நிறைய பேசுவோம்

Sunday, April 17, 2011

மதுரையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மதுரை:மதுரையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி சித்திரைசெல்வியை (18), கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். அரிவாள் வெட்டில் காயமுற்ற மாணவியின் தாயார் மற்றும் சகோதரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வில்லாபுரம் சொக்கலிங்கம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (40). இவர், திருப்பூரில் உள்ளார். இவரது மனைவி லதா மங்கேஸ்வரி (39). இவர்களது மகள் கயல்விழி (எ) காயத்திரிதேவி (21). வில்லாபுரம் கணக்குப் பிள்ளை தெருவை சேர்ந்தவர் வக்கீல் முத்துராமலிங்கம் (40). இவர், அப்பகுதியில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.முத்துராமலிங்கத்திற்கும், லதாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களுக்கு பிறந்தவர் சித்திரைசெல்வி (18). இவர், இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.இ., படித்து வந்தார். இவரது பெயரில் முத்துராமலிங்கம் வீடு ஒன்றை எழுதி கொடுக்க திட்டமிட்டார். இதற்கு நாகஜோதி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.லதா, கயல்விழி, சித்திரைசெல்வி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். 


நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மர்ம நபர்கள் மூவர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தூங்கிய சித்திரைசெல்வியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். லதா, கயல்விழியை வெட்டி விட்டு தப்பினர். படுகாயமுற்ற லதா, கயல்விழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சித்திரைசெல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கயல்விழி புகார்படி, நாகஜோதி உட்பட மூவரை கீரைத்துறை போலீசார் தேடிவருகின்றனர். கொலை செய்து விட்டு 
தப்பியோடிய போது தெருநாய் ஒன்று, கொலையாளிகளை விரட்டியது. ஆத்திரமடைந்த கொலையாளிகள் நாயை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.


மேலே காணும் செய்தி தினமலரில் வந்தது முதலில் நன்றி தினமலருக்கு 

இந்த செய்தியில் வெட்டப்பட்ட அந்த பெண் என்ன பாவம் செய்தாள் . பெற்றவர்கள்  செய்த தவறுக்கு அந்த பெண் படு கொலை செய்யபட்டுள்ளார்  உறவு முறைகள் தவறாக ஏற்படும்போது இப்படி பட்ட மோசமான சம்பவங்கள் நிகழ்வது துரதிர்ஷ்டவசமானது .ஒரு பெண் கூலிப்படை வைத்து கொலை செய்வதை நினைக்கும் போது நம் சமூகம் எங்கே போய் கொண்டிருகிறது என்ற கவலை நம் முன் வருகிறது . இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம் . வேதனை இதற்கு யாரை குறை சொல்வது இந்த செய்தியை படித்தவுடன் மனம் வேதனை பட்டது எனவே உங்களோடு பகிர்ந்து கொண்டேன் .இது போன்ற நிகழ்வுகளுக்கு தீர்வுதான் என்ன ..?

6 comments:

தமிழ்வாசி - Prakash said...

வேதனை தான்.. என்ன செய்ய....தகாத உறவுக்கு பலியானது யாரோ....

நிரூபன் said...

கள்ளக் காதல் எம் தமிழ் சமூகத்தை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதற்கு இச் சம்பவம் ஒரு நல்ல உதாரணம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வு தான் பரிதாபம்.

Ambika said...

Naatula NALLA Kaadhal ellam sethu poidudhu KALLA kaadhal ellam saagadikudhu. ena kodumai boss idhu..

Prabashkaran Welcomes said...

/வேதனை தான்.. என்ன செய்ய....தகாத உறவுக்கு பலியானது யாரோ..../

இந்த நிலைமை மாற வேண்டும்

Prabashkaran Welcomes said...

நிரூபன் said...
/கள்ளக் காதல் எம் தமிழ் சமூகத்தை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதற்கு இச் சம்பவம் ஒரு நல்ல உதாரணம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வு தான் பரிதாபம்./

சரியாக சொன்னீர்கள்

Prabashkaran Welcomes said...

Ambika said...
/Naatula NALLA Kaadhal ellam sethu poidudhu KALLA kaadhal ellam saagadikudhu. ena kodumai boss idhu../

என்ன அருமையான வார்த்தைகள் உண்மையில் இரண்டே வரிகளில் பெரிய விசயத்தை சொல்லி விட்டீர்கள்