நிறைய பேசுவோம்

Friday, May 27, 2011

பணம் சம்பாதிப்பது எப்படி என்றால் கல்லூரி அல்லது பள்ளிக்கூடம் நடத்தினால் போதும் என்பதே உண்மை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று ஒரு முக்கியமான பதிவு எழுதுகிறேன் சென்ற பதிவில் பீர் பாட்டில் உடன் பெண் இருந்தால் அது சகஜம் என்ற அளவில் சில கருத்துகள் வந்தன .சரி நாம் கருத்துக்களை வரவேற்போம் .இன்றைய பதிவு சுயநிதி கல்லூரிகளை பற்றி இன்று சுயநிதி கல்லூரிகள் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளன .அதுவும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்றால் கல்லூரி அல்லது பள்ளிக்கூடம் நடத்தினால் போதும் என்பதே உண்மை நன்கொடை ஒவ்வொரு பாடபிரிவிற்கும் தனித்தனியே வாங்குகின்றனர் .அப்படி வாங்குவது என்பதும் கிடடத்தட்ட அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது . ஒரு அரசு கல்லூரியில் ஒரு ஆசிரியர் வாங்கும் சம்பளம் 34000    ஆனால் சுயநிதி கல்லூரியில் வாங்கும் சம்பளம் மிக குறைவு . ஆனால் ஒரு கல்லூரி ஆரம்பிக்கும் போது அரசு அளிப்பது போல் சம்பளம் வழங்க வேண்டும் . ஆனால் எந்த கல்லூரியும் அதை பின்பற்றுவது கிடையாது (சில கல்லூரிகள் இதற்கு விதி விலக்கு) அரசாங்கமும் இதை கண்டு கொள்வதில்லை . கிட்டத்தட்ட சுயநிதி கல்லூரிகள்   500   இக்கும் மேல் இருக்கும் தமிழ் நாட்டில், அவர்களுக்கு வரும் வருவாயில் 10  சதம் சம்பளத்திற்கு கொடுத்தால் கூட போதும் ஆனால் சுயநிதி கல்லூரிகள் நடத்துபவர்கள் ஏனோ அதை விரும்புவதில்லை . சமிபத்தில் ஒரு கல்வியாளரிடம் பேசியபோது அவர் ஜோக் போன்று சொன்னது  ஒரு phd  படித்த ஆசிரியர் கூட 3000  அல்லது 4000 ரூபாய்க்கு வேலைக்கு கிடைப்பார் ஆனால் தோட்ட வேலை செய்ய இந்த சம்பளத்திற்கு கிடைக்க மாட்டேன்கிறான் . எத்தனை வேதனை தரும் விஷயம் . நீ ஏன் நல்ல வேலைக்கு போக வேண்டியது தானே இந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கிறாய்  என்ற கேள்விகளும் வரலாம். அவர்கள் பாவம் ஒரே படிப்பு ஆனால் ஊதியத்தில் இத்தனை மாறுபாடு .தகுதி இல்லாத ஆசிரியர்கள் அதாவது விரிவுரையாளர் தேர்வு எழுதி பாஸ் செய்யாதவர்கள்  அல்லது phd  படித்தவர்களை மட்டும் வைத்து கல்லூரி நடத்த சொல்லுங்கள் பல கல்லூரிகள் காணமல் போய்விடும் .தகுதியை அவர்களும் வளர்த்து கொள்ளட்டும் இவர்களும் நல்ல சம்பளம் கொடுக்கட்டும் அரசாங்கம் இதை கண்டிப்பாக சரி செய்ய வேண்டும் பெரும்பான்மை ஆசிரியர்கள் சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் என்பதால் இதற்கு ஒரு தீர்வு கண்டால் நன்றாக இருக்கும் . நண்பர் ஒருவர் சொன்னது எங்கள் கல்லூரியில் ஆசிரியரை விட பஸ் டிரைவர்க்கு சம்பளம் அதிகம் காரணம் டிரைவர்கள் கிடைப்பதில்லை . என்ன நிலைமை பாருங்கள் படித்தவர்களுக்கு .

சரி சீரியஸ் ஆக ஒரு பதிவு போடலாம் என்று இந்த பதிவு, நண்பர் ஒருவர் இதை எழுதும்படி என்னை வற்புறுத்தி கேட்டதால் இதை எழுதினேன் . ஆனால் இதில் எந்த மாற்றமும் வர போவதில்லை என்பதே என் எண்ணம் . ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தால் அரசு கல்லூரி அல்லது அரசு பள்ளி ஆசிரியர் ஆக முயற்சி செய்யுங்கள் இல்லை என்றால் வேறு நல்ல வேலை பாருங்கள் என்பதே என் அட்வைஸ் .


3 comments:

நிரூபன் said...

அருமையான ஒரு விடயத்தை அலசியிருக்கிறீர்கள். இந்தச் சம்பளப் பாரபட்சத்திற்கு காரணம், அரசினது பாராமுகம் அல்லது மெத்தனப் போக்கே ஆகும்,
குறிப்பிட்ட ஒரு கல்வித் தராதரத்திற்கு மேல் தகமை உள்ள ஆசிரியர்களுக்கென்று சரியான சம்பளத்தை நிர்ணயிக்காமையும், ஊதியத்தைக் குறைத்து வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்காமையுமே ஆகும்.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரண்

சிந்தனை நன்று - பல ஆசிரியர்கள் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள். என்ன செய்வது . அரசு கண்காணிக்க வேண்டும் - அதுவும் இயலாத செயல். அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி வழி காண வேண்டும்.
நல் வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Ambika said...

தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கிற அரசு ஏன் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்க கூடாது?
அரசு ஊழியர்களுக்கு அள்ளித்தந்த அரசு தகுதி வாய்ந்த அனைவருக்கும் ஒரு particular scale fix பன்லாமே.