நிறைய பேசுவோம்

Friday, February 14, 2014

காதலர் தின கவிதை. - 14

காதலர் தின கவிதை. - 14
-------------------------
காதலும் ...
போர்க்களம்தான்
போர்புரிய தெரிந்தவர்கள்
கலந்து கொள்ளுங்கள் ..
புறமுதுகிட்டு
ஒடுபவர்கள்..
விலகி செல்லுங்கள் ...

காதலர் தின கவிதை - 13

காதலர் தின கவிதை - 13
------------------------
அன்று ..
உன் கண்களில்
தெரிந்த..
காதல்..
விரல் பிடித்து
நடந்த போது
இருந்த ..
இறுக்கம்
எல்லாமும்
காதலை சொல்லியது
இன்றும்..
அதே இறுக்கம்
காதலை..
சொல்லி கொண்டேதான்
இருக்கின்றனர் ..்

காதலர் தின கவிதை. - 12

காதலர் தின கவிதை. - 12
--------------------------
அன்று ...
என் தோள்..
மீது நீ
சாய்ந்த நேரம்
ஊஞ்சலாட்டம்..
இன்றும்..
உனக்காக
காத்திருக்கும்
ஊஞ்சல் ...

Tuesday, February 11, 2014

காதலர் தின கவிதை - 11

காதலர் தின கவிதை - 11
--------------------------
அன்று . .
உன் மடியினில்
என்..
தலை சாய்த்து
நெற்றி யில் முத்தமிட்டுு..
என்..
தாயாகினாய்..
தாலாட்டு
இல்லாமல்
தூங்கிய நான்
இன்று ..
கனவிலும்
தூக்கமில்லாமல்
உன்..
மடிசாய.
தவமாய் தவமிருந்து ..

Monday, February 10, 2014

காதலர் தின கவிதை. - 10

காதலர் தின கவிதை. - 10
---------------------------
நானும் .
நிறைய
சேமிக்கிறேன்
ஆம்..
உன் நினைவுகளை
என்..
இதய வங்கியில்..

Sunday, February 9, 2014

தின கவிதை. - 9


காதலர்
தின கவிதை. - 9
--------------------------
அன்று ...
உன் கைகளை
பிடித்து இழுத்து
கட்டி ..
அணைத்து போது..
சிவந்த உன்
கன்னத்தை விட
உடைந்த வளையல்களுக்குதான்
தெரியும்..
நம் காதல்..்