நிறைய பேசுவோம்

Saturday, March 12, 2011

டீச்சர் குழந்தைக்கு முதலிடம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இது பல பள்ளிகளிலும் நடக்கிறது . பக்கத்துக்கு வீட்டு குழந்தை சோகமாக இருந்தது என்னவென்று கேட்டேன் . எனக்கு பள்ளியில் பாட்டு போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றது நீ நன்றாக பாடுவியே பின் ஏன் என்று கேட்டேன் . அப்போதுதான் புரிந்தது அவள் படிக்கும் பள்ளியில் என்ன நடக்கிறது என்று .

அவள் படிக்கும் பள்ளியில் அங்கு வேலை பார்க்கும் டீச்சர்  குழந்தைகளும் படிக்கின்றன குறிப்பிட்ட அந்த  குழந்தைகளுக்கு மட்டும் அனைத்து போட்டிகளிலும் பரிசு கொடுத்து விடுகின்றனர் மேலும் பள்ளி ஆண்டு விழாவிலும் நடன போட்டிகள் மற்றும் நடனத்தில்  ஆடும் போது முன்னால் நின்று ஆடுவதற்கு அந்த டீச்சர் குழந்தைகளுக்கு தான் வாய்ப்பு மற்ற குழந்தைகள் புறக்கணிக்க படுகிறார்கள் .

இது என்ன நியாயம் நான் எல்லா பள்ளிகளையும் சொல்லவில்லை .இருந்தாலும் இது போன்ற டீச்சர்கள்  திருந்துவார்களா உங்கள் குழந்தை பரிசு வாங்க வேண்டும் என்று இப்படி மற்ற குழந்தைகளை ஏமாற்றலாமா சிந்தியுங்கள் .



4 comments:

ramalingam said...

இது வாரிசு ஆட்சிக் காலம். கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், சமூக நலனின் அக்கறை இல்லாது பொது நலனில் அக்கறை காட்டும் இவர்களை என்ன செய்வது? பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் ஒன்று கூடி தலமை ஆசிரியரிடம் முறையிட்டால் பதிலேதும் கிடைக்குமா?

இன்று தான் உங்கள் வலைப் பதிவினை முதன் முதலில் தரிசித்தேன்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

எங்க போனாலும் அரசியல் தானா? என்ன உலகமடா இது?


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

பிரபாஷ்கரன் said...

நன்றி தங்களின் விமர்சனத்திற்கு