நிறைய பேசுவோம்

Saturday, June 4, 2011

தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன் இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .

தமிழக முதல்வரை நடிகர் கமலஹாசன்இன்று சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் .அருகில் கௌதமியும் கமல் மகளும் கௌதமி மகளும் 
உணமையிலேயே இது அருமையான புகைப்படம் .கவிதை : உன்னை மறந்து விடுவேன் உரிமையோடு - பிரபாஷ்கரன்

அன்று ..
உன்னை .
முதன் முதலில் 
பார்த்த போது 
பரவசம் ..
பச்சை சட்டையில்
நீ.

உன்னை 
எதிர்பார்த்து 
காதலுடன் .
நீ வரும் 
கோயிலுக்கு 
நானும் ..
வந்தேன் ..

எப்படி ..
பைத்தியமானேன் 
உன் மீது 
பச்சை மை 
பேனா வாங்கி 
பச்சை கலர் 
நோட்டு வாங்கி 
கிறுக்கினேன் 
என் மனதை 
அது கவிதையா
தெரிய வில்லை

இதோ ..
இன்றும் ..
பிறந்த நாள் 
கொண்டாடுகிறேன் 
உன்னை ..
முதன் முதல் 
பார்த்த ..
அந்த நாளை 
பச்சை 
புது 
சேலை அணிந்து

காலம் ..
வெகு தூரம் 
சென்று விட்டது 
நேற்று ..
உன்னை நினைத்தேன் 
உரிமையோடு 

இன்று ..
உன்னை 
நினைக்கிறன் 
உரிமை இல்லாமல்

நாளை.
உன்னை 
மறந்து விடுவேன் 
உரிமையோடு 

Friday, June 3, 2011

கவிதை : நிஜத்தில் நானும் தேடுகிறேன் -பிரபாஷ்கரன்

இதயத்தில் ..
கனவுகள் 
நிஜமாகுமா..
என்று ..
தெரியாத போதும் 
ஏனோ ..
நினைவுகள் 
சுகம்தான் 
காரணம் 
அதில் 
அவனின் நினைவுகள் 
நிஜத்தில் 
நானும் தேடுகிறேன் 
என் மன்னவனிடம் 
என்னவனை ..
கிடைக்காது 
என்று ..
தெரிந்த போதும் ....

Thursday, June 2, 2011

கவிதை:அமிர்தமும் நஞ்சுதான் -பிரபாஷ்கரன்

அளவுக்கு 
மிஞ்சினால் 
அமிர்தமும் 
நஞ்சுதான் 
அதனால்தான் 
அடிக்கடி முத்தம் 
தர மறுக்கிராயோ

Wednesday, June 1, 2011

200 வது பதிவு -கவிதை :நிழல் நிஜமாகிறது -பிரபாஷ்கரன்

இது எனது 200  வது பதிவு 2011 பெப்ரவரி இல்தான் வலைத்தளம் துவங்கினேன் .விரைவாக 200  வது பதிவு போடுவதற்கு காரணம் உங்கள் அன்பும் ஆதரவும் .முக்கியமாக நான் நன்றி சொல்லவேண்டியது தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது பல ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் சிறப்பாக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை முடியும் என்று நம்புகிறேன் .இந்த பதிவிற்கு என்ன கவிதை எழுதலாம் என்ற போது face book இல் இந்த புகைப்படம் நண்பர் மூலமாக கிடைத்தது அருமையான புகைப்படம் நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு படமும் கவிதையும் .படத்தை கூர்ந்து கவனியுங்கள் 
அன்பே ..
உன் 
பார்வைக்காக 
ஏங்கி ..
நானும் 
தொடர்கிறேன்
நிழல் போல் 
தொடரும் 
எனக்கு 
நிழலில் 
தரப்போகும் 
இந்த முத்தம் 
நிஜமாகும் 
நாளை 
எண்ணி ..
இதோ நானும் 
உன்னை நோக்கி 

கவிதை : உள்ளே துடித்து கொண்டிருப்பது உன் இதயமும்தான்- பிரபாஷ்கரன்

அடியே .
பத்திரம் ..
நீ ..
வெட்டி எடுத்தது 
என் இதயம்
ஆனால்..
உள்ளே 
துடித்து கொண்டிருப்பது 
உன் இதயமும்தான் 
வைத்து கொள் 
துடிக்கும் 
இதயத்தில் 
கேட்டு பார் 
உன் பெயரை 


கவிதை : அன்பே .. உன்னை நினைத்து - பிரபாஷ்கரன்

அன்பே ..
உன்னை 
நினைத்து 
கவிதை 
எழுதினேன்
புரியவில்லை 
உன் ..
மனதை போல் 

Tuesday, May 31, 2011

கவிதை : கார் வாங்க காசு இல்லை - பிரபாஷ்கரன்
இந்த படத்தை பார்த்து சிக்கனம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி போயவிடதிர்கள் முறையான பயிற்சி முக்கியம் 

நாளை..
மீண்டும் 
பெட்ரோல் விலை
உயர்கிறது 
ஹெல்மெட் 
கட்டாயம் 
போட வேண்டும் 
கார் வாங்க 
காசு இல்லை 
பஸ்சில் போக 
மனசில்லை
என்ன ..
செய்வது 
இப்படிதான் 
போக முடியும் 

Monday, May 30, 2011

சுவாமி நடராஜர் படத்தை பெண்கள் ஆடை வடிவமைப்புக்கு பயன் படுத்தி இருக்கிறார்

மீண்டும் மனிஷ் அரோரா என்பவர் சுவாமி நடராஜரர் படத்தை பெண்கள் ஆடை வடிவமைப்புக்கு பயன் படுத்தி இருக்கிறார் .தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் எப்படி நடை பெறுகின்றன .இவர் இந்தியர் என்றும் கூறபடுகிறது அவர் பெயரை பார்த்தால் இந்து என்று தான் தோன்றுகிறது பின் எப்படி .. இதை உங்களிடம் தெரியபடுத்துவது உங்கள் கருத்துகள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே 


கவிதை : இதயம் இல்லாதவனை காதலிக்க மாட்டேன் என்கிறாய் ..-பிரபாஷ்கரன்


உன் ..
முகவரிகளை 
பார்த்து 
என் முகவரிகளை 
தொலைத்தேன் 
இதயத்தை 
கேட்டாய் 
கொடுத்தேன் 
ஆனால்..
இப்போதோ 
இதயம் இல்லாதவனை 
காதலிக்க மாட்டேன் 
என்கிறாய் ..
இது என்ன 
நியாயம் 


Sunday, May 29, 2011

கவிதை : தூக்கம் - பிரபாஷ்கரன்


தூக்கம் 


மனதில் ஏற்படும் 
வலிகளுக்கு
சிறந்த மருந்து 
பல நேரங்களில்