நிறைய பேசுவோம்

Saturday, March 12, 2011

டீச்சர் குழந்தைக்கு முதலிடம்


இது பல பள்ளிகளிலும் நடக்கிறது . பக்கத்துக்கு வீட்டு குழந்தை சோகமாக இருந்தது என்னவென்று கேட்டேன் . எனக்கு பள்ளியில் பாட்டு போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றது நீ நன்றாக பாடுவியே பின் ஏன் என்று கேட்டேன் . அப்போதுதான் புரிந்தது அவள் படிக்கும் பள்ளியில் என்ன நடக்கிறது என்று .

அவள் படிக்கும் பள்ளியில் அங்கு வேலை பார்க்கும் டீச்சர்  குழந்தைகளும் படிக்கின்றன குறிப்பிட்ட அந்த  குழந்தைகளுக்கு மட்டும் அனைத்து போட்டிகளிலும் பரிசு கொடுத்து விடுகின்றனர் மேலும் பள்ளி ஆண்டு விழாவிலும் நடன போட்டிகள் மற்றும் நடனத்தில்  ஆடும் போது முன்னால் நின்று ஆடுவதற்கு அந்த டீச்சர் குழந்தைகளுக்கு தான் வாய்ப்பு மற்ற குழந்தைகள் புறக்கணிக்க படுகிறார்கள் .

இது என்ன நியாயம் நான் எல்லா பள்ளிகளையும் சொல்லவில்லை .இருந்தாலும் இது போன்ற டீச்சர்கள்  திருந்துவார்களா உங்கள் குழந்தை பரிசு வாங்க வேண்டும் என்று இப்படி மற்ற குழந்தைகளை ஏமாற்றலாமா சிந்தியுங்கள் .கவிதை : முன்னால் காதலி .----பிரபாஷ்கரன்


அன்று ..
அவள் என்னையே 
நினைத்தேன் ..
நினைப்பேன் ..
நினைத்து கொண்டிருப்பேன் ..
என்றாள்..
ஆனால் ..
இன்று ...
என்னையே 
மறப்பேன்.
மறந்தேன் ... 
மறந்து கொண்டிருக்கிறேன் ..
என்கிறாள் ...
காரணம் ..
அவள் என் 
முன்னால் காதலி .

Friday, March 11, 2011

காதல் கிரிக்கெட் கவிதை - பிரபாஷ்கரன்

 அன்பே ...
நான் ...
தொடர்ந்து 
டக் அவுட் தான்
ஆகிவிடுகிறேன் 
காரணம் 
பந்து வீசுவது 
உன் விழிகள் 
அல்லவா ..

 

சுனாமி .. மனித வாழ்க்கை .. நிலையற்றது ..கோடிகளில்...
ஊழல் செய்யும் ..
அரசியல்வாதிகளே 
ஒரு நிமிடம் 
சுனாமியை ..
பாருங்கள் 
மனித வாழ்க்கை ..
நிலையற்றது ..
இருந்தும் ..
ஏன்.. புரிவதில்லை 
உங்களுக்கு

கவிதை : தாடி - பிரபாஷ்கரன்


ன்பே ...
உன் இன்ப ..
நினைவுகளை 
என் இதயத்தில் 
சுமந்து கொண்டேன் ..
ஆனால் ...
துன்ப நினைவுகளை 
சுமந்து கொள்ள 
என் முகத்தில்தான் 
இடம் கிடைத்தது Wednesday, March 9, 2011

யாகம் நடந்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்

மதுரையில் ஒரு கோயிலில் யாகம் நடந்த போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு அந்த படத்தில் என்ன தோன்றுகிறது என பாருங்கள் .. கண்டிப்பாக கடவுளின் உருவம் தெரியும் என் கண்களுக்கு சிவனின் உருவம் தெரிந்தது பலரும் இதே கருத்தைத்தான்  தெரிவித்தனர் . பார்வைகள்  பலவிதம்தானே .. உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதையும் தெரிவியுங்கள் . படம் .. 

கவிதை : பார்க்காமல் ..சென்றுவிடு - பிரபாஷ்கரன்


அன்பே ...
வேண்டாம் ..
என்னை பார்க்காமல் ..
சென்றுவிடு ..
என்னை நீ பார்க்காவிட்டால் ..
இரவில்தான் உளறுவேன்
பார்த்து விட்டால் .
பகலிலும் கூட.. 

சிறுகதை : மனைவி - பிரபாஷ்கரன்

இந்த சிறுகதை நான் குமுதம் இதழில் எழுதி வெளி வந்தது 

இடைவேளையின் போது தன்னோட புது மனைவிக்கு ஐஸ் கிரிம் வாங்கிக் கொண்டு திரும்பிய கண்ணன் அதிர்ந்து போனான் .

அவன் மனைவியோடு அவள் சிரித்து சிரித்து பேசி கொண்டிருந்தாள் .

அவனை கண்டதும் புன்னகைத்த அவன் மனைவி " இவ அனிதாங்க என்னோட நெருங்கிய தோழி . சின்ன வயசிலிருந்து ஒன்றாகவே படிச்சோம். பாவம் நம்ம கல்யாணத்துக்கு அவளால் வர முடியலை  " சொல்லியவள் ...

"அனிதா இவர்தான் எங்க வீட்டுக்காரர் .விற்பனை பிரதிநிதியா இருக்கார் .."

அந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது .

"டேய் .. அட்டகசமான அயிடம்டா .. சும்மா டன்லப் பில்லோ மாதிரி மெத்தென்று பார்த்தாலே சூடு ஏறும்டா .." ரூமில் வந்து சொன்னான் ரவி .."

"அப்படியா சொல்லாதேடா அயிட்டத்தை மடக்கினியா.. ரேட் எவ்வளவு .."

"அதெல்லாம் எதுக்கு ? பாஸ்கர் ரூம்ல இருக்கா வா "

உடனே போய் அவளை அனுபவித்தது   நினைவிற்கு வந்தது.

இதை நம் மனைவியிடம் சொல்லிவிட்டால் என்றால் நம் மானமே போய்விடுமே.. என்ன செய்வது என்று அவன் நினைத்து கொண்டிருக்கும் வேளையில், " நீங்க கொஞ்சம் அனிதா கிட்ட பேசிக்கிட்டிருங்க .. நான் டாய்லெட் வரைக்கும் போயிட்டு வரேன் .. " அவன் மனைவி சொல்ல ..

கண்ணன் வயிற்றில் யாரோ பால் வார்த்தது போலிருந்தது. அப்போது அனிதாவே மெல்ல பேசினாள்.

"சார் .. சந்தர்ப்ப வசத்தால் என்னுடைய பிழைப்பு உடம்பை விற்று பிழைக்கும்படி ஆகிட்டது . ஆனால் உங்க மனைவிக்கிட்ட நான் நல்ல வேலை பார்ப்பதாக சொல்லிருக்கேன் . நானும் அவளும் சின்ன வயசிலேருந்து உயிருக்குயிரான சினேகிதிங்க .. இந்த விஷயம் தெரிஞ்சா அவள் தாங்கி கொள்ள மாட்டாள். தயவு செய்து என் சிநேகிதிக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் ... விசும்ப ஆரம்பித்தாள்Tuesday, March 8, 2011

மகளிர் தினம் -கவிதை -பிரபாஷ்கரன்


பெண்களே ...
ஒவ்வொரு  ஆணும் ..
தன்னுடைய ..
இதயத்தில் ..
சுமந்திருப்பது ..
ஒரு பெண்ணைத்தான் 
எனவே ...
எங்கள் இதயத்தில் 
இன்று மட்டுமல்ல 
என்றுமே ..
மகளிர் தினம்தான்..

Monday, March 7, 2011

சிறுகதை : காதல் செய்யும் மாயம் .. - பிரபாஷ்கரன்

 சிறுகதை : காதல் செய்யும் மாயம் .. - பிரபாஷ்கரன்

சிவா கத்திக் கொண்டிருந்தான..

.' 'என்னம்மா பொண்ணு இவ நாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியது கண்டவனையும் லவ் பண்ணவா..... என்ன நினைசிட்டுருக்கா இவ மனசில தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்... வெட்டி போட்டுடுவேன் ....'  நம்ம சாதி சனம் என்ன பேசும்.... 
 
            அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி..  சிவாவின் மனைவி கல்யாணம் ஆகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஒரே சாதியில் நடந்த திருமணம்....'

        '' என்ன இவன் கூட பிறந்த தங்கையின் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே மனதில் நினைத்துக் கொண்டாள்.
        உள்ளே சிவாவின் தங்கை அழுது கொண்டிருந்தாள். அப்போது சங்கரி உள்ளே வந்தாள்..

     அண்ணியை பார்த்தவுடன் கண்களை துடைத்து கொண்டாள். 

    '' அழாதே கண்ணை துடைச்சுக்கோ...காதலிக்கறது தப்பில்லை அதை அடைய போராட தெரியனும்...' அப்பதான் காதல் ஜெய்க்கும்....கவலைபடாதே நீ உள்ளே போ உங்க அண்ணன் வரார்...      

        உள்ளே வந்த சிவாவிடம் என்னங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள்  சங்கரி....
       '' என்ன ...'' என்பது போல் பார்த்தான்.
        '' ஏங்க நான் உங்ககிட்ட ஒரு உண்மையை சொல்லணும்.. நம் திருமணத்திற்கு  முன்னாடியே நான் ஒருத்தரை லவ் பண்ணினேன். அவரும் என்னை விரும்பினார். ஆனால் எங்கள் வீட்டில் ஒத்து கொள்ளாமல் உங்களுக்கு  கல்யாணம் செய்து வச்சுட்டாங்க. எனக்கும் வீட்டில் எதிர்த்து போராட முடியாமல் உங்களை கல்யாணம் செய்துகிட்டேன்.
   
   கேட்ட அவனின் பார்வையில் உக்ரம் தெரிந்தது.
 '' காதல்னா எதுவரைக்கும் பழகினிங்க.. வேற என்ன நடந்தது... வயித்தை கழுவிட்டு எனக்கு மனைவி ஆகலையே.. என்னை ஏமாத்திட்டியேடி ...'' அவனின் வக்கிரமான பேச்சுக்கள் அவளை தாக்கின..
  
    சிரித்தாள் சங்கரி..  '' வெல் சிவா.. எப்படி கேவலமா பேசுறிங்க...'' இதே நிலமை... உங்க தங்கைக்கு  வராதுன்னு என்ன நிச்சயம்  நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளை மட்டும் எப்படி சம்மதிப்பான் அவரும் உங்களை மாதிரி சராசரி ஆம்பிளையா இருந்தா ....  நாளைக்கு உங்க தங்கச்சி காதல் விவகாரம் தெரிந்து அவளை வீட்டிற்கு அனுப்பிட்டா...
  
        சிவாவிற்கு நெற்றி பொட்டில் அடித்தது போல் இருந்தது ... ''ஆம்...நம் தங்கை கண்டிப்பாக வரப்போகும் கணவனிடம் அவள் காதலை பற்றி சொல்லிவிடுவாள் ... வரப்போறவன்  எப்படி இருப்பானோ ... சங்கரி சொல்வதும் சரிதான்.. அவள் விருப்பபடி செயதால் சந்தோசமாக இருப்பாள்..என்ற எண்ணத்துடன் அவன் தங்கையை பார்த்தான்

அரசியல் காதலி


இது நாட்டில் நடக்கும் அரசியல் கூட்டணி நாடகங்களை  பார்க்கும்போது ஏற்பட்ட கவிதை

அன்பே ...
நீ என்ன ..
அரசியல்வாதியா ...
நேற்று ...
என்னை காதலித்தாய் ..
இன்று யாரையோ ...
காதலிக்கிறாய் ...
நாளை ..
யாரையும் காதலிப்பாய்
உனக்கு ..
தேவை மனம் 
அல்ல பணம்தானே