நிறைய பேசுவோம்

Saturday, June 11, 2011

டாஸ்மாக் இல் சரக்கு வாங்க நிற்கும் பெண்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





இது தினமலரில் வந்த செய்தியும் படமும் .முதலில் தினமலருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

இந்த படத்தை பார்த்து விட்டு நான் உங்கள் முன் வைக்கும் சில கேள்விகள் 

குடிபழக்கம் தவறு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குடும்பமே குடித்தால் என்னாவது .ஏன் இதை சொல்கிறேன் என்றால் முன்பொரு பதிவில் பெண் பீர் பாட்டில் உடன் இருக்கும் படத்தை போட்டதற்கு உனக்கு என்ன வந்தது என்று மிக சிலர் கேட்டனர் . ஒரு வேளை அவர்கள் குடும்பத்தில் பெண்கள் குடித்தால் கவலை படமாட்டார்கள் போல் என்று நினைத்து கொண்டேன் 

இந்த படத்தை பார்த்தல் அன்றாடம் பிழைப்பு நடத்துவார்கள் போல் தெரிகிறது இவர்கள் இப்படி குடிக்க ஆரபித்தால் அவர்களின் எதிர்கால சந்ததியின் நிலை மோசமாகிவிடும் அல்லவா..

ஏன் இந்த பாழாய் போன டாஸ்மாக் யை மூட அரசாங்கம் முன் வர கூடாது .உடனே மூடினால் கள்ள சாராயம் பெருகிவிடும் என்று சொல்வார்கள் .ஏன் அதையும் கட்டுபடுத்தலாமே .சம்பாதிக்கும் பணத்தை இப்படி குடித்து அழிக்கும் மக்களை காப்பாற்ற இந்த அரசாங்கம் எதுவும் செய்யுமா . 





Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

2 comments:

நிரூபன் said...

பாஸ், தினமலரின் படத்தோடு நீங்கள் பகிர்ந்திருக்கும் உங்களின் கேள்வியும் நியாயமானது,
ஆனால் பெண்கள் குடிப்பது தவறென்று பார்ப்பது எனக்கு சரியாகப் படவில்லை.
அதிகமாக குடிப்பதை விட, வேலை செய்த களைப்பு தீர, உடல் அலுப்பு நீங்க
இந்த அன்றாடம் காய்ச்சிகள் அளவோடு குடித்தால் அது தவறல்ல.
ஆனால் துஷ் பிரயோக நோக்கில் அதிகமாக குடித்தால் அது தவறே!

பிரபாஷ்கரன் said...

குடிப்பவர்கள் எங்கு அளவோடு குடிக்கிறார்கள் ஆண்கள் குடித்தாலே குடும்பம் உருப்படுவதில்லை இதில் பெண்களும் சேர்ந்து குடித்தால்