நிறைய பேசுவோம்

Friday, June 17, 2011

என்ன விதி என்ன வாழ்க்கை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று ப்ளாக் எழுத நினைத்த போது சோக செய்திகள் இன்று கேட்கும்படி ஆனதால் என் மனம் மிகவும் சோர்வு அடைந்தது . வீட்டிற்கு அருகில் திருமணம் ஆகிய ஒன்றரை மாதத்தில் மாப்ளை பயன் மூளை காய்ச்சலால் சென்னையில் மரணம் அடைந்து மாலை கொண்டு வந்தனர் உயிரற்ற உடலை இன்ஜினியரிங் படித்து சென்னையில் வேலை பார்த்தவன் இப்படி திடீர் மரணம் இதை கேட்டபோது எனக்கு ஏனோ கடவுள் மேல் கோபம் வந்தது விதி படிதான் எல்லாம் நடக்கும் என்றால் ஏன் நாம் முயற்சி செய்யவேண்டும் எதற்கும் வாழ்கையில் என்ன நடந்தாலும் சரி என்று நாம் போகலாமே இதெல்லாம் என்ன கொடுமை சில விசயங்களை யோசிக்கும் போது விடை கிடைப்பதில்லை எதை நோக்கி போகிறோம் நமக்கு இந்த வாழ்கையில் என்ன கிடைக்கிறது ஒன்றும் புரியவில்லை .ஏதோ நான் உளறியது போல் கூட தோன்றலாம். ஆனால் திருமணம் ஆகி ஒன்றரை மாதத்தில் இறந்த அந்த பையனின் மரணம் என்னை பாதித்தது ஏதோ இங்கு அதை எழுதிய போது ஒரு சின்ன ரீலீப் கிடைத்ததாக உணர்கிறேன் 


5 comments:

மகேந்திரன் said...

அன்பு நண்பரே
எதிர்பாராமல் நடப்பதுதான் வாழ்க்கை.
நாம் நினைத்திராத சம்பவங்கள் நடைஎரும்போதுதான்
நாம் வாழ்ந்துகொடிருக்கிறோம் என்ற எண்ணமே நமக்கு வருகிறது.

நீங்கள் கூறியது நிஜமே, சில சம்பவங்களை நாம் நேரில் பார்க்கும்போது வாழ்வின் மீது வெறுப்பு வரத்தான் செய்கிறது.

சென்ற மாதம் என்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவரின் தந்தையார்
இறந்துவிட்டதாக தொலைபேசி வர, அவர் மனமுடைந்து விட்டார். பின்னர் ஒருவழியாக பணியிடத்திலிருந்து ஊருக்கு சென்றுவிட்டார்.
அவரின் மனக்குமுறலை பார்த்தபோது அவரின் வலி கட்டுக்கடங்காதது என தெரிந்தது. ஆனாலும் நமக்கு அது ஒரு செய்தி தானே??!! அடுத்த நிமிடம் நாங்கள் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

வாழும் நாட்களில்
சாகும் நாள் தெரிந்துவிட்டால்
இவ்வாழ்க்கை ஒரு சாக்காடே...........

என்றும் அன்புடன்
அன்பன்
மகேந்திரன்


http://ilavenirkaalam.blogspot.com/

பிரபாஷ்கரன் said...

/ மகேந்திரன் said.../

கண்டிப்பாக தங்கள் வார்த்தை முற்றிலும் உண்மை யாதர்தமும் கூட .. நினைத்ததெலாம் நடப்பதுமில்லை நடந்ததெல்லாம் நாம் நினைத்ததும் இல்லை நன்றி நண்பரே

மதுரை சரவணன் said...

vaalvil ethuvume thittam ittu nadappathillai.... aakave vaalvai ninaiththu payam vendaam.. veruppum vendaam.. ellaam vithaippadi thaan nadakkum....

நிரூபன் said...

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு தான், நாங்கள் தான் இதனை உணர்ந்து நம்பிக்கையுடன் முன் நோக்கிச் செல்லப் பழகிக் கொள்ள வேண்டும்,
கவலையை விடுங்கள். உங்களில் கருமங்களில் கண்ணாக இருங்கள். நல்லதே நடக்கும்.

Ambika Krishnan said...

அடுத்தவன் துன்பத்தை கண்டு மனம் வருந்துபவன் தான் உண்மையான மனிதன். நீங்களும் அப்படிதான் வருத்தப் படுகிறீர்கள். But u should remember 1 thing boss "Everything is PRE-WRITTEN and nothing can be RE-WRITTEN. ALL THAT HAPPENS IS GOD'S WILL."