நிறைய பேசுவோம்

Sunday, March 27, 2011

கிரிக்கெட் பாடாய் படுத்தி கொண்டு இருக்கிறது மாணவர்களை ..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இன்றைய செய்திதாளில் வந்த செய்தி சேலத்தில் மாணவர்களிடையே சீட்டு கட்டு அமோகமாக விற்பனை ஆகிறதாம் . காரணம் சீட்டுக்கட்டில் கிரிக்கெட் வீரர்களின் படம் பிரிண்ட் செய்திருப்பதால் ரூபாய்  30 வரை விற்க  படுகிறதாம் .இது மாணவர்கள் தவறான பாதைக்கு செல்ல வழி வகுக்கும் இல்லையா ஏற்கனவே கிரிக்கெட் மட்டும் தேர்வு நேரத்தில் மாணவர்களை படிக்க விடாமல் பாடாய் படுத்தி கொண்டு இருக்கிறது . அடுத்து IPL கிரிக்கெட் வேறு . இதில் கிரிக்கெட் வீரர்கள் மேல் உள்ள மோகத்தில் இந்த சீட்டு கட்டுகளை வைத்து மாணவர்கள் சூதாட்டம் போன்ற வழிகளில் செல்லாமல் இருந்தாலே மகிழ்ச்சி . பெற்றோர்களே கவனமாக இருங்கள் உங்கள் குழந்தைகளை அழிக்க இது போன்ற விசயங்களை அனுமதிக்காதிர்கள் . சிலர் இதெலாம் காலத்தின் வளர்ச்சி ஒன்றும் செய்ய முடியாது என்றும் வாதிடலாம் . இது சிறிய விஷயம் போல் தோன்றலாம் . ஆனால் இல்லை இதை வளர விடாமல் தடுக்க வேண்டும் .

2 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

உண்மை தான் நண்பரே... பிஞ்சிலேயே நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தால் தான் பிள்ளைகளிடம் ஒழுக்கம் இருக்கும்.

முனைவர் இரா.குணசீலன் said...

நண்பா...

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா என்ற இந்த தொடர்புடைய இடுகையைப் பார்த்தீர்களா..?

http://gunathamizh.blogspot.com/2010/11/blog-post.html