நிறைய பேசுவோம்

Sunday, February 20, 2011

முகம் சுளிக்க வைத்த காதலர்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று விடுமுறை ஆதலால் குடும்பத்துடன் வெளியில் செல்ல திட்டமிட்டு மதுரையில் புகழ் பெற்ற நாயக்கர் மஹால் சென்றோம் . அங்கு நாங்கள் கண்ட காட்சிகள்  முகம் சுளிக்க வைத்தன காரணம் ஜோடி ஜோடியாக காதலர்கள் 
முத்தமிட்டுகொண்டும் சில்மிஷம் செய்துகொண்டும் இருந்தனர் அவர்கள் யாரை பற்றியும் பொருட்டாக கருதவில்லை நீங்கள் கேட்கலாம் அவர்களை ஏன் நீங்கள் பார்க்கவேண்டும் என்று .. நியாயமான கேள்விதான் ஆனால் அவர்கள்  எந்த    மறைவிடத்திலும்   இந்த     செயலை   செய்யவில்லை .. 
எல்லோரும் பார்க்கும் இடத்தில்தான் இந்த செயல்கள் .. சரி என்று பூங்காவிற்கு சென்றோம் அங்கும் இதே காட்சிகள்தான் .

இங்கு நான் காதலர்களை குறை சொல்லவில்லை காரணம் அவர்களுக்கு சந்திக்கும் இடம் இல்லை ..

அப்போதுதான் எனக்கு ஒன்று தோன்றியது எல்லா ஊர்களிலும் காதலர் பூங்கா என்று ஒன்று அமைத்து கொடுத்துவிட்டால் அங்கு அவர்கள் மட்டும் சந்தித்து கொள்வார்கள்  காதலர்களை தவிர வேறு யாருக்கும் அங்கு அனுமதி கொடுக்க கூடாது . ஏனெனில் மற்ற இடங்களுக்கு பொதுமக்கள் குடுமபத்துடன் குழந்தைகளை நிம் மதியாக கூட்டி சென்று வரலாம் இல்லையா ..

இது சரியா என்பதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .. நன்றி


2 comments:

Unknown said...

காதல்,காமம் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காதலர்கள் வரம்பு மீறுவதில்லை. ம்ற்றவர்கள் அடுத்தவரை உசுப்பேத்தாமல்( நாலு பசங்க பார்த்தால்) ஏதாவது லாட்ஜில் தங்களுடைய தாகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

பிரபாஷ்கரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி