தேவா தன்னுடன் பதினைந்து வருடங்கள் வாழ்ந்த தன் காதல் மனைவியை பிரிந்து புதிய காதலி நயன் தாராவை திருமணம் செய்ய இருக்கிறார் .திருமணத்திற்கு பின் எங்கு வசிப்பது என்பதை இருவரும் திடமிட்டுளனர் சென்னையில் இருக்க நயன் விரும்பவில்லை மும்பை வேண்டாம் சிங்கப்பூர் என்று நயன் சொலி இருக்கிறார் .அங்கு நடன பள்ளி ஒன்று நிறுவவும் திட்டமாம் 
இம் நல்ல இருந்தா சரிதான் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Monday, July 18, 2011

ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் சேர்ந்து இருக்கும் அபூர்வ புகைப்படம்ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் சேர்ந்து இருக்கும் அபூர்வ புகைப்படம்