நிறைய பேசுவோம்

Saturday, April 2, 2011

இவன் ராசிகார பையன் - ஸ்ரீசாநத் -உலக கோப்பையும் கிடைத்தது


இன்றைய ஆட்டத்தில் ஸ்ரீசாந்தை சேர்த்தது சரியா என்று இலங்கை பேட் செய் யும்போது பலருக்கும் சந்தேகம் . ஆனால் விஷயம்  என்னவென்றால் ஸ்ரீசாநத் ராசிதான் காரணம் 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்ரீசாநத் விளையாடினார் இன்னும் சில இறுதி போட்டிகளிலும் விளையாடியுள்ளார் அதில் நாம் அனைத்திலும் வெற்றி பெற்றுளோம் . அது போல் இப்போதும் வெற்றி பெற்றுள்ளோம் . அப்ப ராசிக்கார பையனை சேர்க்காமல் எப்படி அதனால்தான் தோனி சேர்த்துள்ளார் அந்த ராசியும் இப்போது நடந்து விட்டது .சரி ராசி நல்லபடியா வொர்க் அவுட் ஆச்சுனா நல்லதுதானே 

ஆனந்த கண்ணீர் விட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்


இந்தியா  உலக கோப்பையை 28 ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது . நம்முடைய வீரர்கள் ஜெயித்தவுடன் ஆனந்த கண்ணீர் விட்ட போதுதான் தெரிந்தது . அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு  .பலரும் காசுக்காக கிரிக்கெட் விளையாடுகின்றனர் என்று கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை பார்த்து வயிறு எரிவது உண்டு இனியாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும். கிரிக்கெட்டில் ஜெயிப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல மேலும் பெரும் புகழும் அவ்வளவு  எளிதாக கிடைக்காது என்பதை. வாழ்த்துவோம் நம் இந்திய கிரிக்கெட் வீரர்களை .

கவிதை : நிலாக்கள் - பிரபாஷ்கரன்


ஜன்னல் ..
தோறும் 
நிலாக்கள் 
ஒ !
அது 
லேடீஸ் பஸ் 

 

Friday, April 1, 2011

கவிதை எலெக்ட்ரிக் ஷாக் பிரபாஷ்கரன்


அன்பே
எனக்கு..
மட்டும்
எப்படி ஏற்பட்டது
எலெக்ட்ரிக் ஷாக்
ஒ..
உன்
பார்வை
பட்டுதானா


Wednesday, March 30, 2011

இந்திய .. கிரிக்கெட் அணி வெற்றி தோனியை .. பாரட்டும் வேளையில் அப்ரிடியையும் பாராட்டுவோம்


வெற்றி என்றும்
எங்கள் வசம் 
தேசம் இன்று 
கொண்டாடியது 
இந்திய ..
கிரிக்கெட் அணியின் 
 வெற்றியை 
தோனியை ..
பாரட்டும் வேளையில் 
அப்ரிடியையும் 
பாராட்டுவோம் ..
தோற்றாலும் ..
தன் பேச்சால் 
ஜெயித்துவிட்டார் 
நம் மனங்களை ...

மன்மோகனும் ..
கிலானியும் 
ஒரே மேடையில்
ரசித்த கிரிக்கெட்தானே 
உண்மையான வெற்றி 
அதையும் ..
கொண்டாடுவோம் ..

 

கவிதை : தூக்கம் வரவில்லை ..பிரபாஷ்கரன்


மழை வந்த ..
நேரம் ..
கொசுக்களின் தொல்லை 
ஆனால்..
எனக்கோ ..
தூக்கம் வரவில்லை ..
காரணம் ..
அவளை ..
பற்றிய ..
நினைவு கொசு(றுகள் )


Tuesday, March 29, 2011

கவிதை: சூரியனாய் சுட்டது அவள் ..? பிரபாஷ்கரன்


அவள் ...
முகம் மட்டும்
நிலவாய்
பிரகாசிக்கையில் .
இதயம் ..
மட்டும்
ஏன் ?
சூரியனாய்
சுட்டதுMonday, March 28, 2011

கவிதை வாசலில் என்னவள் .. - பிரபாஷ்கரன்


வீதியெங்கும் ..
பவர் கட் ..
ஆனால்..
எதிர் வீட்டில் ..
மட்டும் 
ஒளி வெள்ளம் 
காரணம் 
வாசலில் 
என்னவள்  Sunday, March 27, 2011

கிரிக்கெட் பாடாய் படுத்தி கொண்டு இருக்கிறது மாணவர்களை ..


இன்றைய செய்திதாளில் வந்த செய்தி சேலத்தில் மாணவர்களிடையே சீட்டு கட்டு அமோகமாக விற்பனை ஆகிறதாம் . காரணம் சீட்டுக்கட்டில் கிரிக்கெட் வீரர்களின் படம் பிரிண்ட் செய்திருப்பதால் ரூபாய்  30 வரை விற்க  படுகிறதாம் .இது மாணவர்கள் தவறான பாதைக்கு செல்ல வழி வகுக்கும் இல்லையா ஏற்கனவே கிரிக்கெட் மட்டும் தேர்வு நேரத்தில் மாணவர்களை படிக்க விடாமல் பாடாய் படுத்தி கொண்டு இருக்கிறது . அடுத்து IPL கிரிக்கெட் வேறு . இதில் கிரிக்கெட் வீரர்கள் மேல் உள்ள மோகத்தில் இந்த சீட்டு கட்டுகளை வைத்து மாணவர்கள் சூதாட்டம் போன்ற வழிகளில் செல்லாமல் இருந்தாலே மகிழ்ச்சி . பெற்றோர்களே கவனமாக இருங்கள் உங்கள் குழந்தைகளை அழிக்க இது போன்ற விசயங்களை அனுமதிக்காதிர்கள் . சிலர் இதெலாம் காலத்தின் வளர்ச்சி ஒன்றும் செய்ய முடியாது என்றும் வாதிடலாம் . இது சிறிய விஷயம் போல் தோன்றலாம் . ஆனால் இல்லை இதை வளர விடாமல் தடுக்க வேண்டும் .