நிறைய பேசுவோம்

Friday, December 16, 2011

உன் நினைவை சுவாசித்து வாழ்கிறேன்


சுவாசிக்க ..
காற்றுதான்
தேவை இருந்தும்
ஏனோ..
உன் நினைவை
சுவாசித்து
வாழ்கிறேன்
உன் ..
நினைவுகளை
சேமித்து சேமித்து
நானும் ..
காதல் ..
கடனாளியாகி ..
போனேன் ..
நினைவுகளோடு
வாழும் போதும்
தோற்காமல்
ஜெயித்து ..
கொண்டிருப்பது
என்னமோ ..
காதல்தான் ..

Sunday, December 11, 2011

பல்லாண்டு வாழ்க ரஜினி ..


சின்ன வயதில்
உன் ஸ்டைல்
பார்த்து ..
பரவசமானேன் ..
பைரவி ..
படத்தில்
நீ ...
பிடித்த பாம்புக்கு
நான் ரசிகன்
ஜானி படத்தில்
உன் போன்று
தலை முடி
வைக்க ..
நெற்றியின் ..
ஓரம் வளர்த்த
முடியை ..
வெட்டி..வெட்டி..
தோற்று போனேன்
நான் ..
வளர வளர ..
உன் ஆன்மீகமும்
பிடித்து போனது
உன்னை ரசிக்க
கோடானு கோடி
மக்கள் ..
அதில் .. ஒரு
துளியாய் ..
நானும் ..
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க
ரஜினி .. என்று
உளமார ..
வாழ்த்துகிறேன்