நிறைய பேசுவோம்

Wednesday, February 23, 2011

மனதை காயப்படுத்தாதீர்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது.

நான் சந்தித்த ஒரு சிலர் தான் மட்டுமே புத்திசாலி என்று நினைத்து கொள்கிறார்கள் நினைக்கட்டும் தப்பில்லை ஆனால் மற்றவர்கள் அனைவரும் புத்திசாலிகள் இல்லை என்று நினைகின்றனர் (மற்றவர்கள் முட்டாள் ) .அதோடு இல்லாமல் அடுத்தவர்களை மட்டம் தட்டுவது மற்றவர்கள் எந்த செயல் செய்தாலும் அதை மட்டம் தட்டி பேசுவது .இந்த மனப்பான்மை இருப்பவர்களோடு நாம் பழகுவதுதான் தவறு என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  சொல்லுங்கள் மகிழ்ச்சி அடைவேன் .

இன்னும் சொல்லபோனால் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட போட்டிகளில் நம்  கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேருக்கு பரிசு கிடைக்கிறது . ஆனால்   நம் அருகில் இருக்கும் நண்பருக்கோ பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுக்கோ  சிறிய பரிசு கிடைத்தால் கூட அதை பாரட்டும் மனப்பான்மை நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை இந்த நிலைமை மாறவேண்டும் என்பதே என் ஆசை 

முக்கியமாக ஆணவமும்,  தான் என்ற அகம்பாவமும்   என்றுமே நமக்கு நன்மை செய்யாது இதை புரிந்து கொள்ளவேண்டியது  காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை 

இது நான் சமீபத்தில் சந்தித்த சில நபர்களினால் ஏற்பட்டது இதை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் எனக்கு ஒரு மனதிருப்தி ..இதற்கு ஒரு தீர்வு சொன்னீர்களானால் மகிழ்வேன் . நன்றி 


2 comments:

ப.கந்தசாமி said...

பலருக்கு இப்படி ஒரு மனப்பான்மை இருப்பது உண்மைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நாம் பலதரப்பட்ட மக்களுடனும் பழக வேண்டியுள்ளது. இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

Ambika Krishnan said...

ipdi patta alungalala nanum neraya kasta patruken. wat 2 do? piravi gunam serupala adichalum maradhunu solvangalla apdi dhan indha type of persons thirundhave matanga.