இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது பல நன்மைகள் ஒத்து கொள்வோம் . ஆனால் மொபைல் போன்களால் ஏற்படும் சில தீமைகளில் ஒன்றாக நடந்த சம்பவம் ஒன்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .நண்பரின் பையன் கல்லூரியில் இறுதி வருடம் படித்து வந்தான் .இரவு படுத்து உறங்கும் வேளையில் மொபைல் போன் விர்.. விர்.. என்று இரவு 2 மணிக்கு சத்தம் எழுப்பி இருக்கிறது .அப்போது அவன் அருகில் படித்திருந்த அவன் அம்மா எடுத்து பேசியுள்ளார் எதிர்முனையில் பேசியது இளம் பெண் அவர்களின் மகன் பெயரை சொல்லி கொஞ்சல் பேச்சு சினுங்கல் பேச்சுக்கள் அதிர்ந்து போனார் அம்மா காரணம் தன் ஒரே மகன் காதலிக்கிறான்
என்ன செய்வது பதட்டத்துடன் மகனை எழுப்பி பேசியுள்ளார் . ஆனால் அம்மாவுக்கு தெரிந்து விட்டது என்ற ஆதங்கத்தில் அம்மாவை கண்டபடி திட்டியிருக்கிறான் . மேலும் அம்மாவிடம் சரிவர அன்றிலிருந்து பேசுவதுமில்லை அந்த அம்மா நிலைகுலைந்து போய்விட்டார் .இப்போது அந்த பெண்ணை பற்றி நினைத்து பாருங்கள் அந்த பெண் கவலை படமாட்டார் ஆனால் அவரின் பெற்றோர்கள் ..?
இதற்கு யார் காரணம் இன்றும் இரவில் போர்வைக்குள் மொபைல் போனை வைத்துக்கொண்டு காதல் வளர்க்கிறேன் என்ற பெயரில் குட்டி சுவராகி போகிறார்களே இவர்களை நாம் எப்படி திருத்துவது நீங்களும் சிந்தியுங்கள் .
என் கருத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி
3 comments:
காலத்தின் மாற்றங்கள் இவை. அந்த அம்மாவின் தப்பு என்னவென்றால் வயதுக்கு வந்த மகனைத் தனக்குப் பக்கத்தில் படுக்க வைத்தது. இரண்டாவது தப்பு மகனின் போனை எடுத்துப் பேசியது.இந்த மாதிரி அம்மாக்கள்தான் கொடுமைக்கார மாமியார்கள் ஆவார்கள்.
தொழில் நுட்பம் முன்னேரினாலும் இந்த மாதிரி தொல்லைகள் அதிகம்!!நாம் தான் உஷாராக இருக்கனும் ங்க.
Please remove word verfication!
Post a Comment