நிறைய பேசுவோம்

Saturday, May 28, 2011

இன்ஜினியரிங் படிப்பு மீது இத்தனை மோகம் தேவையா..?






நேற்று சுயநிதி கல்லூரியில் ஆசிரியர்களின் சம்பளம் பற்றி எழுதியிருந்தேன் .அதற்கு நண்பர் சீனா அவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து போர வேண்டும் என்று கருத்து சொல்லியிருந்தார். உண்மை ஆனால் அது அவ் வளவு எளிதல்ல காரணம் பணி பாதுகாப்பு என்பது அவர்களுக்கு முழுமையாக இல்லை . இருந்தாலும் போராடினால்தான் வெற்றி பெற முடியும் .

சரி இன்றைய பதிவிற்கு வருவோம் நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் அட்மிசன் காக அழைத்து சென்றார் அங்கு நான் கண்ட காட்சிதான் என்னை ஆச்சர்ய பட வைத்தது . அங்கு ஒவ்வொரு கோர்ஸ்க்கும் நன்கொடை வாங்கி கொண்டிருந்தனர் .அப்போது ஒருவர் காலில் செருப்பு இல்லை கூலி வேலை செய்கிறாராம் தன் மகளுக்கு சீட் கேட்கிறார் நன்கொடை தர தயாராக . கொஞ்சம் கொஞ்சமாக தருகிறேன் என்கிறார் . அதற்கு எதிர்த்தார் போல் இருந்தவர் ஒரு மாதத்திற்குள கொஞ்சம் கொஞ்சம் ஆகா 1 லட்சம் கொடுக்க சொல்கிறார் இவரும் சரி என்கிறார் மனைவியிடம் கேட்டு விட்டு,  அங்கு பெரிய வியாபாரமே நடந்தது mechanical    கேட்டால் இல்லை automobile  எடுத்துக்கங்க கம்ப்யூட்டர் கேட்டால் இல்லை it  எடுத்துக்கங்க இப்படி வியாபாரம் நடக்கிறது நன்கொடையுடன் .


இப்படி பணம் கொடுத்து இன்ஜினியரிங் படிக்கணும்மா ஏன் ஆர்ட்ஸ் காலேஜ் இல் ஒரு degreee  படித்தால் வேலை கிடைக்காதா கஷ்டபட்டாவது நன்கொடையை அள்ளி கொடுத்து இப்படி படிக்கணுமா ஏன் இந்த மோகம் எத் தனை இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் இப்பொது ரொம்ப கம்மியான மார்க் எடுத்தாலும் இன்ஜினியரிங் சீட் கிடை க்கிறது   எல்லா படிப்புக்கும் வேலை இருக்கிறது உங்களுக்கு திறமை இருந்தால் இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் . எனக்கு இவர்கள் அந்த பணத்தை எதிலாவது முதலீடு செய்தால் கூட அந்த குழந்தைகளுக்கு உதவும் .இம் நீங்கள் என்ன நினைகிறீர்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் நான் தவறாக சொன்னால் அதை திருத்தி கொள்கிறேன் .




Friday, May 27, 2011

சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் சிகிச்சைக்கு செல்லும் முன் பேசிய ஆடியோ இது

சூப்பர் ஸ்டார் சிங்கப்பூர் சிகிச்சைக்கு செல்லும் முன் பேசிய ஆடியோ இது .தலைவர் தன் trade mark   சிரிப்போடுதான் தன் பேச்சை ஆரம்பிக்கிறார் .மீண்டும் பூரண உடல் நலத்துடன் குணம் அடைய நாமும் பிரார்த்திப்போம் .


பணம் சம்பாதிப்பது எப்படி என்றால் கல்லூரி அல்லது பள்ளிக்கூடம் நடத்தினால் போதும் என்பதே உண்மை





இன்று ஒரு முக்கியமான பதிவு எழுதுகிறேன் சென்ற பதிவில் பீர் பாட்டில் உடன் பெண் இருந்தால் அது சகஜம் என்ற அளவில் சில கருத்துகள் வந்தன .சரி நாம் கருத்துக்களை வரவேற்போம் .இன்றைய பதிவு சுயநிதி கல்லூரிகளை பற்றி இன்று சுயநிதி கல்லூரிகள் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளன .அதுவும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்றால் கல்லூரி அல்லது பள்ளிக்கூடம் நடத்தினால் போதும் என்பதே உண்மை நன்கொடை ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனியே வாங்குகின்றனர் .அப்படி வாங்குவது என்பதும் கிடடத்தட்ட அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது . ஒரு அரசு கல்லூரியில் ஒரு ஆசிரியர் வாங்கும் சம்பளம் 34000    ஆனால் சுயநிதி கல்லூரியில் வாங்கும் சம்பளம் மிக குறைவு . ஆனால் ஒரு கல்லூரி ஆரம்பிக்கும் போது அரசு அளிப்பது போல் சம்பளம் வழங்க வேண்டும் . ஆனால் எந்த கல்லூரியும் அதை பின்பற்றுவது கிடையாது (சில கல்லூரிகள் இதற்கு விதி விலக்கு) அரசாங்கமும் இதை கண்டு கொள்வதில்லை . கிட்டத்தட்ட சுயநிதி கல்லூரிகள்   500   இக்கும் மேல் இருக்கும் தமிழ் நாட்டில், அவர்களுக்கு வரும் வருவாயில் 10  சதம் சம்பளத்திற்கு கொடுத்தால் கூட போதும் ஆனால் சுயநிதி கல்லூரிகள் நடத்துபவர்கள் ஏனோ அதை விரும்புவதில்லை . சமிபத்தில் ஒரு கல்வியாளரிடம் பேசியபோது அவர் ஜோக் போன்று சொன்னது  ஒரு phd  படித்த ஆசிரியர் கூட 3000  அல்லது 4000 ரூபாய்க்கு வேலைக்கு கிடைப்பார் ஆனால் தோட்ட வேலை செய்ய இந்த சம்பளத்திற்கு கிடைக்க மாட்டேன்கிறான் . எத்தனை வேதனை தரும் விஷயம் . நீ ஏன் நல்ல வேலைக்கு போக வேண்டியது தானே இந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கிறாய்  என்ற கேள்விகளும் வரலாம். அவர்கள் பாவம் ஒரே படிப்பு ஆனால் ஊதியத்தில் இத்தனை மாறுபாடு .தகுதி இல்லாத ஆசிரியர்கள் அதாவது விரிவுரையாளர் தேர்வு எழுதி பாஸ் செய்யாதவர்கள்  அல்லது phd  படித்தவர்களை மட்டும் வைத்து கல்லூரி நடத்த சொல்லுங்கள் பல கல்லூரிகள் காணமல் போய்விடும் .தகுதியை அவர்களும் வளர்த்து கொள்ளட்டும் இவர்களும் நல்ல சம்பளம் கொடுக்கட்டும் அரசாங்கம் இதை கண்டிப்பாக சரி செய்ய வேண்டும் பெரும்பான்மை ஆசிரியர்கள் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் என்பதால் இதற்கு ஒரு தீர்வு கண்டால் நன்றாக இருக்கும் . நண்பர் ஒருவர் சொன்னது எங்கள் கல்லூரியில் ஆசிரியரை விட பஸ் டிரைவர்க்கு சம்பளம் அதிகம் காரணம் டிரைவர்கள் கிடைப்பதில்லை . என்ன நிலைமை பாருங்கள் படித்தவர்களுக்கு .

சரி சீரியஸ் ஆக ஒரு பதிவு போடலாம் என்று இந்த பதிவு, நண்பர் ஒருவர் இதை எழுதும்படி என்னை வற்புறுத்தி கேட்டதால் இதை எழுதினேன் . ஆனால் இதில் எந்த மாற்றமும் வர போவதில்லை என்பதே என் எண்ணம் . ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தால் அரசு கல்லூரி அல்லது அரசு பள்ளி ஆசிரியர் ஆக முயற்சி செய்யுங்கள் இல்லை என்றால் வேறு நல்ல வேலை பாருங்கள் என்பதே என் அட்வைஸ் .


Thursday, May 26, 2011

கூல்ட்ரிங்க்ஸ் மாதிரி டாஸ்மாக் ஆகாமல் இருந்தால் சரிதான்





இந்த படத்தை பாருங்கள் .இதற்கு  என்ன செய்வது இது உண்மையாகவே ஒரு பெண் டாஸ்மாக் இல் சரக்கு வாங்க நிற்பதாகத்தான் தெரிகிறது இதுவும் facebook    இல் கிடைத்த படம்தான் .இனி கூல்ட்ரிங்க்ஸ் மாதிரி டாஸ்மாக் ஆகாமல் இருந்தால் சரிதான்       


தமிழ் பெண்ணின் கையில் பீர் பாட்டில்




இந்த படம் facebook  இல் நண்பர்  ஒருவர் போட்டிருந்தார் இதை பார்த்தவுடன் ஆச்சரியம் தமிழ் பெண்ணின் கையில் பீர் பாட்டில் சும்மா கூட போஸ் கொடுத்திருக்கலாம் இருந்தும் இப்படி எப்படி முடிந்தது மிகுந்த வருத்தம் அடைந்தேன் இதை நான் இங்கே வெளியிட்ட காரணம் யாரும் இது போன்று இனி செய்யாதீர்கள் என்று சொல்வதற்குதான் உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்        


Wednesday, May 25, 2011

டாக்டருடன் ரஜினியின் புகைப்படம்





ரஜினி பற்றி பலவிதமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன .சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் என்று லேட்டஸ்ட் செய்தி .மேலே காணும் புகைப்படம் facebook இல் நண்பர் Sukumar Swaminathan     அவர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படம் அவருக்கு நன்றி .மேலே காணும் புகைப்படத்தில் ரஜினி சிரமப்பட்டே சிரிப்பது போல் தோன்றுகிறது .இருப்பினும்      அவர் நலமாக இருப்பது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் அவர் சிகிச்சைக்காக எங்கு சென்றாலும் குணமடைய பிரார்த்திப்போம் 



கவிதை : தொலைந்து போனாய் நீ ..- பிரபாஷ்கரன்





தொலை தூரம் 
சென்று விட்டாய்..
நீ. 
தொலைந்து போனாய்
நீ ..
என்னை விட்டு
மறந்து போனாய்
நீ ..
ஆனாலும் 
நான் ..
உன்னை 
தேடவில்லை 
காரணம் 
நீ ..
என்னிடம் 
விட்டு சென்ற 
நினைவுகள் 





Monday, May 23, 2011

சிறுகதை : நல்லா படிக்கணும் - பிரபாஷ்கரன்





சிறுகதை : நல்லா படிக்கணும் - பிரபாஷ்கரன் 


"என்னங்க நம்ம பிள்ளை நல்லா படிக்கணும் எல்.கே .ஜி தானேனுன்னு விட்டுட கூடாது " கண்டிப்புடன் கூறினால் திவ்யா 

"இப்ப என்னை என்ன பண்ண சொல்றே சொல்லு " கேட்டான் ரவி 

"இல்லிங்க இப்பவே டியூஷன் சேர்த்திடனும் " சொன்னால் திவ்யா 

"அதெல்லாம் அடுத்த மாதம் பாப்போம் " என்று ரவி சொன்ன போது 

"என்னங்க அடுத்த மாதமா இப்பவே சேர்தாதான் நல்லா இங்கிலீஷ் கத்துக்க முடியும் நான் அப்பத்தான் அவளுக்கு என்னால் நல்லா இங்கிலீஷ் இல் சொல் லித்தரமுடியும் அதனால் என்னை இன்றே இங்கிலீஷ் டியூஷன் இல் சேர்த்து விடுங்கள்" என்று அடம் பிடித்த மனைவியை ஆச்சர்யமுடன் பார்த்தான் ரவி