நிறைய பேசுவோம்

Thursday, October 27, 2011

அன்பே .. நீதான் எனக்கு அதிசயம்


உலக அதிசயம் 
எத்தனை ..
தெரியவில்லை 
ஆனால்..
அன்பே ..
நீதான் 
எனக்கு அதிசயம் 
பரிட்சையில் 
ஜெயித்து விடுவேன் 
விளையாட்டில் 
ஜெயித்து விடுவேன் 
காதலில்  ..
உன் மனதை 
ஜெயிப்பேனா 
தெரியாது ..
அதிசயங்கள் 
எல்லாமே ..
புரியாத புதிர் 
புரியும் வரை 
நீயும் .. எனக்கு 
அதிசயம்தான் 

Tuesday, October 25, 2011

தீபாவளி .. இது குழந்தைகளுக்கு மந்திர சொல் ..


தீபாவளி ..
இது குழந்தைகளுக்கு 
மந்திர சொல் ..
மத்தாப்பும் பலகாரமும் 
பட்டாசும் புத்தாடையும் 
அவர்கள் கனவு ..
தீபாவளி வரும் 
இரண்டு மாதங்கள் 
முன்பே ..
பெண்களுக்கு 
மகிழ்ச்சி ..
பலகாரம் 
செய்வதிலிருந்து 
புத்தாடை அணிவது 
வரை ..
குடும்ப தலைவனுக்கு 
பட்ஜெட் போட்டு 
செலவு செய்து 
குடும்பத்தார் ..
முகத்தில் தெரியும் 
மகிழ்ச்சியே 
அவனுக்கு தீபாவளி 
தலை தீபாவளி 
கொண்டாடும் 
இருவரும் 
பெரும் மகிழ்ச்சியை 
காதலர்கள் ..
நாளை சேர்ந்து 
 கொண்டாட ..
வாழ்த்துவோம் 
மொத்தத்தில் 
செலவுகள் 
எகிறினாலும் 
அனைவர் முகத்தில் 
ஏறும் .. மகிழ்ச்சியே
தீபாவளி ..
கொண்டாடுவோம் 
சிறப்புடன் 

Sunday, October 23, 2011

காதல் தீபாவளி


எல்லோரும் ..
தீபாவளிக்கு 
பாட்டாசும் 
இனிப்பும் ..
புத்தாடையுமாக 
கொண்டாடுகிறார்கள் 
ஆனால் ..
நான் ..
தினம் தினம் 
தீபாவளி 
கொண்டாடுகிறேன் 
அவளின் 
மத்தாப்பு சிரிப்பிலும் 
அவள் தரும் 
இனிப்பு முத்தத்திலும் 
அவளே புத்தாடைதான் 
................