நிறைய பேசுவோம்

Saturday, April 23, 2011

பெற்றோர்களுக்கோ கவலை ஆரம்பமாகி விட்டது -பிரபாஷ்கரன்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கோடை விடுமுறை விட்டாச்சு குழந்தைகளுக்கு ஜாலி ஆனால் பெற்றோர்களுக்கோ கவலை ஆரம்பமாகிவிடும் ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் யூனிபோர்ம் வாங்க வேண்டும் என்று ஆயிரம் கவலைகள் சமத்துவ கல்வி வருகிறதாம் சமத்துவ கல்வி கட்டணம் வருமா தெரியவில்லை . அரசு பள்ளிகளில் தரம் இல்லையே என்று தனியார் பள்ளிகள் சென்றால் அங்கு கல்வி கட்டணம் அதிகமாக உள்ளது . ஒரு விஷயம் பார்த்தீர்களானால் அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் தரம் (சம்பளம் ) வானளவு உயர்துள்ளது ஆனால் மாணவர்களின் தரம் தான் உயரவில்லை ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் தரம் (அதிக கட்டணம் கட்டினால்) உயர்துள்ளது ஆனால் அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களின் தரம் உயரவில்லை . ஏன் இந்த பாகுபாடு இரு இடங்களில் வேலை பார்பவர்களுக்கும் ஒரே கல்வி தகுதிதான் ஆனால் சம்பளத்தில் எத்துனை வேறுபாடு .

கொண்டு வாருங்கள் சமத்துவ கல்வி ,சமத்துவ கல்வி கட்டணம் அதோடு ஆசிரியர்களுக்கு சமத்துவ ஊதியம் .

இதை யார் செய்வது அதற்கும் ஒரு கமிசன் வைக்க வேண்டுமா .கமிசன் வைத்தால்தான் கமிசன் கிடைக்குமா தெரியவில்லை 



8 comments:

சிவகுமார் said...

//கொண்டு வாருங்கள் சமத்துவ கல்வி ,சமத்துவ கல்வி கட்டணம் அதோடு ஆசிரியர்களுக்கு சமத்துவ ஊதியம்//

நல்ல கோரிக்கைதான்! ஆனால் யார் காதில் வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்!

cheena (சீனா) said...

அன்பின் பிரபாஷ்கரன்

அருமையான சிந்தனை - பூனைக்கு யார் மணி கட்டுவது ? சங்கினை ஊதிக் கொண்டே இருப்போம் - என்றாவது நிறைவேறும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Mahan.Thamesh said...

கொண்டு வாருங்கள் சமத்துவ கல்வி ,சமத்துவ கல்வி கட்டணம் அதோடு ஆசிரியர்களுக்கு சமத்துவ ஊதியம் .
நல்ல கேள்வி அனால் சாத்தியப்படுமா ?
எனது வலைத்தளத்தில்
YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய
http://mahaa-mahan.blogspot.com/

பிரபாஷ்கரன் said...

சிவகுமார் said...
//கொண்டு வாருங்கள் சமத்துவ கல்வி ,சமத்துவ கல்வி கட்டணம் அதோடு ஆசிரியர்களுக்கு சமத்துவ ஊதியம்//

நல்ல கோரிக்கைதான்! ஆனால் யார் காதில் வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்!/

நாம் சொல்வதை சொல்வோம்

பிரபாஷ்கரன் said...

/ cheena (சீனா) said...
அன்பின் பிரபாஷ்கரன்

அருமையான சிந்தனை - பூனைக்கு யார் மணி கட்டுவது ? சங்கினை ஊதிக் கொண்டே இருப்போம் - என்றாவது நிறைவேறும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/
பதில் நீங்களே சொல்லிவிட்டீர்கள் நன்றி

பிரபாஷ்கரன் said...

/Mahan.Thamesh said...
கொண்டு வாருங்கள் சமத்துவ கல்வி ,சமத்துவ கல்வி கட்டணம் அதோடு ஆசிரியர்களுக்கு சமத்துவ ஊதியம் .
நல்ல கேள்வி அனால் சாத்தியப்படுமா ?
எனது வலைத்தளத்தில்
YOU TUBE தளத்தில் இருந்து ஆடியோ வினை மட்டும் தரவிறக்கம் செய்ய
http://mahaa-mahan.blogspot.com//
சாத்தியப் படவேண்டும் என்பதே நம் ஆசை

சாகம்பரி said...

நான் ஒரு ஆசிரியைதான். அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு மானியமாகதான் கல்வி கட்டணம். ஆசிரியர்களுக்கு நாம் கட்டும் வரிப் பணம்தான் சம்பளம்.. தனியார் பள்ளி நிறுவனகளில் ஆசிரியர்களின் வேலை நேரத்தில் கூட சமத்துவம் செய்ய முடியாது, அரசாங்கத்தால். மேலும் சமத்துவ கல்வியை பெற்றோரே விரும்பமாட்டார்கள். கூடுதல் செலவு செய்தால் பிள்ளைகளுக்கு special careனால் பெரிய எதிர்காலம் கிட்டும் என்று நம்புகிறார்கள். Thak you.

பிரபாஷ்கரன் said...

/தனியார் பள்ளி நிறுவனகளில் ஆசிரியர்களின் வேலை நேரத்தில் கூட சமத்துவம் செய்ய முடியாது, அரசாங்கத்தால்/

இந்த வரிகள் மூலம் சரியாக சொன்னிர்கள்