நிறைய பேசுவோம்

Monday, June 13, 2011

நம்புவோர் நம்புங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நம்புவோர் நம்புங்கள் 


சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு எட்டு வயது பையன் இரண்டாவது மாடியில் அதாவது மொட்டை மாடியில் நாயுடன் விளையாடும் போது தவறி கீழே விழுந்துட்டான் ஒரு மரத்தின் மேல் மோதி விழுந்தான் அப்போது பவர் கட் போய் பார்த்த போது பேச்சு மூச்சில்லை அவசரமாக ஆஸ்பத்ரிக்கு கொண்டு சென்றுள்ளர்கள் என்ன ஆச்சரியம் பயத்தில்தான் அப்படி இருக்கிறான் .அவனுக்கு அடி ஒன்றும் படவில்லை என்றும் டாக்டர் சொல்லியுள்ளார். பெற்றோர் சொன்னது பாண்டி கோயிலுக்கு மொட்டை எடுக்க வேண்டி இருந்தோம் அந்த பாண்டி தான் என் பையனை காப்பற்றியது என்று . எனக்கும் இதை கேட்டபோது ஆச்சரியம் நேற்று அந்த வீட்டில் பந்தல் போட்டு காது குத்தும்  மொட்டை போடும் விழா வும் சிறப்பாக நடை பெற்றது .
எனக்கே ஆச்சர்யம் அத்துணை உயரத்தில் இருந்து விழுந்தும் அந்த பாண்டி தான் காப்பற்றிஇருக்கிகிறது போல் என்று நினைத்து கொண்டேன் . இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் சில விஷயங்கள் அப்படிதான் நடக்கும் போல் .

இந்த சம்பவம் நடந்த போது என் அப்பா இறந்தது தான் எனக்கு நினைவிற்கு வந்தது அவர் இறக்கும் நாள் அன்று என் வீட்டில் திடீர் என்று மின்சார மீட்டர் வெடித்தது .எனக்கு எதோ உளுணர்வு கூறியது ஏதோ நடக்க போகிறது என்று ஆனால் அது என் அப்பாவின் மரணம் என்று அப்போது தெரிய வில்லை அன்று கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்  வேளையில் என் அப்பாவின் பக்கத்துக்கு வீட்டுகாரர் என் தோளை தொட்டு என் அப்பாவின் மரண செய்தியை சொன்னார் . என் அப்பாவிற்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை இது திடீரென்று நிகழ்ந்த மாரடைப்பு . இதற்கு பிறகு நிகழ்ந்த சில விஷயங்கள் தான் ஆச்சர்யம் . அவர் ஒட்டிக்கொண்டு இருந்த மொபெட் யை நான் ஒட்டி செல்லும் போதெல்லாம் திடீரெண்டு நான் போகும் வழியில் உள்ள ஒரு புளிய மரத்தை சென்றடைந்தவுடன் வண்டி நின்று விடும் இறங்கி தள்ளி கொண்டு போய் மரத்தை தாண்டி ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகும் இது தொடர்கதை அப்புறம் அந்த ரூட்டை மாற்றி செல்ல ஆரம்பித்தேன் 

பலவருடங்கள் கழித்து நானும் எனது ஊரான திருச்சியை விட்டு மதுரை வந்து விட்டேன் ..

இந்த வருடம் என் அப்பாவின் திதிக்காக படையல் மற்றும் அய்யர் இக்கு கொடுக்க வேண்டிய சாமான்கள் வாங்கி கொண்டு பெரியார் பஸ் நிலையம் பாலம் ஏறினேன் என் மனைவியோடு வண்டியில் . வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை என் மனைவியிடம் திட்டு வண்டியை சரியான கண்டிஷன் இல் வைக்க விலையென்று. இப்போது நான் வைத்திருப்பது வேற வண்டி . சரி என்று உருட்டி கொண்டே வந்தேன் இடையில் பல இடங்களில் ஸ்டார்ட் செய்தும் ஸ்டார்ட் ஆக வில்லை வீட்டிற்கு அருகில் வந்து சும்மா பாப்போம் என்று ஸ்டார்ட் செய்தேன் வண்டி ஸ்டார்ட் சூப்பர்ஆக ஆனது . எனக்கு ஆச்சரியம் ..

அப்போது என் மனதிற்கு தோன்றியது என் அப்பா வந்திருக்கிறார் நாளை திதி அதை சிம்பாலிக்காக காட்டுகிறார் என்னுடன் இருப்பது போல் என்றே ஒரு பிரமை தோன்றியது .

இதை பலர் ஏற்று கொள்ளாமல் போகலாம் ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை அவர் ஏதோ கடவுள் போல் நம் பின்னால் இருக்கிறார் என்று .இதை நான் அதற்கு மேல் ஆராய்ச்சி செயவில்லை விட்டுட்டேன் . சில நேரங்களில் சில விஷயங்கள் அபூர்வமாக இருக்கலாம் என்பதே உண்மை 

5 comments:

நிரூபன் said...

கடவுள் இருக்கிறார், இல்லை எனும் விவாதங்களுக்கப்பால் பார்க்கையில் எமக்குப் பின்னால் ஏதோ ஒரு சக்தி. எம்மை விடவும் வலிமையான் ஒன்று தான் எம்மையெல்லாம் இயக்குகிறது என்பது மட்டும் நிஜம்!

நிரூபன் said...

எட்டு வயதுப் பையன் பற்றிய விடயம் ஆச்சரியாமாக இருக்கிறது. கூடவே உங்கள் தந்தையின் மரணம் பற்றிய செய்தியும்....
ஆச்சரியத்தைத் தருகிறது சகோ.

Rathnavel said...

நல்ல பதிவு.
சில விஷயங்கள் நமக்கு புரிவதில்லை. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

Ambika said...

உண்மை தான் பாஸ் என் தந்தை இறப்பதற்கு முன்தினம் நள்ளிரவில் சங்கு ஊதுவது போன்ற ஒழி கேட்டு நான் இரவெல்லாம் நடுங்கியபடி என் சித்தியின் அரவணைப்பில் படுத்திருந்தேன். சில அமானுஷ்ய விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கத்தான் செய்கிறது. அதை பலரும் கவனிப்பதில்லை.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...