நிறைய பேசுவோம்

Friday, August 29, 2014

அதிகம் ஆசைபடுபவர்கள் தான் அதிக நஷ்டம் அடைவர்



 பங்கு சந்தையில்அதிகம் ஆசைபடுபவர்கள் தான் அதிக நஷ்டம் அடைவர் .பொதுவாக பங்கை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் கோடிகள் கிடைக்கும் லட்சம் கிடைக்கும் என்று சொன்னால் நம்பாதிர்கள். அப்படி கிடைத்தால் எல்லோரும் லாப்டாப் கையுமாக சேர் மார்க்கெட்டில் தான் இருப்பர் எதற்கு வேலைக்கு போக வேண்டும் . இன்ட்ரா டே டிரேடிங்கில் லாபம் அடைந்தவர்கள் குறைவே ..
நீங்களே பங்கை தேர்ந்து எடுங்கள் .காத்திருங்கள் உதாரணமாக காலை எழுந்தவுடன் பல் துலக்குவிர்கள் என்ன பேஸ்ட உபயோகிபிர்கள் கோல்கேட் என்று வைத்து கொள்ளுங்கள் அதிகம் அது மார்க்கெட்டில் விற்கிறதா பாருங்கள் அந்த பங்கை கவனியுங்கள் .நன்கு லாபம் உள்ளது என்றால் வாங்கி விடுங்கள்.
அடுத்து டி அல்லது காபி குடிப்பிர்களா டாடா காபி பாருங்கள் இது உதாரணம்தான் நன்கு விற்கிறது என்றால் அதை வாங்குங்கள் அடுத்து .. என்ன ட்ரஸ் ஜான் ப்ளேயர் என்றால் ITC ஷேர் பாருங்கள் .
அடுத்து பைக் பாருங்கள் hero Honda அல்லது TVS பாருங்கள் அந்த பங்குகளை கவனியுங்கள் .இப்படி நம் அன்றாட நிகழ்வில் நாம் பயன் படுத்தும் பொருட்கள் மூலமே நல்ல பங்கை தேர்ந்து எடுக்கலாம் இது உதாரணம்தான்..
எந்த பங்கை தேர்ந்து எடுத்தாலும் பேப்பர் வொர்க் செய்யுங்கள் அதன் தினசரி விலை நிலைவரங்களை எழுதி வாருங்கள் பின்னர் உங்களுக்கே ஒரு ஐடியா வரும் அதை கொண்டு வாங்குங்கள் .
பின்னர் பேப்பர் ,நெட் , டி.வி மூலம் பங்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நீங்களே எக்ஸ்பர்ட் ஆகிவிடுவிர்கள் .
எக்கரானத்தை கொண்டும் news based பங்கு வாங்குவதை தவிருங்கள்