நிறைய பேசுவோம்

Saturday, June 11, 2011

Four இடியட்ஸ் கொளுத்தி போடு சர வெடிய

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
Four இடியட்ஸ் கொளுத்தி போடு சர வெடிய


திவ்யா,ரம்யா ,ரஞ்சனி ,பிரியா நால்வரும் மரத்தடியில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் .
அப்போது ரம்யா கேட்டாள்
"என்னடி சுகாசினி மேடம் ஓவரா ப்ளாக் எழுதுறவங்களை திட்டு திட்டுன்னு திட்றாங்கலாமில்ல  " என்றாள்

"அடிபோடி அவங்க ஏதோ உயிர் சங்கீதா நடிச்ச மாதிரி ஏதோ தெலுங்கு படத்தில் நடிக்கிற மாதிரி நியூஸ் போற்றுபாங்க போல யாரோ ப்ளாக் இல் உடனே திட்ட ஆரம்பிச்சுட்டாங்க " என்றாள் பிரியா 

" விடுடி  இவங்க டிவி இல எல்லார் படத்தையும் திட்டலாம் ப்ளாக் எழுதுறவங்க எதுவும் எழுத கூடாதா " என்றாள் ரஞ்சனி 

"ஆமாம்டி ப்ளாக்ல தான் நாம் இஷ்டத்துக்கு நாம மனசில் பட்டதை எழுதலாம் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு நம்ம காலேஜ் பசங்க பொண்ணுங்க கிசு கிசு எல்லாம் எழுத போறேன் என்றாள் " திவ்யா 

"இம் இம் கொளுத்தி போடு சர வெடிய" மற்ற மூவரும் சேர்ந்து கத்தினர் .

"இம் என்னடி மதியம் கிளாஸ் "என்றாள் ரம்யா .

"இம் நம் மூட்டை பூச்சி c ++ எடுக்க போகுது" என்றாள் மேடத்தின் பட்ட பெயரை சொல்லி .

"ஏண்டி காலேஜ் இல் சமசீர் கல்வி கிடையாதா பாரேன் கோர்ட் தீர்ப்பால் ஸ்கூல் திறக்க இன்னும் நாளாகுமாம் வாண்டூஸ் எல்லாம் ஜாலியா இருக்குங்க . பக்கத்து வீட்டு குட்டி பொண்ணு என்னக்கா காலேஜ்ஆ போங்க போங்க படிங்கன்னு சொல்லுது என்று வருத்தபட்டா." பிரியா 

"ஆமாம் முதல்வர் சுப்ரீம் கோர்ட் போவாங்க போலிருக்கு எப்படியோ ஒரு முடிவு தெரிஞ்சா சரி" எனும் வேளையில் மதிய வகுப்பு முதல் மணி அடித்தது ..

"டேய் வாங்கடி போவோம் அப்புறம் மூட்டை பூச்சி கடி தாங்காது நாளை நிறைய பேசலாம்" என்று திவ்யா சொல்ல அனைவரும் கிளம்பினர் 

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

Four இடியட்ஸ் கொளுத்தி போடு சர வெடிய"//

Nice..

பிரபாஷ்கரன் said...

/
இராஜராஜேஸ்வரி said...
Four இடியட்ஸ் கொளுத்தி போடு சர வெடிய"//

Nice../

நன்றி

Ambika said...

4 இடியட்ஸ்ல எல்லாருமே பெண்கள் தானா பாஸ்?!

தமிழ்வாசி - Prakash said...

ம்ம்ம்ம்.... நான்கு முட்டாள்கள் சரவெடி தான்