நிறைய பேசுவோம்

Friday, May 6, 2011

எல்லா படிப்புக்கும் மரியாதையும் மதிப்பு உண்டு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகிறதே இது என்ன சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் வியாபாரமா தெரியவில்லை படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுகிறதா .இல்லை அனைத்து கல் லூரிகளும் சிறப்பான கல்வியை தருகிறதா . எத்தனை கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர் முதலில் தகுதியான சம்பளம் கொடுத்தால்தானே ஆசிரியர்களை பற்றி பேச முடியும் . பொறியியல் படிப்பு மோகத்தில் உங்கள் பணத்தை கொட்டி கல்லூரியில் சேர்த்து பின் வருந்தாதீர்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் எல்லா படிப்புக்கும் மரியாதையும்   மதிப்பு உண்டு ஆனால் எப்படி நாம் படிக்கிறோம் என்பதை பொருத்து இருக்கிறது . இந்த அரசாங்கமும் தனியார் பொறியியல் கல்லூரி பள்ளிகளை பற்றி கண்டு கொள்வதேயில்லை எல்லா அம்சங்களும் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் முக்கியமான ஆசிரியர்களின் சம்பளம் பற்றி அவர்கள் கவலை படுவதே இல்லை அரசாங்கத்தில் தோட்ட வேலை பார்ப்பவர் கூட தனியார் கல்லூரி பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை விட கூட சம்பளம் வாங்குவார் இது என்ன நியாயமோ தெரியவில்லை இதற்கெலாம் எந்த கமிசனும் போடமாட்டார்களா .. இம் என்ன செய்வது எல்லாம் அவன் செயல் என்று போக வேண்டியதுதான் 

3 comments:

சாகம்பரி said...

பொறியியல் படிப்பில் கூட நல்ல பிரிவிற்காக டொனேஷன் கொடுப்பதும் சுமாரான கல்லூரியில் நல்ல பிரிவில் சேர்ப்பது பெற்றோர் செய்யும் தவறுகள். நல்ல கல்லூரியில் சுமாரான பிரிவில் படித்தாலும் வேலை வாய்ப்பு உறுதி. யார் கேட்கப்போகிறார்கள்.

பிரபாஷ்கரன் said...

/சாகம்பரி said...
பொறியியல் படிப்பில் கூட நல்ல பிரிவிற்காக டொனேஷன் கொடுப்பதும் சுமாரான கல்லூரியில் நல்ல பிரிவில் சேர்ப்பது பெற்றோர் செய்யும் தவறுகள். நல்ல கல்லூரியில் சுமாரான பிரிவில் படித்தாலும் வேலை வாய்ப்பு உறுதி. யார் கேட்கப்போகிறார்கள்./

உண்மை சொல்வதை நாம் சொல்வோம்

Ambika Krishnan said...

போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். கௌரவத்திற்காக தம் பிள்ளைகளை இஞ்சினியர் ஆக்கி பார்க்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறாது.