இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கணவர் "செக்ஸ் டார்ச்சர்': குடும்பமே தற்கொலை என்ற இந்த செய்தியை பார்த்தவுடன் மனது பதை பதைத்தது இது நம் தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது இது இன்றைய பத்திரிக்கை செய்தி . கணவன் குடித்து விட்டு வந்து இவ் வாறு கொடுமை படித்தியதால் அந்த பெண் தாய்,தந்தை ஆகியோர் விஷம் அருந்தி தங்கள் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர் இது எவ்வளவு கொடுமையான விஷயம் கணவனே செக்ஸ் டார்ச்சர் கொடுத்தால் அந்த பெண் என்ன செய்வாள் உலகம் அறிவியல் வளர்ச்சி எவ்வளவு அடைந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்துதான் வருகின்றன ,இங்கும் காவல் நிலையத்தில் கவுன்சிலிங் நடந்திருக்கிறது அதன் பிறகே இந்த நிகழ்வு ஒரு வேளை மனோதத்துவ நிபுணர் மூலம் கவுன்சிலிங் நடந்திருத்தால் முடிவு மாறியிருக்கலாம் தெரியவில்லை நடந்த பிறகு அப்படி இருக்கலாம் என்று காரணம் சொல்வது சரியில்லை இருந்தாலும் இது மாதிரியான நிகழ்வுகள் நடக்காமலிருக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம் காலை பேப்பரில் இந்த செய்தியை பார்த்தவுடன் மனது வலித்தது .
உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இதை வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறேன்
செய்தியில் நான் படித்த சம்பந்த பட்ட நபர்களின் பெயர்களை நான் இங்கு வெளியிடவில்லை என்பதை விட வெளியிட விரும்பவில்லை என்பதே உண்மை
1 comment:
சோகமான நிகழ்வு. இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment