நிறைய பேசுவோம்

Saturday, February 8, 2014

காதலர் தின கவிதை - 8

காதலர் தின கவிதை - 8
--------------------------
உன்...
இடைவெளியில்
நான் என்
முகம் பார்த்தேன்.
அன்று என்ீ
நெற்றியில்
நீ தந்த ..
முத்தம்..
இன்றும்
இதயத்தில்
சத்தத்துடன்..

காதலர் தின கவிதை -7

காதலர் தின கவிதை -7
---------------------------
நானும் ...
சங்கீதம் ...
கற்று கொள்கிறேன்
உன்...
பெயரை...
உச்சரித்து..உச்சரித்து ....

காதலர் தின் கவிதை - 6

காதலர் தின் கவிதை - 6
---------------------------
இன்றும்...
செல்போன்
ரிங்டோனாக..
உன் கால்கள்
மெல்ல ந்டந்து
வரும்போது
இசைக்கும்
சங்கீததத்தைதான்
பதிவு செய்துள்ளேன்....

Wednesday, February 5, 2014

காதலர் தின கவிதை - 5

காதலர் தின கவிதை - 5
----------------------
இன்றும் ...
தலை வாரும் போதெல்லாம் ..
உன் நினைவு
அன்று ..
கலைந்த என்
தலை முடியை
உன் விரல்களால்
கோதி விடுவாயே..

காதலர் தின கவிதை. - 4

காதலர் தின கவிதை. - 4
----------------------
காதல் சுகமானதுதான்..
ஏனோ ..
அவளின்/அவனின்
நினைவுகள்தான்
சுமையாகி போனது..

காதலர் தின கவிதை - 3

காதலர் தின கவிதை - 3
-----------------------------
நானும் ...
கட்டிக் கொண்டிருக்கிறேன்..
தாஜ்மகால் ..
கற்களால் அல்ல
உன் நினைவுகளால்..

காதலர் தின கவிதை - 2

காதலர் தின கவிதை - 2
-----------------------------------
அன்று நீ..
என்னை. கட்டி
அணைத்த வேளையில்
விலகிதான் சென்றது..
காற்று ..
நம்மை விட்டு
ஏனோ..
இன்றும் விலகாமல்..
காற்று ..நினைவுகளாய்..

காதலர் தின கவிதை- 1

காதலர் தின கவிதை- 1
----------------------------

என்ன ..
வாழ்த்து அட்டை..
நீ தருவாய்
என்ற எதிபார்ப்பு
இன்றும்..
நினைவுகளில்