நிறைய பேசுவோம்

Saturday, May 14, 2011

பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் உயர்கிறதாம்







பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் உயர்கிறதாம் . என்ன செய்வது தெளிவாக தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அறிவிக்கிறார்கள்  .இனி என்ன எல்லா விலைவாசியும் விண்ணை முட்டும் நாமும் விண்ணை பார்த்து கொண்டு உட்கார்திருக்க வேண்டியதுதான் . இம் நாம் என்ன செய்யமுடியும் நாம் அப்பாவி பொது ஜனம்தானே 

கவிதை :ஏ.சி ..போடமாலேயே - பிரபாஷ்கரன்







கோடை வெப்பம் 
என்னை தாக்கவில்லை 
ஏ.சி ..போடமாலேயே 
ஜில் 
காரணம்..
உன் புன்னகை 



Thursday, May 12, 2011

கவிதை: தேர்தல் முடிவுகள் -பிரபாஷ்கரன்

தேர்தல் முடிவுகள் 

தோல்வியுற்றால் 
மக்கள் தீர்ப்பே 
மகேசன் தீர்ப்பு 
இது ..
ஒவ்வொரு 
தேர்தலிலும் 
கேட்கப்படும் 
வசனங்கள் 
யார் ..
ஜெயித்தாலும் 
டாஸ்மாக் யை 
மூட போவதில்லை 
விலைவாசி ..
ராக்கெட் வேகம் 
பிடித்து மேலே 
ஏறினாலும் 
என்ன செய்வது 
வழக்கம் போல் 
வேடிக்கை 
பார்கத்தானே 
முடியும் ..
இம் ..
மிக்சியும்..
கிரைண்டரும் 
இலவசமாய் 
வாங்கி கொண்டு 
மின்சாரத்திற்கு 
நாங்கள் ..
என்ன செய்வது 
என்ன விலை 
போகும் .
இந்த 
மிக்சியும்..
கிரைண்டரும் ..
வரட்டும் ..
தேர்தல் முடிவுகள் 
பார்ப்போம் 




Wednesday, May 11, 2011

கவிதை : சுயநலம் - பிரபாஷ்கரன்


தோற்று போகும் 
காதலில் 
என்றும் 
ஜெயித்து கொண்டிருப்பது 
சுயநலம் ..

Tuesday, May 10, 2011

கவிதை : நிலா சோறு - பிரபாஷ்கரன்

என்னவளே 
எங்கே சென்றாய்
சீக்கிரம் வா ..
அழும் குழந்தைக்கு 
நிலாச் சோறு 
ஊட்ட வேண்டும்


Sunday, May 8, 2011

பல கோடி மக்களின் மனதை புண்படுத்தாதீர்கள்


ஆஸ்திரேலியாவில் நடந்த விழாவில் இந்துக்கள் வணங்கும் கடவுள் லஷ்மியின் உருவத்தை நீச்சல் உடையில் பிரிண்ட் செய்து வடிவம் அமைத்துள்ளனர் இது எத் தனை இந்துகள் மனதை வேதனை அடைய செய்கிறது இந்த ஆடையை வடிவமைத்த Lisa Burke. கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியவர் . நான் அந்த படத்தை வேதனயுடன்தான் இங்கு பிரசுரம் செய்கிறேன் தயவு செய்து மதங்களையும் கடவுளையும் இப்படி செய்து பல கோடி மக்களின் மனதை புண்படுத்தாதீர்கள் 


பலரின் வேண்டுகோளை ஏற்று இந்த படத்தை வலைதளத்தில் இருந்து இன்று முதல் எடுக்கிறேன்

கவிதை :ஆயாக்கள் தினம் பிரபாஷ்கரன்

அன்னையர் தினம் ..
இல்லை .இல்லை 
இன்று ..
பல குழந்தைகளுக்கு 
ஆயாக்கள் தினம்