நிறைய பேசுவோம்

Friday, August 17, 2012

மின்னி மறையும்


மின்னி மறையும் 
மின்னல்களாய் 
அவள் ..
பார்வை ..
என்று ..
இதயம் 
வெடிக்க போகிறதோ ..
இடியாய் ..

Tuesday, August 14, 2012

சுதந்திர தினத்தன்று

இது நான் கல்லூரியில் படிக்கும் போது எழுதி பத்திரிகையில் வெளிவந்தது 

'எல்லோருக்கும் 
விடுதலை 
கூறியவர் 
பறக்க விட்டார்
புறாக்களை 
கிடைத்தது 
விடுதலை 
கூண்டிலிருந்து 
புறாக்களுக்கு ..'
----------

'கம்பி கூண்டிற்குள் 
சின்ன புறாக்கள் 
சுதந்திர தினத்தன்று 
பறக்க விடுவதற்கு ..'

உன் .. இடை வெளியில் நான் .. முகம் பார்க்கலாமா ..


உன் விழிகளில் 
உறங்க ..
இடம் தாயேன் 
என்..
உயிரையும் தருகிறேன் 
விலையாக..
உன் ..
இடை வெளியில் 
நான் ..
முகம் பார்க்கலாமா ..
முகம் பார்த்து
தலை ..
வாரி கொள்கிறேன் ..
தலை வாரிக்கொள்ள
உன் ..
விரல்களை
தாயேன் ..
கலைந்த ..
தலை முடியை
சீவி விட..
முத்தங்கள்
தந்து .விடாதே ..
சத்தமில்லாமல்
கடித்து ..
விட்டு போகின்றன
என் கன்னத்தை
எறும்புகள்