நிறைய பேசுவோம்

Wednesday, July 19, 2017

குழந்தை“இரண்டு குழநதைக்கு அம்மாவாக நடித்து கொண்டிருந்தாள் தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்துடன் நடிகை ..”

Wednesday, June 14, 2017

பத்து நொடி கதை

பத்து நொடி கதை

“மாமியாருடன் சண்டை போட்ட அவள் எதிர்ப்பை காட்டினாள் .குடும்பம் வாட்ஸ் அப் குருப்பிலிருந்து வெளி வந்ததன் மூலம் ..”

Thursday, April 27, 2017

இப்படியும் சில மனிதர்கள்

இப்படியும் சில மனிதர்கள்
எனக்கு கார் பார்க்கிங் கிடையாது. பக்கத்து பிளாக்கில் ஒரு மரம் இருக்கும் அதன் அடியில் நிறுத்தினால் அந்த வீட்டம்மா கல்லை பரப்பி வைக்கும் கேட்டால் எனக்கு கிச்சனில் இருந்து ரோட்டை பார்க்க முடியலை மறைக்குது கார் என்றது சர் என்று வைக்கவில்லை. ரொம்ப நாளாக அந்த அம்மா இல்லை மகள் குடும்பம் மட்டுமே இருந்தது சரி நிறுத்தலாம் என்று இரண்டு நாள் நிறுத்தினேன். வெயில் போனவுடன் காரை எடுத்து விடுவேன். இன்று நிறுத்தும் போது அந்த்ம்மாவின் மருமகன் இங்கு நிறுத்த கூடாது என்றார். வெயிலுக்குதான் நிறுத்துறேன் என்ற போதும் கறாராக கூடாது என்றார்.
உங்களுக்கு நல்ல மனசு இருக்கு நல்லா வருவிங்க என்று சொல்லி விட்டு காரை எடுத்து வந்து விட்டேன்..
#நம்மை டென்சன் படுத்த பலரும் காத்திருக்கின்றனர்..

Saturday, April 8, 2017

நீயா நானாவில்

நீயா நானாவில் பேசும் இந்த மக்கள் மேல் தட்டு மக்களாக தெரிகிறது..கல்யாணம் நடப்பதன் கஸ்டம் தனிப்பட்ட அவர்களுக்குதான் தெரியும் ஒரு மணி நேரம் நிகழ்ச்சியை எடிட் செய்து சாதகமாக காட்டி இதுதான் தமிழ்நாட்டில் என்று சொல்வதை ஏற்க முடியாது. மீடியாவிற்கு அது வியாபாரம். சினிமா பார்ப்பது போல் பார்த்து விட்டு அதை மறந்து விட வேண்டும். அதுதான் நமக்கு நல்லது

Thursday, March 23, 2017

பத்து செகண்ட்

இந்த வார விகடனில் வெளிவந்த பத்து செகண்ட் கதை

Sunday, March 19, 2017

கணவன்+மனைவிதான் நினைப்பதை தன்னிடம் கேட்காமலேயே தனக்கு கணவன் செய்யவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள்.
மனைவி எதிர்பார்த்ததை அவளிடம் கேட்காமலேயே அனைத்தையும் தான் செய்து விட்டோம் என்று கணவன் நினைக்கிறான்.
#ஆனால் நடப்பதென்னவோ தலைகீழ்தான்

Monday, March 13, 2017

பேய் மழை


பேய் மழை
பெய்தாலும்
எனக்கு ..
தேவை குடையல்ல
தேவை..
உன்..
முந்தானை குடைதான்.