நிறைய பேசுவோம்

Monday, May 2, 2011

கவிதை :என்னையும் காதலித்தாய் என்று தெரிந்து கொண்டேன் -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தோற்று போவது 
விளையாட்டல்ல
ஆனால்..
தோற்கடிப்பது 
உனக்கு ..
விளையாட்டு 
ஆம் ..
என்னை 
நேசித்தாய் 
என்று நினைத்தேன்
ஆனால் 
என்னையும் 
நேசித்தாய் என்று 
புரிந்து கொண்டேன்
என்னை 
காதலித்தாய் 
என்று நினைத்தேன்
என்னையும் 
காதலித்தாய் என்று 
தெரிந்து கொண்டேன் 
நீ ..
கொடுத்த பத்திரிக்கையில் 
முகவரியில் 
நான் முக வரிகளாய் 
இருந்த போது 

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

காதல் கவிதைகளாகவே வருகின்றனவே ! சற்றே களத்தினை மாற்றி - சமூகம் தொடர்பான கவிதைகளையும் எழுதலாமே நண்பா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பிரபாஷ்கரன் said...

/காதல் கவிதைகளாகவே வருகின்றனவே ! சற்றே களத்தினை மாற்றி - சமூகம் தொடர்பான கவிதைகளையும் எழுதலாமே நண்பா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

கண்டிப்பாக எழுதுகிறேன்