நிறைய பேசுவோம்

Saturday, December 10, 2011

காதல் ஒரு மாயை ..அவள் பார்வையில்
அவளிடம் ..
வார்த்தைகளை
தொலைத்தேன் ..
அவள் ..
புன்னகையில்
என்னை தொலைத்தேன்
அவள் ..
பேசிய போது
மனதை தொலைத்தேன்
மொத்தத்தில் ..
வாழ்கையை
தொலைத்த போதுதான்
புரிந்து ..
போனது ..
காதல் ஒரு
மாயை ..
என்று ..

Wednesday, December 7, 2011

எரிச்சல் வங்கி


இன்று மதுரை ஸ்டேட் பேங்க் ஜங்ஷன் அருகில் உள்ள மெயின் பிராஞ்சில் பணம் கட்ட சென்றேன் .டோக்கன் வழுங்கும் இயந்திரம் வேலை செய் யவில்லை ஒவொரு கவுன்டரிலலும்  பெரிய வரிசை .வரிசையில் என் மனைவியை நிறுத்தி விட்டு சில சாமான்கள் வாங்க வெளியே கிளம்பி விட்டேன் அரை மணி நேரம் கழித்து வந்தேன் வரிசையில் பெரிய முன்னேற்றம் இல்லை .வயதானவர்கள் பாவம் உட்கார முடியாமல் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர் டோக்கன் இருந்தால் அவர்கள் உட்கார்ந்து கூப்பிடும் போது கட் டலாம் பாவம் எப்போது அந்த வங்கிக்கு சென்றாலும் பணம் கட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது அவ்வளவு கூட்டம் .டோக்கன் வைத்திருந்தால் கூட்டத்தை பார்த்துவிட்டு வெளியே போய் நம் வேலையை பார்த்து விட்டு வந்து கட்டலாம் இதற்கு ஒரு வழி செய்யகூடதா இவர்கள் .. ,வயதானவர்கள் வரிசையில் நிற்கும்போது பாவமாய் உள்ளது . என்ன சொல்ல நம் நாட்டில் இப்படிதான் போலும்...


Sunday, December 4, 2011

தனுசின்அரிய 3 திரைப்பட புகைப்படங்கள்

தனுசின் அரிய 3 திரைப்பட  புகைப்படங்கள்