நிறைய பேசுவோம்

Saturday, May 7, 2011

கல்லூரி கனவுகள் நாளை நிஜமாகும்

+2   ரிசல்ட் 

கல்லூரி கனவுகள் 
நாளை நிஜமாகும் 
நாள் ..
வெற்றி உன் 
வாசலை தட்டும்

எதிர்கால தூண்கள் 
நீங்கள் ..
என்ன மேலே 
படிக்க போகிறோம் 
என்ற ஆயிரம் 
கேள்விகள் 

எங்கே படிக்க 
போகிறோம் 
எப்படி படிக்கப் 
போகிறோம் 
என்பதை 
தீர்மானம் 
செய்யுங்கள் 
உங்களுக்கு 
பிடித்ததை படியுங்கள் 
அதையும் 
சிறந்த கல்லூரியில் 
படியுங்கள் 
எல்லோரும் 
வெற்றி பெறுங்கள் 
உங்களின் வெற்றி 
உங்கள் பெற்றோருக்கு 
பேரானந்தம்
வாழ்த்துக்கள் 


அன்னையர் தினம் - பிரபாஷ்கரன்





அன்னையர் தினம் 
அம்மா ..
என்ற சொல் 
ஓவ்வொரு 
வினாடியும் 
உச்சரிக்கப்படும் 
வேளையில்
அன்னையர் தினம் 
என்று ..
ஒரு தினம் 
தேவையில்லை 
இருந்த போதும்
இந்த தினத்தில் 
நான் ஆசைபடும் 
ஒன்று 
முதியோர் இல்லம்
இல்லாத ..
நிலை 
ஒன்று வேண்டும் 
இறைவா..
இது மட்டும் 
என் வேண்டுகோள் 
பிள்ளைகளுக்கு 
நல்ல மனம் 
கொடு 




Friday, May 6, 2011

எல்லா படிப்புக்கும் மரியாதையும் மதிப்பு உண்டு


தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகிறதே இது என்ன சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் வியாபாரமா தெரியவில்லை படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுகிறதா .இல்லை அனைத்து கல் லூரிகளும் சிறப்பான கல்வியை தருகிறதா . எத்தனை கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர் முதலில் தகுதியான சம்பளம் கொடுத்தால்தானே ஆசிரியர்களை பற்றி பேச முடியும் . பொறியியல் படிப்பு மோகத்தில் உங்கள் பணத்தை கொட்டி கல்லூரியில் சேர்த்து பின் வருந்தாதீர்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் எல்லா படிப்புக்கும் மரியாதையும்   மதிப்பு உண்டு ஆனால் எப்படி நாம் படிக்கிறோம் என்பதை பொருத்து இருக்கிறது . இந்த அரசாங்கமும் தனியார் பொறியியல் கல்லூரி பள்ளிகளை பற்றி கண்டு கொள்வதேயில்லை எல்லா அம்சங்களும் இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் முக்கியமான ஆசிரியர்களின் சம்பளம் பற்றி அவர்கள் கவலை படுவதே இல்லை அரசாங்கத்தில் தோட்ட வேலை பார்ப்பவர் கூட தனியார் கல்லூரி பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை விட கூட சம்பளம் வாங்குவார் இது என்ன நியாயமோ தெரியவில்லை இதற்கெலாம் எந்த கமிசனும் போடமாட்டார்களா .. இம் என்ன செய்வது எல்லாம் அவன் செயல் என்று போக வேண்டியதுதான் 

Thursday, May 5, 2011

நம்பிக்கையை விலை கொடுத்து வாங்க முடியவில்லை -பிரபாஷ்கரன்


அட்சய திருதியை 
கொண்டாடுகிறார்கள் 
தங்கம் வாங்கினால் 
பொருட்கள் சேருமாம்
நம்பிக்கை 
ஏழைகள் ..
எங்கே ..
வாங்குவது தங்கம்
நம்பிக்கையை 
விலை கொடுத்து 
வாங்க முடியவில்லை 
எங்களால் 
பேரில் தங்கத்தை 
வைத்து 
அழகு பார்க்கும் 
நாங்கள் 
தங்கத்தை 
எங்கே வாங்குவது 
நாளை 
திருமணத்திற்கு 
எத்தனை பவுன் 
போடுவீர்கள் 
என்பது போய் 
எத்தனை 
கிராம் தங்கம் 
போடுவீர்கள் 
என்ற கேள்வி 
வந்து விடும் 
பெண்களே ..
தங்கத்தின் மீதுள்ள 
மோகத்தை .
தவிருங்கள் 
அதனால் 
பயன் பெறப்போவது 
நீங்கள்தான் ..




Wednesday, May 4, 2011

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கபட்டு இருப்பதாக NDTV செய்தி தெரிவிக்கிறது .



நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கபட்டு இருப்பதாக NDTV  செய்தி தெரிவிக்கிறது . அவர் இரண்டு நாட்கள் ஆஸ்பத்ரியில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது . மூச்சு திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது .நலமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

நாம் ரஜினி குணமடைய பிரார்த்திப்போம் 

கவிதை : மௌனம் .. பிரபாஷ்கரன்



மௌனம் ..
பல நேரங்களில் 
பதில் 
ஆனால்..
உன் மௌனம் 
புரியாத புதிர் ..


Tuesday, May 3, 2011

கவிதை : கலெக்டர் சகாயம் -பிரபாஷ்கரன்



நீங்களும் 
கற்று தருகிறீர்கள் 
நேர்மை ..
உண்மை 
உழைப்பு 
எங்கள் 
இளைய சமுதாயத்திற்கு 
உங்கள் செயலாலும் 
துடிப்பான பேச்சாலும் 
நீங்களும் ஹீரோதான் 
எங்கள் ..
இளைய சமுதாயம் 
உங்கள் ரசிகர் 
ஆகட்டும் 






Monday, May 2, 2011

கவிதை :என்னையும் காதலித்தாய் என்று தெரிந்து கொண்டேன் -பிரபாஷ்கரன்

தோற்று போவது 
விளையாட்டல்ல
ஆனால்..
தோற்கடிப்பது 
உனக்கு ..
விளையாட்டு 
ஆம் ..
என்னை 
நேசித்தாய் 
என்று நினைத்தேன்
ஆனால் 
என்னையும் 
நேசித்தாய் என்று 
புரிந்து கொண்டேன்
என்னை 
காதலித்தாய் 
என்று நினைத்தேன்
என்னையும் 
காதலித்தாய் என்று 
தெரிந்து கொண்டேன் 
நீ ..
கொடுத்த பத்திரிக்கையில் 
முகவரியில் 
நான் முக வரிகளாய் 
இருந்த போது 





Sunday, May 1, 2011

நினைவுகள் என்றும் சுகமானவைதான் நீ .. இருக்கும் வரை - பிரபாஷ்கரன்


நினைவுகள் 
என்றும் 
நினைவுகள் 
நேற்றைய 
நினைவுகள் 
இன்றைய 
கனவுகள் 
ஆம் 
நினைவுகள் 
என்றும் 
சுகமானவை தான் 
நீ ..
இருக்கும் வரை 
கலைந்து போகின்றன 
கனவுகள் 
நாள் தோறும் 

ஆனால்..
கலையவில்லை 
உன் ..
நினைவுகள் 
தினந்தோறும்