நிறைய பேசுவோம்

Saturday, November 19, 2011

பாவம் மிஸ்டர் பொது ஜனம் ....


பால் விலை உயர்ந்து விட்டது .பேருந்து கட்டணம் உயர்ந்து விட்டது. மின் கட்டணம் உயர போகிறது சரி எது இறங்க போகிறது .எதுவும் இல்லை .நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு அரசு போனஸ் கொடுக்கும் சம்பள உயர்வு கொடுக்கும் ஆனால் நஷ்டத்தை ஈடு கட்ட மிஸ்டர் பொது ஜனம் தலையில் கட்டும் .இது என்ன நியாயம் ஒரு காலத்தில் மின் வாரியம் தனியாரிடம் இருந்தது .நல்ல சேவையும் இருந்தது தொலை பேசி இன்று தனியார் வசம் இருப்பதால் எவ்வளவு நன்மைகள் போட்டி இருந்தாலே நல்ல தரம் கிடைக்கும் ஏன் அரசாங்கம் இவற்றையெல்லாம் தனியாரிடம் கொடுக்க வேண்டியதானே அப்பாவி பொது ஜனம் தலையில் கட்டினால் என்ன செய்ய முடியும் .தனிப்பட்ட மனிதனின் வருமானம் உயர்துள்ளதா ஆனால் செலவுகள் மட்டும் உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வான் அரசு ஊழியர்களுக்கும் ஐ .டி கமபனி யில் வேலை பார்பவர்களுக்கும் இந்த உயர்வுகள் பாதிக்க போவதில்லை ஆனால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் . மனிதனுக்கு வருமானம் பற்றாத போதுதான் தவறு செய்கிறான் . இதனால் ஊழலும் லஞ்சமும்தான் பெருகும் .தனி நபர் வருமானத்தை பெருக்க அரசாங்கங்கள் உதவி செய்ய வேண்டும் அதை விட்டு செலவை அதிகபடுத்தினால் என்ன செய்வான் .இபோதைக்கு தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளான் .இலவசமாக கிடைப்பது காற்று மட்டுமே. அதுவும் என்று காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வருமோ தெரியவில்லை . இலவச லேப்டாப்ல் பால் வாங்க முடியுமா அல்லது பயணம் செய்ய முடியுமா  .. வேண்டாம் இலவசம் எல்லோருக்கும் மீன் பிடிக்க கற்று கொடுங்கள் .தூண்டில் கொடுத்து பிரயோஜனமில்லை ...


Thursday, November 17, 2011

ஜெயிப்போமா தோற்போமா தெரியாது ..


நடக்குமா ..நடக்காதா
தெரியாது ..
பிடிக்குமா பிடிக்குமா
தெரியாது ..
ஜெயிப்போமா தோற்போமா
தெரியாது ..
யாருக்கு ..
எல்லாம் அவளுக்குதான்
இருந்தும் ..
நானும் ..
காதலிக்கிறேன்
அவளுக்கு
பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால்
என்ன ...
எல்லாம் காதலுக்கு
தெரியும் ..........