நிறைய பேசுவோம்

Sunday, June 15, 2014

லாபம் முக்கியம் லாபம் மட்டுமே முக்கியம்காட்சி 1:
என் நண்பர் மிக பெரிய நகை கடையில் எட்டு கிராம் அளவிற்கு தங்க காசு வாங்கியிருந்தார் .அதை ஒரு அவசர பணத்தேவைக்காக விற்பதற்காக வாங்கிய அதே கடைக்கு சென்றார் . ஆனால் கடையிலோ செக்காகதான் தருவோம் வேண்டுமானால் நகையாக வாங்கி கொள்ளுங்கள் என்றனர் .நண்பரோ பணம்தான் வேண்டும் என்றவுடன் நீண்ட விவாதம் செய்து பணமாக தர ஒத்து கொண்டனர் .ஆனால் 1% சதம் கழித்து தான் தருவோம் என்றனர் கேட்டதற்கு purchase tax என்றனர் . வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டார் நண்பர் .மற்ற நகை கடையில் வேறு கடையில் வாங்கிய தங்க காசை வாங்குவதில்லை பணமாக தருவதற்கு . நாம் வாங்கிய கடையிலோ இப்படி.. அதே காசை 2% சதம் லாபத்துடன் அடுத்த நபருக்கு விற்கின்றனர் .. என்ன செய்வது கொள்ளை ..

காட்சி 2:
நான் ஒரு பிரபல நகை கடையில் தோடு வாங்கினேன் சீட்டு போட்டதன் மூலம் தோடுடன் இருக்கும் tagல் எடை 3.40 என்று இருந்தது . ஆனால் காரட் மீட்டரில் எடை பார்த்த போது எடை 3.32 இருந்தது .கேட்டதுக்கு 10 மி.லி
வரை + அல்லது வரலாம் என்றனர் .. இதுவே எடை 3.48 என காட்டினால் நம்மிடம்தான் காசை வாங்கி இருப்பார்கள் . சீட்டு போட்டதினால் வேறு வழியில்லாமல் வாங்கினேன்..

இதிலிருந்து தெரிவது நகையுடன் இருக்கும் tag ல் உள்ள எடையை நம்பி விடாதிர்கள் எடை போட்டு வாங்குங்கள்.. செய்கூலி சேதாரம் என்று இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவில்லை ஒவ்வொரு முறையும் பேரம் பேச வேண்டியுள்ளது .அதுவும் சிறிய பொருள்கள் எடுக்கும் போது இவர்கள் சொல்லும் சேதாரம் அப்பாட கொடுமை . முதலிடுக்கு தங்கம் வாங்குபவர்கள் E GOLD முறையில் செய்யுங்கள் .
நகை கடை வியாபாரிகளே லாபம் முக்கியம் லாபம் மட்டுமே முக்கியம் என்று நினைக்காதிர்கள்