நிறைய பேசுவோம்

Saturday, June 18, 2011

சிங்கப்பூரில் இருந்து ரஜினி ரசிகர்களுக்கு எழுதிய கடிதம் இத்துடன் .

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
சிங்கப்பூரில் இருந்து ரஜினி ரசிகர்களுக்கு எழுதிய கடிதம் இத்துடன் .


நுழைவு தேர்வு எழுத வேண்டுமா .உன்னை நினைத்து 
தூங்கினேன் ..

கனவினில் 
நீ ..
ஏனோ 
தூங்கி தூங்கி 
எழுகிறேன் 
நீ .. 
கனவில் 
வருவதால்தானோ
உன்னை நினைத்தால் 
கவிதை வருகிறது 
பசியும் பறந்து 
போகிறது ..
காதல் பாடம் 
படிப்பதால் 
கல்லூரி பாடத்தில் 
அரியர்ஸ் ..
நானும் ..
உன்னையே ..
நினைக்கிறன் 
நீயும் ..
என்னை 
நினைத்து விட்டால் 
எல்லா பாடத்திலும் 
பாஸ் ..
செய்து விடுவேன் 
ஏன் ..
உன் இதயத்தில் 
இடம் கிடைக்க 
நான் என்ன 
நுழைவு தேர்வு 
எழுத வேண்டுமா .Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Friday, June 17, 2011

என்ன விதி என்ன வாழ்க்கை

இன்று ப்ளாக் எழுத நினைத்த போது சோக செய்திகள் இன்று கேட்கும்படி ஆனதால் என் மனம் மிகவும் சோர்வு அடைந்தது . வீட்டிற்கு அருகில் திருமணம் ஆகிய ஒன்றரை மாதத்தில் மாப்ளை பயன் மூளை காய்ச்சலால் சென்னையில் மரணம் அடைந்து மாலை கொண்டு வந்தனர் உயிரற்ற உடலை இன்ஜினியரிங் படித்து சென்னையில் வேலை பார்த்தவன் இப்படி திடீர் மரணம் இதை கேட்டபோது எனக்கு ஏனோ கடவுள் மேல் கோபம் வந்தது விதி படிதான் எல்லாம் நடக்கும் என்றால் ஏன் நாம் முயற்சி செய்யவேண்டும் எதற்கும் வாழ்கையில் என்ன நடந்தாலும் சரி என்று நாம் போகலாமே இதெல்லாம் என்ன கொடுமை சில விசயங்களை யோசிக்கும் போது விடை கிடைப்பதில்லை எதை நோக்கி போகிறோம் நமக்கு இந்த வாழ்கையில் என்ன கிடைக்கிறது ஒன்றும் புரியவில்லை .ஏதோ நான் உளறியது போல் கூட தோன்றலாம். ஆனால் திருமணம் ஆகி ஒன்றரை மாதத்தில் இறந்த அந்த பையனின் மரணம் என்னை பாதித்தது ஏதோ இங்கு அதை எழுதிய போது ஒரு சின்ன ரீலீப் கிடைத்ததாக உணர்கிறேன் 


Wednesday, June 15, 2011

காதல் கொலைகாரி -பிரபாஷ்கரன்


அன்று ..
என்ன விலை 
கொடுத்தாலும் 
நீ .. தான் 
என் மன்னவன் 
என்றாய் ..
பின் ..
யார் என்ன 
விலை கொடுத்தனர் 
நீ ..
என்னவன் இல்லை 
என்று சொல்ல ..
நான் உன்னவன் 
என்று சொல்வதற்கு ..
காதலை ..
விலை பேசிவிட்ட..
நீ காதலியா ..
இல்லை இல்லை 
காதலை கொன்ற 
நீ ..
காதல் கொலைகாரி 
அல்லவா ..
நீ கொன்றது 
காதலை அல்ல 
காதலனை 
ஆம் ..
காதல் என்றும் 
உன்னை .போன்ற 
கொலைகாரியிடம் 
சாவதில்லை ..
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Monday, June 13, 2011

நம்புவோர் நம்புங்கள்


நம்புவோர் நம்புங்கள் 


சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு எட்டு வயது பையன் இரண்டாவது மாடியில் அதாவது மொட்டை மாடியில் நாயுடன் விளையாடும் போது தவறி கீழே விழுந்துட்டான் ஒரு மரத்தின் மேல் மோதி விழுந்தான் அப்போது பவர் கட் போய் பார்த்த போது பேச்சு மூச்சில்லை அவசரமாக ஆஸ்பத்ரிக்கு கொண்டு சென்றுள்ளர்கள் என்ன ஆச்சரியம் பயத்தில்தான் அப்படி இருக்கிறான் .அவனுக்கு அடி ஒன்றும் படவில்லை என்றும் டாக்டர் சொல்லியுள்ளார். பெற்றோர் சொன்னது பாண்டி கோயிலுக்கு மொட்டை எடுக்க வேண்டி இருந்தோம் அந்த பாண்டி தான் என் பையனை காப்பற்றியது என்று . எனக்கும் இதை கேட்டபோது ஆச்சரியம் நேற்று அந்த வீட்டில் பந்தல் போட்டு காது குத்தும்  மொட்டை போடும் விழா வும் சிறப்பாக நடை பெற்றது .
எனக்கே ஆச்சர்யம் அத்துணை உயரத்தில் இருந்து விழுந்தும் அந்த பாண்டி தான் காப்பற்றிஇருக்கிகிறது போல் என்று நினைத்து கொண்டேன் . இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் சில விஷயங்கள் அப்படிதான் நடக்கும் போல் .

இந்த சம்பவம் நடந்த போது என் அப்பா இறந்தது தான் எனக்கு நினைவிற்கு வந்தது அவர் இறக்கும் நாள் அன்று என் வீட்டில் திடீர் என்று மின்சார மீட்டர் வெடித்தது .எனக்கு எதோ உளுணர்வு கூறியது ஏதோ நடக்க போகிறது என்று ஆனால் அது என் அப்பாவின் மரணம் என்று அப்போது தெரிய வில்லை அன்று கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்  வேளையில் என் அப்பாவின் பக்கத்துக்கு வீட்டுகாரர் என் தோளை தொட்டு என் அப்பாவின் மரண செய்தியை சொன்னார் . என் அப்பாவிற்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை இது திடீரென்று நிகழ்ந்த மாரடைப்பு . இதற்கு பிறகு நிகழ்ந்த சில விஷயங்கள் தான் ஆச்சர்யம் . அவர் ஒட்டிக்கொண்டு இருந்த மொபெட் யை நான் ஒட்டி செல்லும் போதெல்லாம் திடீரெண்டு நான் போகும் வழியில் உள்ள ஒரு புளிய மரத்தை சென்றடைந்தவுடன் வண்டி நின்று விடும் இறங்கி தள்ளி கொண்டு போய் மரத்தை தாண்டி ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகும் இது தொடர்கதை அப்புறம் அந்த ரூட்டை மாற்றி செல்ல ஆரம்பித்தேன் 

பலவருடங்கள் கழித்து நானும் எனது ஊரான திருச்சியை விட்டு மதுரை வந்து விட்டேன் ..

இந்த வருடம் என் அப்பாவின் திதிக்காக படையல் மற்றும் அய்யர் இக்கு கொடுக்க வேண்டிய சாமான்கள் வாங்கி கொண்டு பெரியார் பஸ் நிலையம் பாலம் ஏறினேன் என் மனைவியோடு வண்டியில் . வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை என் மனைவியிடம் திட்டு வண்டியை சரியான கண்டிஷன் இல் வைக்க விலையென்று. இப்போது நான் வைத்திருப்பது வேற வண்டி . சரி என்று உருட்டி கொண்டே வந்தேன் இடையில் பல இடங்களில் ஸ்டார்ட் செய்தும் ஸ்டார்ட் ஆக வில்லை வீட்டிற்கு அருகில் வந்து சும்மா பாப்போம் என்று ஸ்டார்ட் செய்தேன் வண்டி ஸ்டார்ட் சூப்பர்ஆக ஆனது . எனக்கு ஆச்சரியம் ..

அப்போது என் மனதிற்கு தோன்றியது என் அப்பா வந்திருக்கிறார் நாளை திதி அதை சிம்பாலிக்காக காட்டுகிறார் என்னுடன் இருப்பது போல் என்றே ஒரு பிரமை தோன்றியது .

இதை பலர் ஏற்று கொள்ளாமல் போகலாம் ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை அவர் ஏதோ கடவுள் போல் நம் பின்னால் இருக்கிறார் என்று .இதை நான் அதற்கு மேல் ஆராய்ச்சி செயவில்லை விட்டுட்டேன் . சில நேரங்களில் சில விஷயங்கள் அபூர்வமாக இருக்கலாம் என்பதே உண்மை 

நான் .. உன்னை கட்டி அணைத்த போது

உன்னையே ..
தேடியது அன்று 
என் கண்கள் ..
உன் மகிச்சியை 
உன் சந்தோசத்தை 
என் நெற்றியில் 
முத்தமிட்டு  
நீ ..
சொல்லிய
வேளையில் 
குத்தாட்டம் 
போட்டது 
என் மனது ..
நான் ..
உன்னை கட்டி 
அணைத்த போது 
நீ ..
என்னை இறுக்கி 
கட்டி கொள்வாயே ..
காற்று கூட ..
நம்மை .. விட்டு
தள்ளிதானே போகும் 
ஆனால் ..
இன்று ..உன்னை 
தழுவும் காற்றை 
கூட ..கட்டி 
அணைக்க  முடியவில்லை 
ஆம் ..
அந்த காற்று 
கூட சொல்லிவிட்டு 
சென்றது ..
என்னிடம் ..
நீ ..
எனக்கு சொந்தமில்லை 
என்று ..
நேற்றைய நிகழ்வுகள் 
இன்றைய நினைவுகள் 
எனக்கு ..
ஆனால் ..
உனக்கு அது 
இறந்த காலம்