நிறைய பேசுவோம்

Saturday, June 11, 2011

Four இடியட்ஸ் கொளுத்தி போடு சர வெடிய

Four இடியட்ஸ் கொளுத்தி போடு சர வெடிய


திவ்யா,ரம்யா ,ரஞ்சனி ,பிரியா நால்வரும் மரத்தடியில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் .
அப்போது ரம்யா கேட்டாள்
"என்னடி சுகாசினி மேடம் ஓவரா ப்ளாக் எழுதுறவங்களை திட்டு திட்டுன்னு திட்றாங்கலாமில்ல  " என்றாள்

"அடிபோடி அவங்க ஏதோ உயிர் சங்கீதா நடிச்ச மாதிரி ஏதோ தெலுங்கு படத்தில் நடிக்கிற மாதிரி நியூஸ் போற்றுபாங்க போல யாரோ ப்ளாக் இல் உடனே திட்ட ஆரம்பிச்சுட்டாங்க " என்றாள் பிரியா 

" விடுடி  இவங்க டிவி இல எல்லார் படத்தையும் திட்டலாம் ப்ளாக் எழுதுறவங்க எதுவும் எழுத கூடாதா " என்றாள் ரஞ்சனி 

"ஆமாம்டி ப்ளாக்ல தான் நாம் இஷ்டத்துக்கு நாம மனசில் பட்டதை எழுதலாம் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு நம்ம காலேஜ் பசங்க பொண்ணுங்க கிசு கிசு எல்லாம் எழுத போறேன் என்றாள் " திவ்யா 

"இம் இம் கொளுத்தி போடு சர வெடிய" மற்ற மூவரும் சேர்ந்து கத்தினர் .

"இம் என்னடி மதியம் கிளாஸ் "என்றாள் ரம்யா .

"இம் நம் மூட்டை பூச்சி c ++ எடுக்க போகுது" என்றாள் மேடத்தின் பட்ட பெயரை சொல்லி .

"ஏண்டி காலேஜ் இல் சமசீர் கல்வி கிடையாதா பாரேன் கோர்ட் தீர்ப்பால் ஸ்கூல் திறக்க இன்னும் நாளாகுமாம் வாண்டூஸ் எல்லாம் ஜாலியா இருக்குங்க . பக்கத்து வீட்டு குட்டி பொண்ணு என்னக்கா காலேஜ்ஆ போங்க போங்க படிங்கன்னு சொல்லுது என்று வருத்தபட்டா." பிரியா 

"ஆமாம் முதல்வர் சுப்ரீம் கோர்ட் போவாங்க போலிருக்கு எப்படியோ ஒரு முடிவு தெரிஞ்சா சரி" எனும் வேளையில் மதிய வகுப்பு முதல் மணி அடித்தது ..

"டேய் வாங்கடி போவோம் அப்புறம் மூட்டை பூச்சி கடி தாங்காது நாளை நிறைய பேசலாம்" என்று திவ்யா சொல்ல அனைவரும் கிளம்பினர் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

டாஸ்மாக் இல் சரக்கு வாங்க நிற்கும் பெண்கள்


இது தினமலரில் வந்த செய்தியும் படமும் .முதலில் தினமலருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

இந்த படத்தை பார்த்து விட்டு நான் உங்கள் முன் வைக்கும் சில கேள்விகள் 

குடிபழக்கம் தவறு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குடும்பமே குடித்தால் என்னாவது .ஏன் இதை சொல்கிறேன் என்றால் முன்பொரு பதிவில் பெண் பீர் பாட்டில் உடன் இருக்கும் படத்தை போட்டதற்கு உனக்கு என்ன வந்தது என்று மிக சிலர் கேட்டனர் . ஒரு வேளை அவர்கள் குடும்பத்தில் பெண்கள் குடித்தால் கவலை படமாட்டார்கள் போல் என்று நினைத்து கொண்டேன் 

இந்த படத்தை பார்த்தல் அன்றாடம் பிழைப்பு நடத்துவார்கள் போல் தெரிகிறது இவர்கள் இப்படி குடிக்க ஆரபித்தால் அவர்களின் எதிர்கால சந்ததியின் நிலை மோசமாகிவிடும் அல்லவா..

ஏன் இந்த பாழாய் போன டாஸ்மாக் யை மூட அரசாங்கம் முன் வர கூடாது .உடனே மூடினால் கள்ள சாராயம் பெருகிவிடும் என்று சொல்வார்கள் .ஏன் அதையும் கட்டுபடுத்தலாமே .சம்பாதிக்கும் பணத்தை இப்படி குடித்து அழிக்கும் மக்களை காப்பாற்ற இந்த அரசாங்கம் எதுவும் செய்யுமா . 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Friday, June 10, 2011

இணையத்தளம் அதில் பணம் சம்பாதிக்க முடியுமா


நாம் இணையத்தளம் பயன் படுத்துகிறோம் அதில் பல விசயங்களை பார்த்தாலும் அதில் பணம் சம்பாதிக்க முடியுமா என்று நமக்கும் ஆசை இருக்கும் அதற்கான ஒரு லிங்க் தான் இது இதில் உங்களை பற்றி பதிவு செய்து கொண்டு தினசரி அவர்கள் அனுப்பும் ஈ மெயில் பார்த்தோமானால் நம்முடைய அக்கௌன்ட் இல் பணம் சேரும் மொத்தமாக 500 ரூபாய் வந்தவுடன் நாம் பணம் பெற்று கொள்ளலாம் . இது மட்டும் இல்லாமல் இன்னும் சில லிங்க் இங்கு தருகிறேன் சென்று பாருங்கள் 
      
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது சென்னை உயர் நீதிமன்றம்


சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி இதில் அரசின் நிலை என்ன பள்ளி கூடம் எப்போது திறக்கும் மாணவர்களின் இந்த கேள்விகளுக்கும் உடனடி பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் .


Thursday, June 9, 2011

சமச்சீர் கல்வி இருக்கா இல்லையா

சமச்சீர் கல்வி 
இருக்கா இல்லையா 
என்பது ..அல்ல
எங்கள் பிரச்சினை 
ஸ்கூல் ..
இந்த மாதமா 
அடுத்த  மாதமா 
சொல்லுங்கள் ..
நாங்களும் 
எத்தனை .
சேனலில் 
நியூஸ் பார்ப்பது 
விளையாடுவதற்கு 
எங்களுக்கு  நேரம் 
போதலை
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

நடிகை பாவனாவிற்கு கல்யாணம் ...?

நடிகை பாவனா இன்னும் இரண்டு வருடங்களுக்கு தன் திருமணத்தை பற்றி சிந்திக்க போவதில்லையாம் நடிப்பில் தான் தன் முழு கவனத்தையும் செலுத்த போகிறாராம் .


ஹா என்ன நியூஸ் ஜோரா எல்லோரும் கைதட்டுங்கப்பா அவங்களுக்கு அப்படியே படம் குவியுதாம் பாருங்க அதான் ... போலிருக்கு என்னடா  பெரிய நியூஸ் போடுறேன்னு நீங்க கேட்பிங்கனு தெரியும் கவிதை கதை மட்டுமே எழுதினா எல்லாரும் பார்க்க மாட்டிங்க போலிருக்கு அதனால் அப்பப்ப இப்படியும் நியூஸ் போடலாம்னுதான் எப்படியோ பாவனா ரசிகர்கள் எல்லாம் சந்தோஷ படுவாங்கதானே . ஆமாம் பாவனா ரசிகர்கள் எல்லாம் மறக்காம ஒட்டு  போட்டு உங்க ரசிகர் பட்டாளத்தை காட்டுங்க பாப்போம் . ஓகே 
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

விஜய் பிறந்த நாளை மிக ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்


இளைய தளபதி விஜயின் பிறந்த நாள் வரும் ஜூன் 22  கொண்டாட படவுள்ளது  ஆனால் விஜய் இந்த பிறந்த நாளை மிக ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுள்ளார் .மேலும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள செய்தும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கியும் தன் பிறந்த நாளை கொண்டாடும்படி ரசிகர்களை கேட்டுள்ளார் விஜய்

Wednesday, June 8, 2011

காதல் ஆக்சிஜென் - பிரபாஷ்கரன்


அன்பே ..
உன் ..
விழிகள் பேசும் 
மொழிகளிலும் 
பார்வை வீசும் 
தென்றலிலும் 
பாதம் .
இசைக்கும் 
சங்கீதத்திலும் 
நீ பேசும் 
காதல் 
ஆக்சிஜெனிலும் தான் 
நான் ..
உயிர் வாழ்கிறேன் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Tuesday, June 7, 2011

ரஜினி சிங்கப்பூர் ஆஸ்பத்திரி வீடியோ காட்சிகள்

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
ரஜினி சிங்கப்பூர் ஆஸ்பத்திரி வீடியோ sinagpore  ஆசியா சேனலில் ஒளி பரப்பபட்டது 
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

கவிதை : விடியும் இரவு எனக்கு பிடிக்கவில்லை -பிரபாஷ்கரன்


வானத்தில் வண்ணங்கள் 
மின்னும் வேளையில்
என் மனதில் ..
ஆயிரம் எண்ணங்கள் 

காதல் கனவுகள் 
துளிர் விட்ட
போதும் ..
என் குடும்ப 
கெளரவம் 
வெட்டுவதற்கு 
கோடாரியோடு ..

இரவு விடிந்து 
விடும் ..
ஆனால்..
விடியும் இரவு 
எனக்கு பிடிக்கவில்லை 
ஆம் ..
கனவு கலைந்து
போகிறதே ..

அலைகள் கரை 
ஒதுங்கலாம் 
அது இயற்கை 
என் ..
மன கவலைகள் 
கரை ஒதுங்க 
எந்த மன்னவன் 
கரையாய் 
வரபோகிறான் ..


Monday, June 6, 2011

ரஜினியின் ராணா பட ஷூட்டிங் மீண்டும் ஆகஸ்ட் இல் துவங்க உள்ளது


ரஜினியின் ராணா பட ஷூட்டிங் மீண்டும் ஆகஸ்ட் இல் துவங்க உள்ளது .சிங்கபூரிலில் இருந்து சிகிச்சை முடிந்து வந்தவுடன் ஆகஸ்ட் இல் துவங்க உள்ளது .ரக்மான் இசை அமைக்கும் பணியில் பிஸியாக உள்ளார் .ஏற்கனவே சில பாடல்களுக்கு இசை அமைத்து விட்டார் .ரஜினி படத்தில் அறிமுகமாகும் பாடலை spb பாடியுள்ளார் . படம் வெற்றி அடைய நாமும் வாழ்த்துவோம்       

கவிதை : உன் கைகள் என்னை .. தீண்டும் போது - பிரபாஷ்கரன்

உன் ..
முகம் பார்க்க
தவமிருந்தேன்

நீ. 
என் விரல் 
பற்றிய போது 
முகம் சிவந்தது 

உன் கைகள் 
என்னை ..
தீண்டிய  போது
வயிற்றில் ..
ஜில்லென்ற 
ஐஸ் கட்டி 
பரவியது

நீ ..
முத்தமிட 
வந்த போது 
என் ..
இமைகளும் 
வெட்கத்தில்  
மூடி கொண்டது 

உன் தோளில் 
முகம் ..
சாய்க்கும் 
வேளையில் 
பறந்தது  பட்டம் பூச்சிகள்
என் உடலெங்கும் 

என்ன விலை 
தந்தும் 
பெற ஏங்குகிறேன் 
உன் காதலை ..

கனவில் மட்டும் 
வரும் ..
என் காதலனே 
நினைவில் ..
என்று ..
நீ வரப் போகிறாய்


Sunday, June 5, 2011

ஹீரோ ஆகப்போகும் ஜூனியர் கேப்டன் விஜயகாந்த்


கேப்டன் விஜயகாந்த் இன் இளைய மகன் ஷண்முக பாண்டியன் சினிமா வில் ஹீரோ ஆகப்போகிறாராம் +2 முடித்த அவர் இதற்காக நடனம் போன்ற பயிற்சிகள் எடுக்க ஆரபித்து விட்டார் .மனைவி பிரேமலதா தன் மகன் நடிபதற்கு நல்ல கதை தேடி வருகிறார் .இம் ஜூனியர் கேப்டன் யை வாழ்த்து வோம் 

இததான் கலைஞர் கூடா நட்பு என்று சொன்னாரோ
இந்த படத்தை பார்த்தா மன்மோகன் என்ன சொல்ல வருகிறார்னு புரியலை . ஒருவேளை அவரும் இரட்டை இலை சின்னத்தை காண்பிகிறாரோ . இததான் கலைஞர் கூடா நட்பு என்று சொன்னாரோ .தெரியலை அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா