இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சிறுகதை :: பணம் பிரபாஷ்கரன்
சுகுமார் அந்த ஹோட்டலில் நுழைந்தவுடன் ஆகா.. ரவா
தோசை இங்கு நல்லாருக்கும் சாப்பிடலாம் என்று நினைத்தவன் சர்வரை அழைத்து ஆர்டர்
செய்தான் ..
“சார் வேறு என்ன வேண்டும் கேட்ட சர்வரிடம்
ஸ்டிராங்காக ஒரு காபி ..”-என்றான்
சர்வர் சென்றவுடன் பர்சில் துழாவி ஐந்து ரூபாய்
நாணயத்தை தனியாக எடுத்து வைத்து கொண்டான் டிப்ஸ் கொடுப்பதற்காக, சர்வர் கல்லாவில்
மாற்றி மிச்ச காசை கொண்டு வரும்போது பத்து ரூபாயை கொண்டு வந்து விட்டால் சுகுமார்
எப்போதுமே டிப்ஸ் வைப்பதுக்கு என்றே ஐந்து ரூபாய் நாணயத்தை தனியே வைத்திருப்பான்
..
சர்வர் பில்லை கொடுத்தவுடன் வழக்கம் போல் மிச்ச சில்லரை
எடுத்து கொண்டு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தான் அதை எடுத்த சர்வர் நேரே கல்லா
அருகில் இருந்த உண்டியலில் போடுவதை கவனித்த சுகுமார் மேனேஜரை அழைத்து அதை பற்றி
கேட்டான்
அவர் சிரித்தவாறே இங்கு சர்வர் எல்லோருக்கும்
நல்ல சம்பளம் தருகிறோம் டிப்ஸ் வாங்குவது வழக்கம் இல்லை இருந்தாலும்
வாடிக்கையாளர்கள் விரும்பினால் அவர்கள் தரும் டிப்ஸ்சை இந்த உண்டியலில் போட்டு
விடுவார்கள் .இந்த பணத்தை ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுவோம் என்றார் ..
அதை கேட்டு ஒரு கணம் திகைத்த சுகுமார் சார் நான்
இந்த உண்டியலில் பணம் போடலாம் என்று கேட்டு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்து
போட்டான் ..”
No comments:
Post a Comment