நிறைய பேசுவோம்

Tuesday, May 17, 2011

கவிதை :பட்டம் விட மாஞ்ச கயிறு தேடினேன் -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




பட்டம்  விட 
மாஞ்சா   கயிறு 
தேடினேன் 
நேற்று ..
அப்பா அடுப்பில் 
போட்ட பம்பரத்தை 
தேடி பார்த்தேன்
மறைத்து வைத்த 
கில்லியயும் 
கோலி குண்டையும் 
தேடும் வேளையில்
கலைந்து..
போனது தூக்கம் 
எதிரே ..
பையனும் பொண்ணும
கம்ப்யூட்டர் முன் 
கேம்ஸ் விளையாடி 
கொண்டிருந்தனர் 
தூக்கம் ஏனோ 
மீண்டும் வரவில்லை   



10 comments:

பனித்துளி சங்கர் said...

எவலவுதான் புதுமைகள் வந்து புகுந்துகொன்டாலும் இதுபோன்ற எதார்த்த விளையாட்டுகளுக்கு மனம் பரிபோகிவிடும் என்பதை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி

ரிஷபன் said...

இந்தக் கவிதை வாசிக்கும் நானும் வெளியுலகம் தொலைத்து கணினி முன்!
இழப்புகள் அதிகம்தான் நண்பரே

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை அருமை நண்பரே...

நிரூபன் said...

இயந்திர உலகத்தின் நடை முறை வாழ்க்கையோடு, எங்களின் அந்தக் காலப் பிஞ்சு வயசு ஞாபகங்களை அசை போட்டிருக்கிறீர்கள் சகோ.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன் - காலம் மாற மாற , அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, இவை எல்லாம் தவிர்க்க இயாலாது. நாம் பால்ய வயதில் ஆடியவையை எல்லாம் அசை போட்டு, ஆனந்தித்து விட்டு, பிள்ளகளுக்குக் கம்பெனி கொடுப்பது நல்லது - நட்புடன் சீனா

பிரபாஷ்கரன் said...

/ ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
எவலவுதான் புதுமைகள் வந்து புகுந்துகொன்டாலும் இதுபோன்ற எதார்த்த விளையாட்டுகளுக்கு மனம் பரிபோகிவிடும் என்பதை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி
/
கண்டிப்பாக அது மனதில் பதிந்த ஒன்று நன்றி

பிரபாஷ்கரன் said...

/ரிஷபன் said...
இந்தக் கவிதை வாசிக்கும் நானும் வெளியுலகம் தொலைத்து கணினி முன்!
இழப்புகள் அதிகம்தான் நண்பரே
/

கணினி பல விஷயங்கள் நன்மை செய்தாலும் இது போன்ற விசயங்களில் ..

பிரபாஷ்கரன் said...

/தமிழ்வாசி - Prakash said...
கவிதை அருமை நண்பரே.../

நன்றி

பிரபாஷ்கரன் said...

/cheena (சீனா) said...
அன்பின் பிரபாஷ்கரன் - காலம் மாற மாற , அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட, இவை எல்லாம் தவிர்க்க இயாலாது. நாம் பால்ய வயதில் ஆடியவையை எல்லாம் அசை போட்டு, ஆனந்தித்து விட்டு, பிள்ளகளுக்குக் கம்பெனி கொடுப்பது நல்லது - நட்புடன் சீனா/

உண்மைதான் எற்றுகொள்ளதான் வேண்டும் நன்றி

மதுரை சரவணன் said...

கால மாற்றத்தில் அத்தனையும் மறந்து போகிவிட்டது... வாழ்த்துக்கள்