நிறைய பேசுவோம்

Thursday, May 12, 2011

கவிதை: தேர்தல் முடிவுகள் -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேர்தல் முடிவுகள் 

தோல்வியுற்றால் 
மக்கள் தீர்ப்பே 
மகேசன் தீர்ப்பு 
இது ..
ஒவ்வொரு 
தேர்தலிலும் 
கேட்கப்படும் 
வசனங்கள் 
யார் ..
ஜெயித்தாலும் 
டாஸ்மாக் யை 
மூட போவதில்லை 
விலைவாசி ..
ராக்கெட் வேகம் 
பிடித்து மேலே 
ஏறினாலும் 
என்ன செய்வது 
வழக்கம் போல் 
வேடிக்கை 
பார்கத்தானே 
முடியும் ..
இம் ..
மிக்சியும்..
கிரைண்டரும் 
இலவசமாய் 
வாங்கி கொண்டு 
மின்சாரத்திற்கு 
நாங்கள் ..
என்ன செய்வது 
என்ன விலை 
போகும் .
இந்த 
மிக்சியும்..
கிரைண்டரும் ..
வரட்டும் ..
தேர்தல் முடிவுகள் 
பார்ப்போம் 
5 comments:

Ramani said...

கரண்டும் இருக்காது
சாமான் வாங்கிச் சாப்பிடுகிற நிலைமையிலே
விலைவாசியும் இருக்காது
எனவே ஷோகேசில் வைக்கிற மாதிரிதான்
மிக்ஸியும் கிரைண்டரும் தரலாம்னு இருக்கோம்
ரிசல்டு வரட்டும் பேசிக்கிருவோம்

பாரத்... பாரதி... said...

ஆட்சி மாறினாலும், மாறாவிட்டாலும்
ஆள்வோர்களின் மனநிலையில் மாற்றம் வரவிட்டால் சாமானியர்களின் பாடு திண்டாட்டம் தான்.

நிரூபன் said...

யார் ..
ஜெயித்தாலும்
டாஸ்மாக் யை
மூட போவதில்லை//

இவ் வரிகளில் யதார்த்தம் நிரம்பியிருக்கிறது சகோ.

நிரூபன் said...

இலவசங்களால் ஏமாற்றப்படும் அப்பாவி மக்கள் வாழ்க்கையினை உங்கள் கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.

நிரூபன் said...

மிக்சியும்..
கிரைண்டரும்
இலவசமாய்
வாங்கி கொண்டு
மின்சாரத்திற்கு
நாங்கள் ..
என்ன செய்வது//

இது தான் கொடுத்து வாங்கும் பாலிசியோ.

இதனை அனைத்து மக்களும் உணர்ந்தவர்களாய் மிக்ஸி, கிரைண்டரை நிராகரித்திருந்தால்,
இலவசம் என்ற ஒன்றே இல்லாமற் போயிருக்கும்,